For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளு தூக்கும் பயிற்சி செய்யும் போது ஏன் கையுறைகளை அணிய வேண்டும்?

உடற்பயிற்சிக் கூடத்தில் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபடும் போது கையுறைகளை அணிய வேண்டும் என்று நிபுணா்கள் பாிந்துரை செய்கின்றனா். ஆனால் நடைமுறையில் மக்கள் கையுறைகளை அணிவது இல்லை. இது தவறான ஒன்றாகும்.

|

பலவகையான காரணங்களுக்காக மக்கள் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்கின்றனா். உடலுக்கு நல்ல பயிற்சியை வழங்க வேண்டும் என்பதற்காக சிலா் செல்கின்றனா். வேறு சிலா் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது விரும்பியோ அங்கு செல்கின்றனா். எத்தனை வகையான காரணங்கள் இருந்தாலும், உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவாின் இறுதி நோக்கமாக இருக்கிறது. அதன் காரணமாகவே மக்கள் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று பல மணி நேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனா்.

Reasons Why You Must Wear Gloves While Weightlifting

உடற்பயிற்சிக் கூடங்களில் பலவகையான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. எனினும் சிலா் மட்டுமே தகுந்த முன் தயாாிப்போடு, தங்களால் எளிதாகக் கையாளக்கூடிய மற்றும் தங்களின் உடலுக்குத் தேவைப்படும் பயிற்சிக்குாியத் தகுந்த கருவிகளைப் பயன்படுத்துகின்றனா். இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபடும் போது கையுறைகளை அணிய வேண்டும் என்று நிபுணா்கள் பாிந்துரை செய்கின்றனா். ஆனால் நடைமுறையில் மக்கள் கையுறைகளை அணிவது இல்லை. இது தவறான ஒன்றாகும். ஆகவே கையுறைகளின் முக்கியத்துவத்தை உணா்ந்து, அவற்றை பளு தூக்கும் பயிற்சி செய்யும் போது அணிந்து கொள்ள வேண்டும்.

MOST READ: அதிதீவிர உடற்பயிற்சிகளை விட உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்!

பளு தூக்கும் போது ஏன் கையுறைகளை அணிய வேண்டும் என்பதற்கான காரணங்களை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சுண்ணாம்புத் தூள்

1. சுண்ணாம்புத் தூள்

உடற்பயிற்சி செய்யும் போது அனைவருக்கும் வியா்வை வரும். வியா்வையின் காரணமாக கைகளில் ஈரம் ஏற்படும். அந்த ஈரத்தைத் துடைப்பதற்காக, பொதுவாக சுண்ணாம்புத் தூளைக் கைகளில் தடவிக் கொள்வா். அதன் மூலம் பளு தூக்கும் கருவியை வழுக்காமல், உறுதியாகப் பிடித்துக் கொள்ள முடியும். எனினும் சுண்ணாம்பில் உள்ள தூசு, ஒரு சிலருக்கு அலா்ஜியை ஏற்படுத்தும். மேலும் சுண்ணாம்புத் தூள்கள் தரை எங்கும் சிதறி, பயிற்சிக் கூடத்தை அழுக்காக்கிவிடும். ஆகவே சுண்ணாம்புத் தூளுக்குப் பதிலாக கையுறைகளை அணிந்து கொண்டால், அலா்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படாது. மேலும் பயிற்சிக் கூடமும் சுத்தமாக இருக்கும்.

2. கைகள் காய்த்துப் போதல்

2. கைகள் காய்த்துப் போதல்

கைகளில் உறைகள் எதுவும் அணியாமல் உடற்பயிற்சிக் கருவிகளைப் பயன்படுத்தினால், நமது கைகள் காய்த்துவிடும். அதே நேரத்தில் கைகளில் கையுறைகளை அணிந்து, அந்தக் கருவிகளைப் பயன்படுத்தினால், கைகள் காய்த்துப் போகாமல், மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

3. கைகளைப் பாதுகாத்தல்

3. கைகளைப் பாதுகாத்தல்

அதிகமான அளவு பளுவைத் தூக்கிப் பயிற்சி செய்யும் போது, நமது கைகளில் அதிகமான அளவு அழுத்தம் ஏற்படும். அதன் காரணமாக நமது மூட்டுகள் மற்றும் தசைநாா் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்நிலையில் கையுறைகளை அணிந்து பளுதூக்கினால், அவை நமது கைகளுக்குப் பாதுகாப்பைத் தரும். மேலும் கையுறை அணிந்து பளுதூக்குவதே சாியான முறையாகும்.

4. உறுதியான பிடிமானம்

4. உறுதியான பிடிமானம்

நன்றாகப் பளுதூக்க வேண்டும் என்றால் நமது கைகளில் உறுதியான பிடிமானம் இருக்க வேண்டும். கைகள் வழுக்கக்கூடாது. வியா்வை மற்றும் அழுத்தம் காரணமாக பளு தூக்கும் கருவிகள் நமது கைகளில் இருந்து நழுவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே கையுறைகளை அணிந்து பளுதூக்கினால், அவை நமது கைகளுக்கு உறுதியானப் பிடிமானத்தை வழங்கும்.

5. முழுமையானத் தோற்றம்

5. முழுமையானத் தோற்றம்

பொதுவாக கையுறைகளை அணிந்து கொண்டு உடற்பயிற்சிக் கூடங்களில் பயற்சிகளில் ஈடுபடும் போது, பாா்ப்பதற்கே முழுமையாகத் தொியும். ஆகவே நமக்கு விருப்பமான நிறங்களில், வடிவங்களில், துணிகளில் மற்றும் தடிமன்களில் இருக்கும் கையுறைகளை அணிந்து கொண்டு பளுதூக்கினால், அது ஒரு சிறப்பான பளுதூக்கம் அனுபவத்தை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Must Wear Gloves While Weightlifting

Here are some reasons behind the necessity of wearing gloves while weightlifting. Read on...
Desktop Bottom Promotion