For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40 வயதான ஆண்கள் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடுமாம்...

30 வயதில் உடல் இளமையாக காட்சியளிக்கும். ஆனால் 40 வயதில் தான் உடலின் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். குறிப்பாக பின்வரும் அறிகுறிகள் 40 வயதில் ஆண்களிடம் தென்பட்டால், அவற்றைப் புறக்கணிக்கக்கூடாது.

|

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற வாசகம் ஒன்றே, ஒருவருக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். எனவே நோயின்றி வாழ்வதற்கு நாம் நம்மை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒருவரது வயது அதிகரிக்கும் போது, உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்க்கும் மற்றும் வலியைக் குறைக்கும் திறன் குறைகிறது. ஆரோக்கியத்தை சரியான நேரத்தில் பராமரிக்காவிட்டால், மோசமான உடல் ஆரோக்கியத்தின் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். ஆகவே ஆரோக்கியமான டயட் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்றவை முதுமையின் அறிகுறிகளைக் குறைக்கும்.

Reasons Why Men Shouldn’t Ignore These Symptoms At The Age Of 40

முதுமை என்பது ஒரு இயற்கை நிகழ்வு. இதை யாராலும் நிறுத்த முடியாது. இருப்பினும், சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். 30 வயதில் உடல் இளமையாக காட்சியளிக்கும். ஆனால் 40 வயதில் தான் உடலின் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். குறிப்பாக பின்வரும் அறிகுறிகள் 40 வயதில் ஆண்களிடம் தென்பட்டால், அவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திடீர் உடல் பருமன் மற்றும் எடை இழப்பு

திடீர் உடல் பருமன் மற்றும் எடை இழப்பு

40 வயதிற்கு மேல் உடல் எடையில் திடீர் அதிகரிப்பு அல்லது இழப்பு ஏற்பட்டால், அது எதனால் ஏற்படுகிறது என்பது நமக்கு சரியாக தெரியாது. இந்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உதாரணமாக, சர்க்கரை நோய் எடை இழப்பிற்கு வழிவகுக்கும். இது தவிர, கொலஸ்ட்ரால் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களும் திடீரென எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே 40 வயதாகிவிட்டால், அவ்வப்போது சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

சில நேரங்களில் தவறான உணவுகள் அல்லது செரிமான பிரச்சனைகள் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இருப்பினும், ஒருவருக்கு நெஞ்செரிச்சல் அடிக்கடி நிகழும் போது, அதை உடனே கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். ஏனெனில் நெஞ்செரிச்சலானது பலவீனமான இதயத்தின் காரணமாகவும் ஏற்படலாம்.

அடிக்கடி தலைவலி

அடிக்கடி தலைவலி

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமானால், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏனெனில் வயது அதிகரிக்கும் போது, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே எவ்விதமான தீவிர நோய்களின் அபாயத்தையும் தடுக்க, கட்டாயம் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

மூட்டு வலி

மூட்டு வலி

மூட்டு வலி என்பது உடலானது நாளுக்கு நாள் பலவீனமடைவதைக் குறிக்கிறது. இந்த பிரச்சனை தீவிரமாகாமல் இருக்க, சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழிப்பது நல்லது தான். ஆனால் உங்களுக்கு சிறுநீரைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தால் மற்றும் ஒரு நாளைக்கு பலமுறை கழிவறை சென்றால், இது ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

முதுகு வலி

முதுகு வலி

கழுத்து முதல் இடுப்பு வரை தாங்க முடியாத வலியை சந்தித்தால், முதுகு எலும்புகள் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். மனித உடலில் முதுகெலும்பு மிகவும் முக்கியமான அங்கமாகும். ஆகவே இந்த மாதிரியான வலியை நீண்ட காலமாக குறிப்பாக 40 வயதிற்கு மேல் சந்தித்தால், அதை புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Men Shouldn’t Ignore These Symptoms At The Age Of 40

Here are some reasons why men shouldn’t ignore these symptoms at the age of 40. Read on...
Story first published: Friday, September 17, 2021, 11:22 [IST]
Desktop Bottom Promotion