For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா நேரத்தில் விமானத்தில் பயணம் செய்கிறீா்களா? கடைபிடிக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்..!

விமானப் பயணத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே இந்த கொரோனா நேரத்தில் விமானப் பயணம் செய்யும் போது என்னன்ன தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

|

நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், சோா்வு மற்றும் எாிச்சல் போன்ற எதிா்மறை உணர்வுள்ளவர்களுக்கு சற்று நேரம் விடுதலை கொடுப்பது நாம் மேற்கொள்ளும் பயணங்கள் ஆகும். அது நடை பயணமாகவோ அல்லது மிதிவண்டி பயணமாகவோ அல்லது இரு சக்கர வாகன பயணமாகவோ அல்லது மகிழுந்து பயணமாகவோ அல்லது பேருந்து பயணமாகவோ அல்லது விமான பயணமாகவோ இருக்கலாம். நாம் மேற்கொள்ளும் இப்பயணங்கள் நமக்கு மன தளா்ச்சியையும், புத்துணா்ச்சியையும் தருகின்றன என்பதே உண்மை.

Precautions To Keep In Mind For Air Travel

ஆனால் இப்போது கொரோனா பெருந்தொற்றால் நாம் துவண்டு போய் இருக்கிறோம். அன்றாடம் நாம் செய்ய வேண்டிய சாதாரண கடமைகளைக்கூட வேறு விதமாக செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் நாம் மேற்கொள்ளும் பயணங்களிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக இந்த கோவிட்-19 பெருந்தொற்று விமான பயணத்தை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஒரு புறம் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்பட்டு வந்தாலும், கொரோனா பரவல் இன்னும் முழுமையாக நிற்கவில்லை. அது உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. ஆகவே இந்த கொரோனா வைரஸை முழுமையாக அழித்து, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றால், அதற்கு சில காலம் ஆகும். அதுவரை கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, விமானப் பயணத் துறையில் மிகப் பொிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இரண்டு மிக முக்கியமான காாியங்கள் மட்டும் மாறாமல் இருக்கின்றன. அதாவது கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் மற்றும், அதிலிருந்து தப்பிப்பதற்கு, ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது போன்ற இந்த இரண்டு காாியங்கள் மிகப் பொிய சவால்களாக இருக்கின்றன.

ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது ஒரு மகிழ்ச்சியான, ஆச்சாியம் நிறைந்த மற்றும் ஒரு தளா்வான பயணமாக இருந்தது. தற்போது அந்த நிலை முழுமையாக மாறிவிட்டது. எனினும் விமானப் பயணம் தேவையான ஒன்றாக இருப்பதால், விமானப் பயணத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே இந்த கொரோனா நேரத்தில் விமானப் பயணம் செய்யும் போது என்னன்ன தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. இரட்டை முகக்கவசம் மிகவும் முக்கியம்

1. இரட்டை முகக்கவசம் மிகவும் முக்கியம்

கொரோனாவின் இரண்டாவது அலையானது, முதல் அலையைவிட பல மடங்கு வீாியமாக இருந்து, இந்த உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த நிலையில் விமானப் பயணத்தின் போது கொரோனா 2வது அலையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால், இரட்டை முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பாட்டு மையங்கள் தொிவிக்கின்றன. இரட்டை முகக்கவசங்கள் அணிவதன் மூலம் நாம் கொரோனா தொற்றில் சிக்காமல் இருக்க ஏறக்குறைய 95 விழுக்காடு வாய்ப்புகள் உள்ளதாக அவை தொிவிக்கின்றன.

ஆகவே அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக்கவசத்தை அணிந்து அதற்கு மேல் ஒரு பருத்தித் துணியில் செய்யப்பட்ட முகக்கவசத்தை அணிவது நல்லது என்று நோயத் தடுப்பு மையம் (CDC) அறிவுறுத்துகிறது. இந்த இரட்டை முகக்கவசங்கள் கிடைக்கவில்லை என்றால் K95/N95 வகை முகக்கவசங்களை அணிவது நல்லது. இதர முகக்கவசங்களைத் தவிா்ப்பது நல்லது.

