Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
இதில் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தாலும் ஆண்களுக்கு உடலுறவின் போது தாங்கமுடியாத வலி ஏற்படுமாம்...!
பொதுவாக உடலுறவின் போது பெண்கள் வலியை அனுபவிப்பார்கள் என்ற பொதுக்கருத்து உள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
பொதுவாக உடலுறவின் போது பெண்கள் வலியை அனுபவிப்பார்கள் என்ற பொதுக்கருத்து உள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். ஏனெனில் ஆண்களும் பல்வேறு காரணங்களால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர்.

வலிமிகுந்த உடலுறவுக்கு ஆண்கள் புதியவர்கள் அல்ல. ஒரு தொற்று அல்லது ஒரு தவறான நடவடிக்கை, ஆண்களை மிகவும் துன்பகரமான பயணத்திற்கு அழைத்துச் செல்லக்கூடும். எந்தெந்த காரணங்களால் ஆண்கள் உடலுறவின் போது வலியை அனுபவிக்கிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தவறான வாய்வழி உறவு
அதிக ஆர்வமுள்ள கூட்டாளரிடமிருந்து கிடைக்கும் வாய்வழி உறவு ஒரு ஆணின் மோசமான அனுபவமாக மாறக்கூடும். கடினமான ஆண்குறி மற்றும் கூர்மையான பற்கள் ஒரு அழகான அனுபவத்தை உருவாக்குவதில்லை. வாய்வழி உறவிற்கு முன் போதுமான உரையாடல்கள் தேவை.

பொதுமான உயவு இல்லாமல் இருப்பது
போதுமான உயவு இல்லாதது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மோசமான அனுபவத்தைக் கொடுக்கும். உலர்ந்த யோனி என்பது உடலறுறவின் போது ஏற்படக்கூடாத ஒரு நிலையாகும். இதற்கு செயற்கையான உயவூட்டிகள் ஒரு சுலபமான தீர்வாக இருக்கும், ஆனால் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது எப்போதும் சிறந்த தீர்வாக இருக்கும்.

புரோஸ்டேட்டிஸ்
உங்கள் ஆண்குறியின் பின்னால், புரோஸ்டேட் சுரப்பியின் (புரோஸ்டேடிடிஸ்) தொற்று அல்லது வீக்கத்தால் ஏற்படும் வலியால் வீக்கம் ஏற்படும்போது விந்து வெளியேறுவது வழக்கம்போல இருக்காது. விரைவில் உங்கள் மருத்துவரை அணுகவும்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்
இதுவரை கண்டறியப்பட்ட சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளில் 20 சதவீதம் மட்டுமே ஆண்களில் ஏற்படுகிறது என்றாலும், அது அவர்களுக்கு ஒருபோதும் குறைவான வேதனையை வழங்குவதில்லை. இளைஞர்கள் யுடிஐக்களைப் பெறுவதில்லை, ஆனால் தொற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பாலியல் சுகாதாரம், போதுமான நீர் உட்கொள்ளல் மற்றும் ஆரோக்கியமான சிறுநீர்ப்பை நிச்சயமாக அதை விலக்கி வைக்கிறது.

முன்தோல் பிரச்சினைகள்
முன்தோல் சில நேரங்களில் மிகவும் இறுக்கமாக இருக்கலாம் (ஃபிமோசிஸ்) அல்லது அது ஆண்குறியின் தலைக்கு பின்னால் சிக்கிக்கொண்டிருக்கலாம் (பாராஃபிமோசிஸ்) - உங்கள் மனதில் உடலுறவு பற்றி நினைக்கும்போது ஒருபோதும் வரக்கூடாத இரண்டு வலி நிலைமைகளாகும். விரைவில் உங்கள் மருத்துவரை அணுகவும்.

STD
இது ஹெர்பெஸ் அல்லது கோனோரியாவாக இருந்தாலும் போன்ற எஸ்.டி.டி.க்கள் தொற்றுநோயாக மட்டுமல்லாமல், மிகவும் வேதனையை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரைச் சந்திப்பது சிறந்தது, நீங்கள் சிகிச்சையில் இருக்கும்போது உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

காண்டம் பிரச்சினைகள்
லேடெக்ஸிற்கு ஒவ்வாமை உள்ள ஒரு ஆணுக்கு ஒரு ஆணுறை பயன்படுத்துவதன் மூலம் தோல் அழற்சி, சிவப்பு மற்றும் நமைச்சல் புள்ளிகள் சில நேரங்களில் உடைந்த சருமத்துடன் இணைகின்றன. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் காண்டம் அணிந்து உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications
