For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க ஏ இரத்த வகையா? அப்ப உங்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பிருக்கு- அமெரிக்க ஆய்வில் தகவல்

ஏ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு சீக்கிரம் பக்கவாதம் வரக்கூடும். அதே நேரத்தில் ஓ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு மற்ற வகை இரத்த பிரிவையும் விட ஆபத்து குறைவாக உள்ளது என்று அமெரிக்க ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது

|

ஒவ்வொரு இரத்த வகையினருக்கும் ஒவ்வொரு நோய்களின் அபாயம் அதிகம் இருக்கும். அந்த வகையில் ஏ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு சீக்கிரம் பக்கவாதம் வரக்கூடும். அதாவது 60 வயதுக்கு முன்னரே பக்கவாதம் வரக்கூடும். அதே நேரத்தில் ஓ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு மற்ற வகை இரத்த பிரிவையும் விட ஆபத்து குறைவாக உள்ளது என்று அமெரிக்க ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

People With Blood Type A More Likely To Have A Stroke Before Age 60

ஒருவரின் இரத்த வகை ஆரம்பகால பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் இணைக்கப்படலாம் என்று பால்டிமோரில் உள்ள மேரிலாண்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசன் பல்கலைகழகத்தைச் (UMSOM) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான புதிய மெட்டா பகுப்பாய் கூறுவது குறித்த ஒரு கட்டுரை மருத்துவ இதழான நியூராலஜியில் வெளியிடப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

மேரிலாந்து மருத்துவ மையத்தின் நரம்பியல் நிபுணரும், ஆய்வின் இணை முதன்மை ஆய்வாளர் ஸ்டீவன் ஜே. கிட்னர் மற்றும் அவரது ஆய்வு குழு, மரபியல் மற்றும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் குறித்த 48 வெவ்வேறு ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 17,000 பக்கவாதம் நோயாளிகள் மற்றும் 600,000 ஆரோக்கியமானவர்களின் பகுப்பாய்வும் அடங்கும். இதைத் தொடர்ந்து, அவர்கள் சேகரிக்கப்பட்ட அனைத்து குரோமோசோம்களிலும் பக்கவாதத்துடன் தொடர்புடைய மரபணு மாறுபாடுகளைக் கண்டறிந்தனர். இறுதியில் ஆரம்பகால பக்கவாதம் மற்றும் இரத்த வகையை நிர்ணயிக்கும் மரபணுவைக் கொண்ட குரோமோசோமின் பகுதி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறிந்தனர்.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

இந்த ஆய்வில் மற்ற இரத்த வகையைக் காட்டிலும் ஏ இரத்த வகையைச் சேர்ந்தவர்கள் ஆரம்பகால பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் 18 சதவீதம் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதே வேளையில், ஓ இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு ஆரம்பகால பக்கவாதம் ஏற்படும் அபாயம் 12 சதவீதம் குறைவாக இருந்தது தெரிய வந்தது.

பக்கவாதம் என்றால் என்ன?

பக்கவாதம் என்றால் என்ன?

பக்கவாதமானது மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த விநியோகம் துண்டிக்கப்படும் போது ஏற்படுகிறது. சில சமயங்களில் இரத்தக் குழாயின் சிதைவு காரணமாக இரத்தப்போக்கு ஏற்படலாம் அல்லது மூளைக்கு செல்லும் சிறு இரத்தக்குழாய்களில் சிறு இரத்த உறைவினாலும் ஏற்படலாம்.

தற்போது ஆரம்பகால பக்கவாதம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பக்கவாதம் வருபவர்கள் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் பக்கவாதம் வந்து உயிர் பிழைத்தவர்கள் பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருக்கின்றனர். இருப்பினும், ஆரம்பகால பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த சிறு ஆய்வும் இல்லை. எனவே இதை கண்டறியும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதே இந்த ஆராய்ச்சி என்று மேரிலாந்து மருத்துவ மையத்தின் நரம்பியல் நிபுணரும், ஆய்வின் இணை முதன்மை ஆய்வாளர் ஸ்டீவன் ஜே. கிட்னர் கூறினார்.

ஏ இரத்த வகையினர் ஏன் அதிக ஆபத்தில் உள்ளனர்?

ஏ இரத்த வகையினர் ஏன் அதிக ஆபத்தில் உள்ளனர்?

இந்த அமெரிக்க ஆய்வில் ஏ இரத்த வகையினர் ஏன் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த இரத்த வகையினருக்கு இரத்த உறைவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது என்று கிட்னர் கூறினார். ஏனெனில் முந்தைய ஆய்வுகளில் ஓ இரத்த வகையினருடன் ஒப்பிடும் போது, டைப்-ஏ இரத்த வகையினருக்கு நரம்பு இரத்த உறைவு எனப்படும் கால்களில் இரத்த உறைவு ஏற்படுவதற்கான ஆபத்து சற்று அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இரத்த உறைவு பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்றவற்றை எளிதில் வரத் தூண்டும்.

புற்றுநோயிலும் இதேப்போன்ற தொடர்பு...

புற்றுநோயிலும் இதேப்போன்ற தொடர்பு...

2017 ஆம் ஆண்டு PLOS One என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், புற்றுநோயிலும் இதேப்போன்ற தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதாவது இரத்த வகை ஏ உடன் ஒப்பிடும் போது பி இரத்த வகையினருக்கு குறிப்பிட்ட புற்றுநோய்களின் அபாயம் குறைவாக இருந்தது. முக்கியமாக பி மற்றும் ஏபி ஆகிய இரண்டு இரத்த வகையினருக்கு இரைப்பை குடல் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் குறைவாக இருந்தது என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People With Blood Type A More Likely To Have A Stroke Before Age 60

People who have the blood group type A are more likely to suffer a stroke before the age of 60 than those with the most common blood type O, a new study reports.
Story first published: Thursday, September 1, 2022, 15:02 [IST]
Desktop Bottom Promotion