For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹோலி நாட்களில் கொரோனா வைரஸ் பரவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

ஹோலி பண்டிகையையொட்டி நடக்கவிருக்கும் நிகழ்ச்சியான ஹோலி மிலன் என்னும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கொரோனா வைரஸ் பரவி வரும் காரணமாக கலந்து கொள்ளப் போவதில்லை.

|

உலகெங்கும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த வழக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. ஹோலி பண்டிகையையொட்டி நடக்கவிருக்கும் நிகழ்ச்சியான ஹோலி மிலன் என்னும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கொரோனா வைரஸ் பரவி வரும் காரணமாக கலந்து கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Precautions To Prevent Coronavirus During Holi

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் , "நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கூட்டமாக கொண்டாடும் விழாக்களைத் தவிர்க்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனால் இந்த ஆண்டு நான் ஹோலி மிலன் 2020 விழாவில் பங்கு கொள்ளப் போவதில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

இதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல பாஜக தலைவர்களும், அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
COVID-19: கொரோனா வைரஸ் மற்றும் ஹோலி

COVID-19: கொரோனா வைரஸ் மற்றும் ஹோலி

இருமல் மற்றும் சளி இருக்கும் நபர்களிடமிருந்து 3 அடி தள்ளி இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் ஹோலி போன்ற பண்டிகைகளில் இந்த கருத்தை செயல்படுத்துவது சற்று சவாலான காரியம் ஆகும். ஹோலி பண்டிகை என்பது பலரும் ஒருவருடன் ஒருவர் சந்தித்து மகிழும் விழாவாகும். இதனால் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மக்கள் அதிகமாக ஒருவருக்கொருவர் சந்திக்கும் இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எடுத்துக் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிபுணர்களிடம் பேசினோம். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி சில குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

COVID-19 - ஹோலி விளையாடும் போது ஜாக்கிரதையாக இருங்கள்

COVID-19 - ஹோலி விளையாடும் போது ஜாக்கிரதையாக இருங்கள்

கட்டிப்பிடிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

உங்களுக்கு இருமல், தும்மல் போன்ற பாதிப்புகள் இருந்தால், மற்றவர்களைத் தொடுவது, கட்டிப்பிடிப்பது அல்லது மற்றவர்கள் மேல் வண்ணம் பூசுவது போன்றவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் இந்த பாதிப்பு உள்ள நபருடன் பழக வேண்டி இருந்தால். உடனே உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவி கொள்ளுங்கள்.

கை கழுவுவது மிகவும் அவசியம்

கை கழுவுவது மிகவும் அவசியம்

20 வினாடிகள் தொடர்ச்சியாக கைகழுவுவது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் கைகளின் பின்புறம், விரல்களுக்கு இடையில், நகங்களுக்கு அடியில் என்று எல்லா இடங்களையும் சுத்தமாகக் கழுவ வேண்டும். தும்மும் போது அல்லது இருமும் போது தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாஸ்க் அல்லது துணி கொண்டு வாயை மூடிக் கொள்ளலாம்.

ஹோலி நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்த்திடுங்கள்

ஹோலி நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்த்திடுங்கள்

இருமல், தும்மல், சாதாரண சளி போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், உடல் நலமில்லாமல் இருப்பவர்கள், வெளியில் சென்று ஹோலி விளையாடுவதைத் தவிர்க்கலாம். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பதால் தேவையில்லாமல் கிருமிகள் பரவ வழி கொடுக்க வேண்டாம்.

அயல்நாட்டினர் மற்றும் பயணிகள்

அயல்நாட்டினர் மற்றும் பயணிகள்

இந்தியாவில் அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. ஆகவே இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கிய வழக்குகள் அறியப்படும் பகுதிகளில் பயணம் செய்தவர்கள் வெளியில் சென்று ஹோலி விளையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் அறிகுறிகள் மீது கவனம் செலுத்துங்கள்

உங்கள் அறிகுறிகள் மீது கவனம் செலுத்துங்கள்

கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கிய நாடுகளுக்கு நீங்கள் பயணித்து இருந்தால் அதிக கூட்டம் சேரும் இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டாம். ஹோலி விளையாட வேண்டாம். நீங்கள் நலமாக இருந்தால் கூட இவ்விதமான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம். 15 நாட்கள் கழித்தும் இதற்கான அறிகுறிகள் உங்களுக்கு தென்படும் வாய்ப்பு உண்டு.

சுத்தத்தை பேணுங்கள்

சுத்தத்தை பேணுங்கள்

ஹோலி விளையாடும் மற்றவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சுகாதார பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஹோலி விளையாடி முடித்தவுடன் கைகளை சுத்தமான சோப்பு, ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர் கொண்டு கழுவலாம் அல்லது குளிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Precautions To Prevent Coronavirus During Holi

Here are some safety precautions to prevent coronavirus during holi. Read on...
Desktop Bottom Promotion