Just In
- 54 min ago
கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 1 hr ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 2 hrs ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Don't Miss
- Movies
சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் என்ன நடந்தது...வடிவேலுவின் ஜாலி வீடியோவுடன் அப்டேட் தந்த ராதிகா
- Sports
செஸ் ஒலிம்பியாட் 2022: பதக்கம் வென்றவர்கள் யார் யார்? இந்தியாவின் நிலை என்ன? - முழு பதக்கப்பட்டியல்!
- News
கிட்ட வாம்மா.. நீ என் தங்கச்சி..! தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல்! உருகிப் போன பக்தர்கள்!
- Finance
ப்ளேபாய் அட்டை படத்தில் டொனால்டு டிரம்ப்.. இந்த வேலை கூடவா டிரம்ப் செய்திருக்கிறார்..?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
1 வாரத்துக்கு நீங்க சர்க்கரையை சாப்பிடாமல் இருந்தா உங்க உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?
இனிப்பு சாப்பிடுவதை யார்தான் விரும்ப மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் இனிப்பை விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் ஏதாவது சந்தோஷமான விஷயம் நடந்தால், உடனே சர்க்கரை தான் கொடுத்து கொண்டாடப்படுகிறது. நாம் சும்மா வீட்டில் இருக்கும்போதே, நாவுக்கு இதமாக சர்க்கரையை அள்ளி வாயில் போட்டுக்கொள்வோம். நாம் தினமும் குடிக்கும் டீ, காபி மற்றும் ஜூஸில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. எதுவும் ஒரு அளவாக இருப்பது நல்லது. அதேபோல சர்க்கரையை அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அல்லது நள்ளிரவு சிற்றுண்டியாக ஒரு துண்டு கேக் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் நம்மில் பலருக்கு இருக்கும். சர்க்கரையை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால், உங்கள் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

சர்க்கரையை கைவிடுவது ஏன் கடினம்?
இனிப்புகள் உங்களுக்கு உடனடி சர்க்கரை ரஷ் கொடுக்கிறது. உங்களை நல்ல மனநிலையில் வைக்கிறது மற்றும் எந்த நேரத்திலும் உங்கள் ஆறுதல் உணவாக மாறும். எனவே அடுத்த முறை நீங்கள் அழுத்தமான சூழ்நிலையை சந்திக்கும் போது, உங்கள் மனம் தானாகவே இனிமையான ஒன்றைக் கோருகிறது. சர்க்கரையை நிறுத்துவது புகைபிடிப்பதை விட கடினமாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அது வழங்கும் உடனடி மனநிலை மாற்றத்தின் அளவு அப்படி இருக்கிறது.

சர்க்கரை ஏன் உங்களுக்கு மோசமானது?
எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு கல்லீரல், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் போன்றவை சர்க்கரையை வழக்கமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளில் சில. அதுமட்டுமின்றி, சர்க்கரை முகப்பருவையும் உங்கள் சருமத்தின் அமைப்பையும் சீர்குலைக்கும்.

நீங்கள் சர்க்கரையை நிறுத்தினால் என்ன நடக்கும்?
நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்த முடிவு செய்தால், உங்கள் உடல் முதல் நாளிலிருந்து மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்கும். நீங்கள் அதிக ஆற்றலுடனும், சற்று இலகுவாகவும் உணர்வீர்கள். சர்க்கரையை விட்டு வெளியேறிய ஒரு வாரத்திற்குள், உங்கள் சருமம் சுத்தப்படுத்தப்படுவதையும் நீங்கள் கவனிப்பீர்கள். பருக்கள் மற்றும் முகப்பருக்கள் குறைந்து, உங்கள் சருமம் மிருதுவாகி, உள்ளிருந்து பளபளப்பாக மின்னும்.

எடை குறைப்புக்கு உதவுகிறது
சர்க்கரையை நிறுத்துவதால் பெரும் மற்றொரு பெரிய நன்மை எடை இழப்பு. வறுத்த உணவுகள் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. நீங்கள் சர்க்கரையை முற்றிலுமாக விட்டுவிட்டால், இது விரைவான எடை இழப்புக்கு உதவும். மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியுடன் இணைந்தால், ஒரு வாரத்தில் 1 கிலோ வரை எடையை குறைக்க உதவும்.

மாற்று வழிகளுக்கு மாறவும்
சர்க்கரை வெற்று கலோரிகளைத் தவிர வேறில்லை. அதை விட கடினமாக இருந்தால், வெல்லம், தேன், தேங்காய் சர்க்கரை மற்றும் காந்த் போன்ற சில ஆரோக்கியமான மாற்றுகளுக்கு மாறவும். இந்த அனைத்து மாற்றுகளும் சர்க்கரையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. நீங்கள் குறைந்த கலோரி இனிப்புகளுக்கு மாற விரும்பினால், ஆரோக்கியமான இயற்கை இனிப்புகளில் ஒன்றான ஸ்டீவியாவைத் தேர்வு செய்யவும்.

இறுதி குறிப்பு
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவது ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம். ஒரு வாரத்தில் உங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி, அன்றைய தினம் உங்களுக்குப் பிடித்தமான இனிப்பைச் சாப்பிடுவது நல்லது. இந்த நாளில் நீங்கள் பட்டினி கிடக்காமல் அல்லது இனிப்புகளில் இருந்து விலகி இருக்காமல் தினமும் உங்கள் உடலில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைப்பீர்கள்.