For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் 100 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா?

ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது அனைவரின் ஆசையாகவும் உள்ளது. ஆனால் ஒருவர் எப்படி அதனை அடைவது?

|

ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது அனைவரின் ஆசையாகவும் உள்ளது. ஆனால் ஒருவர் எப்படி அதனை அடைவது? நீண்ட ஆயுளின் ரகசியத்தைப் பற்றி அறிய, மக்கள் நீண்ட காலம் வாழும் உலகின் பகுதிகளை நிபுணர்கள் அடையாளம் கண்டனர். இந்த இடங்களில் இத்தாலி, ஒகினாவா, ஜப்பான், லோமா, சிஏ, லிண்டா மற்றும் சர்தினா ஆகியவை அடங்கும்.

Right Way to Eat to Live Up to 100 Years

இந்த பகுதிகள் நீல மண்டலங்கள் என்று பெயரிடப்பட்டன, பின்னர் இந்த பகுதியில் வாழும் மக்கள் எதை உட்கொள்கிறார்கள் மற்றும் பொதுவானவை என்பதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். நீல மண்டலங்களில் உள்ள மக்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதும், அவர்களின் சமூகத்தில் அர்த்தமுள்ள தொடர்பும் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவர்களுடைய உணவுகளிலும் சில பொதுவான விஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நீல மண்டல மக்களின் உணவில் இருந்து சில முக்கியமான உணவுக் குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீன்ஸ் சாப்பிடுங்கள்

பீன்ஸ் சாப்பிடுங்கள்

தினமும் குறைந்தது அரை கப் பீன்ஸ் சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உங்கள் தினசரி உணவில் கருப்பு, கார்பன்ஸோ மற்றும் வெள்ளை பீன்ஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதிலுள்ள நன்மை என்னவென்றால், அவை தாவர அடிப்படையிலான புரதத்தின் மலிவான ஆதாரமாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் உள்ளன, இது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிலுவைக் காய்கறிகள்

சிலுவைக் காய்கறிகள்

ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற சிலுவை காய்கறிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த காய்கறிகளில் சில இயற்கையான கலவைகளைக் கொண்டிருக்கின்றன, அவை உங்கள் இதயத்தை பாதுகாப்பதோடு சில வகையான புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.

நட்ஸ் அவசியம் சேர்க்கவும்

நட்ஸ் அவசியம் சேர்க்கவும்

ஒவ்வொரு நாளும் சுமார் 60 கிராம் நட்ஸ் சாப்பிடுங்கள், அதாவது இரண்டு கைப்பிடிகள். பிஸ்தா, அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் ஆகியவற்றை சில விதைகளுடன் சேர்த்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். வேர்க்கடலையையும் சாப்பிடலாம்.

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

நீல மண்டலத்தில் வாழும் மக்கள் காபி மற்றும் தேநீர் அருந்துகிறார்கள், ஆனால் அவர்களின் நீரேற்றத்தின் பெரும்பகுதி தண்ணீரிலிருந்து கிடைக்கிறது. சோடாக்கள் போன்ற பானங்கள் பெரும்பாலான பெரியவர்களுக்கு சர்க்கரை சேர்க்கும் முதல் ஆதாரமாகும். பெரும்பாலான சர்க்கரை பானங்கள் எந்தவிதமான ஊட்டச்சத்துகளும் இல்லாதவை. எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை குறைவாக சாப்பிடுங்கள்

சர்க்கரை குறைவாக சாப்பிடுங்கள்

நீல மண்டலங்களில் வாழும் மக்கள் தங்கள் சர்க்கரை உட்கொள்ளலில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உட்கொள்வதைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். இதனால், நாள் முழுவதும் சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் சாப்பிடுவதற்குப் பதிலாக, அவர்கள் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே சர்க்கரையை உண்ண முனைகிறார்கள்.

இறைச்சி குறைவாக சாப்பிடுங்கள்

இறைச்சி குறைவாக சாப்பிடுங்கள்

அதிக தாவர அடிப்படையிலான உணவுகள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கு முக்கியமாகும். நீங்கள் இறைச்சியை ஒரு பக்க உணவாக சேர்க்கலாம் மற்றும் அதை அடிக்கடி உட்கொள்ளக்கூடாது. இறைச்சிக்குப் பதிலாக பச்சை காய்கறிகள், டோஃபு மற்றும் சோயாவை புரதத்தின் ஆதாரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள்

குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள்

ஒவ்வொரு நாளும், உணவுக்கு முன் சிறிது நேரம் ஒதுக்கி கடவுளுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் உணவை சாப்பிடுவது, நீங்கள் உணவை உட்கொள்ளும் போது மகிழ்ச்சியை ஏற்படுத்தும், இது உங்கள் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தாத்தா பாட்டியிடம் டிப்ஸ் கேளுங்கள்

தாத்தா பாட்டியிடம் டிப்ஸ் கேளுங்கள்

எந்தவொரு விஷயத்தையும் பற்றிய சிறந்த ஆலோசனையை அது அறிந்த மற்றும் அனுபவித்த ஒருவரால் மட்டுமே வழங்க முடியும். எனவே, உங்கள் தாத்தா பாட்டியுடன் அமர்ந்து சில குறிப்புகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Right Way to Eat to Live Up to 100 Years

Check out the right way to eat to live up to 100 years.
Story first published: Thursday, September 2, 2021, 12:46 [IST]
Desktop Bottom Promotion