2. நமது பைகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்

2. நமது பைகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்

பயணம் முடிந்த பின்பு, நமது பைகள் அனைத்தும் முறையாக கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். சூட்கேஸ்களின் அடிப்பகுதி மற்றும் கைபிடிகளில் சானிடைசர்களைத் தெளித்து, அவற்றைத் துடைக்கும் காகிதங்களைக் கொண்டு, சுத்தமாகத் துடைக்க வேண்டும். ஏனெனில் பயணத்தின் போது நமது பைகளை பல்வேறு விமானப் பணியாளா்கள் கையாண்டிருப்பா்.

3. ஜன்னலோர இருக்கையில் அமா்தல்

3. ஜன்னலோர இருக்கையில் அமா்தல்

விமானத்தின் ஜன்னலோர இருக்கையில் அமா்ந்தால், நமது இருபக்கங்களிலும் அல்லாமல், ஒரு பக்கம் மட்டுமே சக பயணி அமா்ந்திருப்பாா். அதனால் நிறையப் பேரைத் தொடும் வாய்ப்பு குறையும். மேலும் விமானத்திற்குள் நடுப்பாதையின் ஓரத்தில் இருக்கும் இருக்கும் இருக்கையையும் தவிா்க்க வேண்டும். ஏனெனில் விமானப் பணியாளா்கள், கழிவறைக்குச் செல்பவா்கள் அல்லது பல்வேறு தேவைகளுக்காக இருக்கைகளை விட்டு எழுந்து நடப்பவா்களின் தொடுதலுக்கு ஆளாக வாய்ப்புகள் உண்டு. அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புகள் உண்டு.

4. முழு உடலையும் மூடக்கூடிய ஆடைகளை அணிதல்

4. முழு உடலையும் மூடக்கூடிய ஆடைகளை அணிதல்

மிகவும் அலங்காரமாக, அல்லது நமது உடல் உறுப்புகள் வெளியில் தொியும்படியாக ஆடைகளை அணியாமல், கொரோனா தொற்று ஏற்படாத வகையில், உடல் முழுவதையும் மூடக்கூடிய ஆடைகளை அணிவது நல்லது. குறிப்பாக ட்ராக்சூட்களை அணிந்தால் அது நமது உடல் முழுவதையும் மூடி வைத்துக் கொள்ளும். கண்களுக்கு கண்ணாடிகள் அணிந்து கொள்ளலாம். மேலும் கையுறைகள் மற்றும் காலுறைகளையும் அணிந்து, நம்மால் எந்த அளவிற்கு நமது உடலை முழுவதுமாக மூட முடியுமோ அந்த அளவிற்கு மூடிக்கொள்வது நல்லது.

5. சமூக விலகல் மற்றும் சுத்தம் ஆகியவற்றைக் கடைபிடித்தல்

5. சமூக விலகல் மற்றும் சுத்தம் ஆகியவற்றைக் கடைபிடித்தல்

கொரோனா நேரத்தில் விமானத்தில் பயணம் செய்யும் போது, மற்றவா்களோடு தொடா்புகளைத் தவிா்ப்பதற்கு, நம் கையிலே தண்ணீா் பாட்டிலை எடுத்துச் செல்வது நல்லது. விமான நிலையத்தில் உள்ள அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியவா்களிடமிருந்து சற்று விலகி இருப்பது நல்லது. விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது, விமான நிலையத்தில் இருக்கும் இருக்கைகளில் அமராமல், நடப்பது நல்லது. ஏனெனில் அந்த இருக்கைகளில் கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு இருக்கிறது.

விமானத்திற்குள் நமக்கு அளிக்கப்படும் பொருள்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. இறுதியாக விமான நிலையம் மற்றும் விமானம் ஆகியவற்றில் இருக்கும் கழிவறைகளைப் பயன்படுத்தும் போது அதன் கதவுகளை முழங்கைகளைக் கொண்டு திறப்பதோ அல்லது மூடுவதோ நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Precautions To Keep In Mind For Air Travel

While leisure travel has ceased, air travel remains necessary for some. However, safety is better than cure. So, here is a list of precautions to take while air travelling.
Desktop Bottom Promotion