For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்த்துப் போராடும் சக்தியைத் தரும் பானங்கள்!

தற்போது கோடைக்காலம் என்பதால், கோடை வெயிலின் வெப்பத்தைத் தணித்து, நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் பல சுவையான கோடைக்கால பானங்கள் உள்ளன.

|

கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே தற்போது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால், அது நோயை உண்டாக்கும் வைரஸ்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் வழியைக் குறித்து பேசும் போது, முதலில் நினைவிற்கு வருவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள் தான்.

Refreshing Summer Drinks That Can Boost Your Immunity

அதுவும் பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் ஒரு கப் கசாயம் தான் நினைவிற்கு வரும். ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குடிக்கும் பானங்கள் கசப்பாக அல்லது சுவையற்றதாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருசில சுவையான பானங்களும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும். தற்போது கோடைக்காலம் என்பதால், கோடை வெயிலின் வெப்பத்தைத் தணித்து, நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் பல சுவையான கோடைக்கால பானங்கள் உள்ளன.

MOST READ: மக்களே உஷார்... நீண்ட கால கோவிட் பிரச்சனையின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் இதுதான்...

கீழே கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடும் அளவில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும் சில கோடைக்கால பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பானங்களைக் குடித்து கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினா மோர்

புதினா மோர்

கோடைக்கால பானங்களின் பட்டியலில் மோர் அல்லது லஸ்ஸி இல்லாமல் முழுமையடையாது. நற்பதமான தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானத்தில் குடலுக்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன. இது செரிமான மண்டலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். இத்தகைய மோரின் சுவையை அதிகரிக்கவும், மிகவும் ஆரோக்கியமான பானமாக மாற்றவும், அத்துடன் சிறிது புதினா இலைகள், ஒரு சிட்டிகை சீரகப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். புதினாவில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ சத்தும், சீரகத்தில் வைட்டமின் சியும் உள்ளன. இந்த 2 பொருட்களுமே அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை.

வெட்டிவேர் ஜூஸ்

வெட்டிவேர் ஜூஸ்

கோடைக்காலத்தில் குடிக்க ஏற்ற சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் மற்றொரு பானம் தான் வெட்டிவேர் ஜூஸ். வெட்டிவேரில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது தவிர, இந்த பானத்தில் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை ஆதரிக்கக்கூடிய ஜிங்க் சத்து உள்ளது. இது உயிரணு பிரிவுக்கு உதவுகிறது மற்றும் காயங்களை விரைவில் குணப்படுத்துகிறது.

ஆம் பன்னா/மாங்காய் ஜூஸ்

ஆம் பன்னா/மாங்காய் ஜூஸ்

வடஇந்தியாவில் ஆம் பன்னா என்று அழைக்கப்படும் மாங்காய் ஜூஸ் மிகவும் பிரபலமானது. கோடைக்காலத்தில் மாம்பழம்/மாங்காய் மிகவும் சிறப்பான பழம் என்பதால், இது உடலுக்கு பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும். மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஆம் பன்னாவில் சீரகப் பொடி, ப்ளாக் சால்ட் போன்றவை சேர்க்கப்படுவதால், இது மனச்சோர்வை வெல்ல உதவும், உடல் வறட்சி மற்றும் வயிற்றுப் போக்கைத் தடுக்கும். மேலும் ஆம் பன்னா நோயெதிர்ப்பு சக்தி அல்லது பாக்டீரியா எதிர்ப்பை அதிகரிக்கும்.

விளாம்பழ சர்பத்

விளாம்பழ சர்பத்

விளாம்பழம் இந்தியா முழுவதும் வளர்க்கப்படும் ஒரு கோடைக்கால பழமாகும். நீங்கள் கோடைக்காலத்தில் கூடுதல் ஊட்டச்சத்துக்களைப் பெறவும், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும் நினைத்தால் விளாம்பழ சர்பத்தை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய விளாம்பழ சர்பத், வயிற்றைச் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

க்ரீன் ஸ்மூத்தி

க்ரீன் ஸ்மூத்தி

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சிறப்பாக தொடங்குவதற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் காலையில் பசலைக்கீரை, வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காய் கொண்டு ஒரு க்ரீன் ஸ்மூத்தி தயாரித்துக் குடிப்பதை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. பசலைக்கீரை, நெல்லிக்காய் ஆகியவற்றில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி போன்றவை உள்ளதால், இது நோயெதிர்பபு மண்டலங்களின் தொற்றை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில் வெள்ளரிக்காய் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். வேண்டுமானால் சுவைக்காக இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Refreshing Summer Drinks That Can Boost Your Immunity

Having a strong immunity can protect you from disease-causing viruses and keep you healthy in this testing time. We have listed 5 drinks that you can have this summer to stay hydrated and fit.
Desktop Bottom Promotion