Just In
Don't Miss
- News
பெண் ஊழியருடன் உல்லாசம்.. நைசாக வீடியோ எடுத்து மிரட்டல்.. கணவருக்கும் அனுப்பிய கொடூரன் கைது
- Movies
இந்தியில் அமிதாப்.. மலையாளத்தில் மோகன்லால்.. அப்போ தமிழில் ரஜினியா? பொன்னியின் செல்வன் எதிர்பார்ப்பு
- Finance
ரிஷி சுனக் தான் அடுத்த பிரிட்டன் பிரதமரா..? இதுமட்டும் நடந்தால்..!!
- Automobiles
பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!
- Technology
Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?
- Sports
என்னுடைய பணிக்காலம் பிசிசிஐயின் பொற்காலம்.. எந்த சர்ச்சைகளுக்கும் இடமில்லை.. கங்குலி கருத்து
- Travel
ஆசியாவிலேயே மிக உயரமான பாராகிளைடிங் ஸ்பாட் – பிர் பில்லிங்கில் ஒரு சகாசச் சுற்றுலா!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஒருவருக்கு எந்த காரணங்களுக்கெல்லாம் நெஞ்சு வலி வர வாய்ப்பிருக்கு-ன்னு தெரியுமா?
இன்று மாரடைப்பால் ஏராளமான மக்கள் இறக்கிறார்கள். இதனாலேயே பலருக்கும் நெஞ்சு வலி வந்தால் பயமாக உள்ளது. ஒருவருக்கு நெஞ்சு வலி மாரடைப்பினால் மட்டும் வருவதில்லை, சில பாதிப்பில்லாத வேறு பல காரணங்களாலும் வரக்கூடும். ஆகவே ஒருவருக்கு வந்துள்ள நெஞ்சு வலி அபாயகரமானதா அல்லது பாதிப்பில்லாததா என்பதை அறிய, நெஞ்சு வலியுடன் வேறு சில அறிகுறிகளையும் கவனிக்க வேண்டியது முக்கியம்.
முக்கியமாக நெஞ்சு வலி ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் இதுக்குறித்து தெரிவிக்க வேண்டும். இதனால் அதற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்கு மருத்துவர் எந்த மாதிரியான சோதனைகள் தேவை என்பதை தீர்மானிக்க முடியும். இப்போது ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் நெஞ்சு வலி வரலாம் என்பதைக் காண்போம்.

சாப்பிட்ட பின் நெஞ்சு வலி
உங்களுக்கு நெஞ்சு எரிச்சலின் போது வலியை அனுபவிக்கக்கூடும். இந்த நெஞ்சு எரிச்சல் அதிகரிக்கும் போது, இந்த வலி முதுகு வரை பரவும். இம்மாதிரியான வலி பொதுவாக உணவு உண்ட பின்னர் ஏற்படும். நீங்கள் சாப்பிட்ட பின்னர் இம்மாதிரியான வலியை சந்தித்தால், அதாவது நெஞ்சு எரிச்சலுடன் வலியை சந்தித்தால், அதற்கு காரணம் உணவுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இம்மாதிரியான சூழ்நிலையில், இந்த வலிக்கு ஆன்டாசிட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் சற்று உயரமாக தலையை வைத்து படுக்க வேண்டும். இதற்கு 2 தலையணைகளை வைத்துக் கொண்டு படுக்க வேண்டும்.

சுவாசிக்கும் போது வலி
சிலருக்கு சுவாசிக்கும் போது நெஞ்சு வலி ஏற்படும். அப்படி இருந்தால், அவர்கள் சற்றும் யோசிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். அதே வேளையில் நெஞ்சு பகுதியில் இறுக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், முதலில் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா என்பதை கவனியுங்கள். இந்த மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதை தவிர்த்து, மனதை ரிலாக்ஸ் செய்து, அமைதியான இடத்தில் சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நெஞ்சில் குத்துவது போன்ற வலி
நீங்கள் மார்பு பகுதியில் குத்துவது போன்ற வலியை அனுபவித்தால், இதற்கு காரணம் உங்கள் விலா எலும்பு மற்றும் தசைகளில் ஏற்படும் எரிச்சலாக இருக்கலாம். இந்த நிலை டைட்ஸே நோய்க்குறி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உங்கள் விலா எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளில் நிச்சயம் வலி ஏற்படும். ஆனால் இந்த நிலை ஆபத்தானது அல்ல. ஆனால் சில நேரம் கழித்து தானாகவே சரியாகிவிடும்.
இம்மாதிரியான வலியானது பொதுவாக ஒரே இடத்தில் தவறான தோரணையில் அமர்வது அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படுகிறது. இந்த வலி சிறிது நேரம் கழித்து சரியாகாவிட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நுரையீரல்களால் ஏற்படும் வலி
சுவாசிக்கும் போது நெஞ்சு வலிகிறதா? அப்போது உங்களால் சுவாசிப்பது கடினமாக இருப்பதை உணர்கிறீர்களா? அதாவது உங்களால் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் போது கடுமையான வலியை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் இந்த வலி நுரையீரல் காரணமாக ஏற்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் மருத்துவரை சந்திப்பது நல்லது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் வலி
உங்களுக்கு கடுமையான நெஞ்சு வலி இருந்தால், அதுவும் போதுமான ஓய்வு எடுத்தும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை தான் காரணம். இந்த நெஞ்சு வலி வழக்கமாக அதிகமாக சாப்பிட்ட பிறகு அல்லது அதிக மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படலாம். இந்த நெஞ்சு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, படுத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். ஒருவேளை நிவாரணம் கிடைக்காவிட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.