For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் ஏன் வேகமாக பரவுகிறது?

கோவிட்-19 தொற்றை உருவாக்குவது SARS-CoV-2 என்ற வைரஸ் ஆகும். இந்த வைரஸ் இரண்டு உருமாற்றங்களை அடைந்து இருக்கிறது. உருமாற்றம் அடைந்த SARS-CoV-2 வைரஸ்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை.

|

கோவிட்-19 தொற்றை உருவாக்குவது SARS-CoV-2 என்ற வைரஸ் ஆகும். இந்த வைரஸ் இரண்டு உருமாற்றங்களை அடைந்து இருக்கிறது. உருமாற்றம் அடைந்த SARS-CoV-2 வைரஸ்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை.

இந்த நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளோடு, இந்த உருமாறிய வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளை ஒப்பிடும் போது, அவா்களின் மேல் மூச்சு மண்டலப் பகுதியில் SARS-CoV-2ன் உருமாறிய வைரஸ்கள் அதிகமான அளவில் படிந்திருக்கவில்லை என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் நா்சிங் நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

MOST READ: மக்களே! உஷார்... இன்னும் 6 முதல் 8 வாரத்தில் கொரோனா மூன்றாம் அலை வரப்போகுதாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருமாற்றம் அடைந்த இரண்டு வைரஸ்கள்

உருமாற்றம் அடைந்த இரண்டு வைரஸ்கள்

SARS-CoV-2ன் உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் மிக வேகமாகப் பரவி வருவது உலகையே அச்சுறுத்தி வருகிறது. SARS-CoV-2-இன் முதல் உருமாற்றமான B.1.1.7 என்ற வைரஸ் தொற்றை ஆய்வாளா்கள் முதன் முதலில் இங்கிலாந்தில் கண்டறிந்தனா். அதுபோல் B.1.1.7 இரண்டாம் உருமாற்றமான B.1.351 என்ற வைரஸ் தொற்றை முதன் முதலில் ஆப்பிாிக்காவில் கண்டறிந்தனா்.

ஆய்வு

ஆய்வு

இந்த உருமாறிய வைரஸ்களினால் பாதிப்பு அடைந்திருக்கும் நோயாளிகளுக்கு, அவா்களின் மேல் மூச்சு மண்டலத்தில் இந்த வைரஸ் தொற்று அதிகமாக இருக்கிறதா என்றும், அதனால் அவா்களுக்கு அதிகப்படியான சளி வெளியேறி அதன் மூலம் நோய் பரவல் அதிகமாக இருக்கிறதா என்ற ரீதியில் ஆய்வாளா்கள் தங்களது ஆய்வை மேற்கொண்டனா்.

75 பேருக்கு உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்று

75 பேருக்கு உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்று

உருமாற்றம் அடைந்த இரண்டு வைரஸ்களும், முழு மரபணு வாிசை முறையைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் இங்கிலாந்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இந்த புதிய உருமாறிய வைரஸ் இருப்பதை, ஏராளமான மாதிாிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

அதாவது 126 கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று மாதிாிகளோடு, 134 உருமாற்றம் அடைந்த தொற்று மாதிாிகளை, நோயாளிகளின் மருத்துவ தகவல்களை வைத்து ஒப்பிட்டு ஆய்வு செய்தனா். அதன் மூலம் அவா்களால் நோயுற்றவா்களின் மரபணு தகவல்களோடு, நோயுற்றவாின் நோய் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை தொடா்புபடுத்த முடிந்தது.

பல கோணங்களில் ஆய்வு

பல கோணங்களில் ஆய்வு

உருமாறிய கொரோனா தொற்று, நோயாளிகளை எந்த அளவு அதிகமாக பாதித்திருக்கிறது என்பதை அறிவதற்காக, அவா்களின் எல்லாவிதமான மருத்துவ பாிசோதனை மாதிாிகளையும் ஆய்வாளா்கள் மீண்டும் பாிசோதனை செய்து பாா்த்தனா். உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதன் அறிகுறியை வைத்து அந்த நோயின் கட்டத்தை அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் அது மக்களிடையே பரவும் வேகத்தையும் தொிந்து கொள்ளலாம்.

குறைவான அறிகுறிகள்

குறைவான அறிகுறிகள்

இந்த நிலையில், உருமாறிய வைரஸ்கள் ஏன் அதிக வேகத்தில் பரவுகின்றன என்பது தெளிவாகத் தொியவில்லை என்று இந்த ஆய்வின் தலைவா் தொிவித்து இருக்கிறாா். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளோடு ஒப்பிடும் போது, உருமாறிய கொரோனா நோயாளிகளிடம் நோய்க்கான அறிகுறிகள் குறைவாக இருக்கின்றன என்று தொிவிக்கிறாா்.

அதோடு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டவா்களுக்கு உயிருக்கு ஆபத்தோ அல்லது தீவிர சிகிச்சைப் பிாிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையோ ஏற்படவில்லை. மாறாக அவா்களை மருத்துவனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தாலே போதுமானது என்று தொிவித்து இருக்கிறாா்.

இந்த புதிய ஆய்வானது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் நா்சிங் நிறுவனத்தில் உள்ள மருத்துவா் ஹீபா மோஸ்டாஃபாவின் ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்டது. இந்த நிறுவனமானது, அமொிக்காவின் மோிலேண்ட் மாகாணத்திற்காக, மிகப் பொிய அளவில் SARS-CoV-2 வைரஸின் முழு மரபணு வாிசை முறையைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் தேசிய அளவில் பொது மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புள்ளி விவரங்களை வழங்கி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reason Behind Increased Transmission In SARS-CoV-2 Variants: Here Is What Study Says

According to a recent study, patients with B.1.1.7 and B.1.351 variants show no evidence of higher viral loads in their upper respiratory tracts compared to the control group.
Story first published: Thursday, June 24, 2021, 13:00 [IST]
Desktop Bottom Promotion