For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்துல நீங்க ஏன் கட்டாயம் மீன் சாப்பிடணும்? அப்படி சாப்பிடலனா என்னவாகும் தெரியுமா?

மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமது நுரையீரலுக்கு காற்றோட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. எனவே உங்கள் நுரையீரலை தொற்றுநோயிலிருந்து இது பாதுகாக்கிறது. மேலும் குளிர்காலத்தில் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கிறது

|

குளிர்காலம் என்றாலே, பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். குளிர்காலத்தில் குளிர் நம்மை வாட்டி வதைக்கும். இவை மட்டுமல்லாது குளிர்காலம் நமக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குளிர்காலம் நெருங்க நெருங்க நமது நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் விரைவில் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. குளிர்காலத்தில் சளி, காய்ச்சல், இருமல் என ஏற்படுவது வழக்கம். அதைத்தொடர்ந்து, நம் உடலில் உள்ள தசைவலி, பிடிப்புகள் மற்றும் தோல் பிரச்சினைகள் மோசமடையத் தொடங்குகின்றன. இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு. நாம் நம் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்தப் பிரச்சனைகள் தொடரும்.

Science-backed reasons to eat fish in winters in tamil

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இந்த உணவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நம் உணவானது உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் தருவதாக இருக்க வேண்டும். இதனை நன்றாக அறிந்த நம் முன்னோர்கள் பருவத்திற்கேற்ப சத்தான உணவுகளை உட்க்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். எனவே குளிர்க்கால பருவத்திற்கேற்ற ஒரு சிறந்த உணவைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

குளிர்காலம் தொடங்கியவுடன், நமது நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரிக்க வேண்டும். ஏனெனில், குளிர்காலத்தில் பாக்டீரியாவால் பரவும் நோய்கள் அதிகம் பரவுகின்றன. காற்றில் உள்ள ஈரப்பதம் அவை இனப்பெருக்கம் செய்வதை எளிதாக்குகிறது. எனவே, குளிர்காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியம். இதனால் நமது உடல் இந்த பாக்டீரியாக்களுக்கு எதிராக ஒரு கவசத்தை உருவாக்குகிறது. இதுபோன்ற அனைத்து வகையான நோய்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும் ஒரு உணவு தான் மீன். குளிர்காலத்தில் மீன் ஏன் சாப்பிட வேண்டும் என்பதை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

இருமல் மற்றும் சளியை எதிர்த்துப் போராடுகிறது

இருமல் மற்றும் சளியை எதிர்த்துப் போராடுகிறது

மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமது நுரையீரலுக்கு காற்றோட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. எனவே உங்கள் நுரையீரலை தொற்றுநோயிலிருந்து இது பாதுகாக்கிறது. மேலும் குளிர்காலத்தில் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கிறது.

சருமத்திற்கு நல்லது

சருமத்திற்கு நல்லது

குளிர்காலத்தில், நம் தோல் அடிக்கடி வறட்சியாக காட்சியளிக்கும். மீன்களில் காணப்படும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் தோலின் மேலுள்ள அடுக்குக்கும் சருமத்திற்கும் இடையில் ஒரு தடையை உருவாக்க உதவுகின்றன. எனவே, இவை சருமம் வறண்டு போவதைத் தடுக்க உதவுகிறது.

கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது

கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது

குளிர்கால மாதங்களில் மூட்டுவலி மற்றும் வலி ஆகியவை ஏற்படுவது வழக்கம். இந்த வலிமிகுந்த பிணைப்பை உடைக்க சிறந்த வழி மீன் சாப்பிடுவதாகும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் கீல்வாத அறிகுறிகளைக் குறைத்து, இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

நல்ல கொழுப்பு

நல்ல கொழுப்பு

நிபுணர்களின் கூற்றுப்படி, மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. நல்ல கொழுப்பாகிய இது மூளை மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், மீன் சாப்பிடுவது தாய்மார்களுக்கும் நல்லது என்று கருதப்படுகிறது.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

மீனில் பூஜ்ஜிய நிறைவுற்ற கொழுப்பு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இதயத்திற்கு நன்மையளிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு ஒரு முறை மீன் சாப்பிடுவது இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.

 வைட்டமின் டி-யின் ஆதாரம்

வைட்டமின் டி-யின் ஆதாரம்

மீன் வைட்டமின் டி-யின் வளமான மூலமாகும். மேலும் சுவாரஸ்யமாக, இது மற்ற ஊட்டச்சத்துக்களை உடலால் உறிஞ்சுவதற்கு உதவுகிறது . உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மீன் உதவுகிறது.

மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது

மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது

குளிர்கால நாட்கள் உங்களுக்கு சோம்பலை ஏற்படுத்துகிறது. மேலும், இந்நாட்கள் உங்களுக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்துவதால், மீன் சாப்பிடத் தொடங்குங்கள். தி ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி & நியூரோ சயின்ஸின் கூற்றுப்படி, மீன் மற்றும் மீன் எண்ணெயை வழக்கமாக உட்கொள்வது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

ஆரோக்கியமான கண்கள் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கோருகின்றன. சுகாதார ஆராய்ச்சி மற்றும் தரத்திற்கான ஏஜென்சியின் படி, மீன்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கொழுப்பு அமிலங்களை அதிக அளவில் வழங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Science-backed reasons to eat fish in winters in tamil

Here we are talking about the science-backed reasons to eat fish in winters in tamil.
Story first published: Saturday, December 4, 2021, 12:38 [IST]
Desktop Bottom Promotion