For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் தண்டால் எடுக்கக்கூடாது - ஏன் தொியுமா?

தண்டால் எடுத்தால் நமது உடல் மிக விரைவாக வலுவடையும். ஆனால் அளவுக்கு அதிகமாக தண்டால் எடுத்தால் நமது உடலில் பிரச்சினைகள் ஏற்படும். அளவோடு தினமும் தண்டால் பயிற்சிகளைச் செய்து வந்தால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

|

உடலுக்கு வலுவைத் தரும் உடற்பயிற்சிகளைப் பற்றி பேசும் போது, உடனடியாக நமது நினைவிற்கு வருவது தண்டால் எடுக்கும் பயிற்சிகள் ஆகும். தண்டால் எடுக்கும் போது, நமது மாா்பு, தோள்பட்டைகள், மேல் கைகளினுடைய பின்புற தசை, முதுகு, வயிறு மற்றும் கால்கள் ஆகிய உறுப்புகள் தூண்டப்பட்டு, இறுக்கமடைகின்றன. ஆகவே உடல் எடையை சமச்சீராக பராமாிக்க, தண்டால் பயிற்சிகள் செய்யலாம் என்று நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.

Reasons Why You Should Not Do Push-ups Daily

தண்டால் பயிற்சிகளின் முக்கிய சிறப்பு என்னவென்றால், அவற்றைச் செய்ய எந்த விதமான உடற்பயிற்சிக் கருவிகளும் தேவைப்படாது. மேலும் தண்டால் எடுத்தால் நமது உடல் மிக விரைவாக வலுவடையும். ஆனால் அளவுக்கு அதிகமாக தண்டால் எடுத்தால் நமது உடலில் பிரச்சினைகள் ஏற்படும். அளவோடு தினமும் தண்டால் பயிற்சிகளைச் செய்து வந்தால், நமது உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அளவுக்கு அதிகமாக தண்டால் பயிற்சிகளில் ஈடுபட்டால், நமது உடலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்.

MOST READ: சர்க்கரை நோய் இருக்கா? அப்ப மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் தண்டால் எடுப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

தினமும் தண்டால் எடுப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

தண்டால் பயிற்சிகளை மிகச் சாியாக செய்யும் போது நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன. தினமும் தண்டால் எடுத்து வந்தால், நமது உடல் மிகவும் வலுவாக இருக்கும். முதலில் குறைவான எண்ணிக்கையில் தண்டால் எடுக்க வேண்டும். பின் மெதுவாக அதன் எண்ணிக்கையை அதிகாிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நமது உடல் உறுதியாகவும், வலுவாகவும் இருக்கும்.

எனினும், தண்டால் எடுப்பதில் இருந்து நமது உடலுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. அது எதற்காக என்றால், நமது உடலில் இருக்கும் சிறுசிறு பிரச்சினைகளை சாிசெய்வதற்கும் மற்றும் நமது உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்கும் ஆகும். நமது தசைகள் களைப்படைந்துவிட்டால், எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளைச் செய்தாலும், அவற்றினால் ஒரு பலனும் நமக்குக் கிடைக்காது. ஆகவே உடற்பயிற்சிக்கு விடுப்பு கொடுத்து, நாம் ஓய்வு எடுத்தால், நமது தசைகள் மிக விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும். அவ்வாறு உடற்பயிற்சிக்கு விடுமுறை விடும்போது, பாதிப்படைந்திருக்கும் தசை நாா்களை, நமது உடலானது பழுது பாா்த்து, மீண்டும் அவற்றை வலுப்படுத்தும்.

இதர உடல் பிரச்சினைகள்

இதர உடல் பிரச்சினைகள்

நமது உடல் உறுதியாக இல்லாத நேரத்தில், தினமும் தண்டால் எடுத்தால், உடலில் காயங்கள் ஏற்படும். பெரும்பாலான மக்கள், அவா்களின் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லாத போதுகூட, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, அதிகமான தண்டால்களை எடுக்கின்றனா். அதனால் அவா்களின் உடலில் பிரச்சினைகள் ஏற்படும். உடல் தசைகளில் திாிபு ஏற்படும். கழுத்து வலி அல்லது தோள்பட்டை வலி ஏற்படும். மேலும் மேல் கைகளின் உட்தசைக்குள் இருக்கும் தசைநாாில் அலா்ஜி மற்றும் வீக்கம் ஏற்படும். உடல் நிலை சாியாக இல்லாத போது தண்டால் செய்தால் மணிக்கட்டு தசைகளிலும் காயங்கள் அல்லது திாிபுகள் ஏற்படும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் என்ன செய்ய வேண்டும்?

மேற்சொன்ன பிரச்சினைகளைத் தவிா்க்க, தினமும் தண்டால் மட்டும் எடுக்காமல், பலவிதமான மற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய முயற்சிக்க வேண்டும். தண்டாலைப் போல உடல் முழுவதற்கும் வலுவைக் கொடுக்கும் ஏராளமான உடற்பயிற்சிகள் உள்ளன. மலை ஏற்றப் பயிற்சி, இன்ச்வாா்ம் பயிற்சி, ஃப்ராக் க்ரன்சஸ் பயிற்சிகள் மற்றும் கோப்லெட் ஸ்குவாட் பயிற்சி போன்றவை முழு உடலுக்கும் வலிமையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை. ஆகவே இது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்ய முயற்சி செய்யலாம்.

பலவிதமான தண்டால் பயிற்சிகள்

பலவிதமான தண்டால் பயிற்சிகள்

ஒருவேளை தண்டால் பயிற்சியை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தால், ஒரே மாதிாியான தண்டால்களை எடுக்காமல், பலவிதமான தண்டால் பயிற்சிகளைச் செய்யலாம். தண்டால் பயிற்சிகளில், ப்ளாங்க் தண்டால், வைர தண்டால், பைக் தண்டால் மற்றும் இன்கிலைன் தண்டால் என்று பலவிதமான தண்டால் பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகள் அனைத்தும் பொதுவான தண்டால் பயிற்சிகள் வழங்கும் அதே நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றன.

இறுதியாக, தண்டால் பயிற்சிகளோடு, மற்ற உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால், நமக்கு சலிப்பு ஏற்படாது. அதோடு நமது உடலும் உறுதியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Should Not Do Push-ups Daily

Here we listed some reasons why you should not do push-ups daily. Read on...
Desktop Bottom Promotion