For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டாலும் இந்த விதிமுறைகளை பாலோ பண்ணனும்... இல்லனா ஆபத்துதான்...!

தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நமது நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் கூட இன்னும் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை.

|

தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நமது நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் கூட இன்னும் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வரும் காலங்களில் அனைவரும் எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்துஸ் சூழ்நிலையில் தடுப்பூசிக்கு பிந்தைய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுத்துக்கொள்வது அவசியம். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை தாங்க முடியாமல் இந்தியாவிற்கே இப்போது மூச்சுத் திணறுகிறது. கொரோனா நோயாளிகளின் சமீபத்திய விஸ்வருப எழுச்சியைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

Rules To Follow After Getting Vaccinated For COVID-19

தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நமது நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் கூட இன்னும் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வரும் காலங்களில் அனைவரும் எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்துஸ் சூழ்நிலையில் தடுப்பூசிக்கு பிந்தைய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுத்துக்கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
COVID-19 க்கு தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம்?

COVID-19 க்கு தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம்?

COVID நோயாளிகளின் எண்ணிக்கை உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இளைஞர்களும் முதியவர்களும் கொடிய வைரஸிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், COVID தடுப்பூசிகள் காலத்தின் தேவையாகிவிட்டன. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதித்தது மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கான அவசியத்தை நீங்கள் உணரவில்லை என்றாலும், வைரஸால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் தடுப்பூசி மூலம் மட்டுமே பாதுகாக்கப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

'முழுமையாக தடுப்பூசி போடுவது' என்றால் என்ன?

'முழுமையாக தடுப்பூசி போடுவது' என்றால் என்ன?

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகளாக உள்ளன. கோவிஷீல்டி தடுப்பூசிக்கு முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையில் ஆறு முதல் எட்டு வாரங்கள் இடைவெளி எடுக்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நிலையில், கோவாக்சின் 28 நாட்கள் இடைவெளியில் போடப்படுகிறது. ஒரு நபர் COVID தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெறும்போது மட்டுமே, அவர்கள் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.

தடுப்பூசி போட்ட பிறகு மனதில் கொள்ள வேண்டியவை?

தடுப்பூசி போட்ட பிறகு மனதில் கொள்ள வேண்டியவை?

COVID தடுப்பூசி உங்களுக்கு வைரஸுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அடுக்கை வழங்கக்கூடும், ஆனாலும் நீங்கள் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, அதனால்தான் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடருமாறு சுகாதார நிபுணர்களும் அதிகாரிகளும் மக்களிடம் கேட்டுள்ளனர். தடுப்பூசி பெற்ற பிறகும் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: 'இந்த' பழம் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுமாம்? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

தொடர்ந்து மாஸ்க் அணியுங்கள்

தொடர்ந்து மாஸ்க் அணியுங்கள்

இந்திய மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை, அதனால்தான் முகமூடி அணிவது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம். தடுப்பூசிக்கு போட்டப் பிறகு ஒருவர் வைரஸுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடும், ஆனால் அவர் வைரஸால் தாக்க முடியாதவராக இருக்க வாய்ப்பில்லை. ஆகையால் தடுப்பூசி போடாத மற்றவர்களை பாதுகாக்க உங்கள் முகமூடிகளைத் தொடர்ந்து அணிய வேண்டியது அவசியம்.

கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றவும்

கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றவும்

நன்கு பொருத்தமான முகமூடியை அணிவதுடன், நெரிசலான இடங்களில் 6 அடி இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்கவும். ஒரு நபர் தடுப்பூசி போடுகிறாரா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லாததால் இது உங்களைச் சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடும். இது தவிர, அனைத்து COVID-யைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் பின்பற்றுங்கள், ஏனெனில் இது வைரஸ் பரவுவதைத் தடுக்கும்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா உங்கள் நரம்பு மண்டலத்தை பாதித்துவிட்டது என்று அர்த்தமாம்...!

தடுப்பூசி போடாதவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்

தடுப்பூசி போடாதவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்

மக்கள் தொகையில் மிகப்பெரிய அளவினர் வைரஸுக்கு எதிராக இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். நீங்கள் தடுப்பூசி போடும்போது, தினசரி நீங்கள் பார்வையிடும் அல்லது சந்திக்கும் நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்க நீங்கள் திட்டமிடும்போதெல்லாம், முகமூடியை அணிய நினைவில் கொள்ளுங்கள். COVID-19 ஆல் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நபர்களைத் தொடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rules To Follow After Getting Vaccinated For COVID-19

Check out the important rules to follow after getting vaccinated for COVID-19.
Desktop Bottom Promotion