For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பக்கவாதம் யாருக்கு வரும் - ஜோதிட காரணங்களும் நோய் தீர்க்கும் பரிகாரமும்

|

நல்லா இருந்த மனுசன் இப்படி கை கால் வராம விழுந்து கிடக்கிறாரே என்று பேசிக்கொள்வார்கள். நடமாட்டத்தில் இருந்த மனிதர்தான் திடீர் என்று வாய் கோணி, ஒரு பக்கம் கை கால்கள் இழுத்துக்கொண்டு படுத்து விடுவார். பக்கவாதம் என்று டாக்டர்கள் சொன்னபின்னர்தான் தெரியும். ஆனால் அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே உணர்த்தியிருக்கும். அதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு ஆளையே படுக்க வைத்து விடும். பக்கவாதம் வந்து விட்டதே என்று பயப்பட வேண்டாம். அதற்கு சரியான சிகிச்சையும் பரிகாரமும் செய்தால் நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு போன்றவை பக்கவாதத்தின் அறிகுறியாகும். நடக்கும்போது தள்ளாடுதல் நேராக நிற்க முடியாத நிலைமை வரும். ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தெரிந்த உடனே சுதாரித்தால் நோய் பாதிப்பில் இருந்து ஆளை காப்பாற்றலாம்.

Paralysis

பக்கவாதம் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுகிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, அல்லது உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ வருகிறது. வாதநோயில் 80 வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படுவது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பொதுவாக ஆண், பெண்களுக்கு கால் மூட்டுகளில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கிறது. சைனோவியல் என்ற சவ்வுக்குள் இந்தத் திரவம் இருக்கும். இந்தத் திரவம் வயது ஆக ஆக குறைவாக சுரக்கும். இதனால் இரண்டு மூட்டுகளும் சந்திக்கிற இடத்தில் ஒன்றோடொன்று உராயத் தொடங்கும். இதனால் உண்டாவதுதான் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பக்கவாதம் வர காரணம்

பக்கவாதம் வர காரணம்

உடல் செயல் இழக்க காரணம்

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதை ஸ்டோர்க் அல்லது பக்கவாதம் என்று சொல்கிறோம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு காரணமாக அமைகின்றனர். முன் அறிவிப்புகள் எதுவுமின்றி பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது.

அதிகாலையில் பக்கவாதம்

அதிகாலையில் பக்கவாதம்

நோயின் தன்மை

மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு, ரத்த நாளங்களில் சிதைவு ஏற்பட்டாலும் கூட இந்த நோய் வரலாம். வலது பக்க மூளைப்பகுதி பாதித்தால் உடலின் இடது பக்கம் முழுவதும், இடது பக்க மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் முழுவதும் பாதிப்பு உண்டாக்குவதே இந்த நோயின் தன்மை. இந்தப் பாதிப்பு பெரும்பாலும் அதிகாலையில் தான் தெரியும். வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

ஜோதிட ரீதியாக பக்கவாதம்

ஜோதிட ரீதியாக பக்கவாதம்

பக்கவாதம் யாருக்கு வரும்

ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இனைவு பெறுவது, அசுப பரிவர்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தபடுவது , காலபுருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனத்தில் சனி, சுக்ரன் போன்ற கிரகங்கள் நிற்பது, ஜாதகத்தின் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயை தெரிவிக்கிறது.

ஜாதக ரீதியாக கடகத்தில் சூரியன் நின்று சனியுடன் எந்தவிதத்திலாவது தொடர்பு கொள்வது. லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6ம் வீட்டில் நிற்பது. சூரியனும் சுக்ரனும் தசா புத்தி நாதர்களாக அமைவது. சனியும் செவ்வாயும் 6 அல்லது 12 வீட்டில் நிற்பது வாத நோயை ஏற்படுத்தும்.

சூரியன் சனி தொடர்பு

சூரியன் சனி தொடர்பு

வாத நோய்க்கு காரணமான கிரகம்

பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இனைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது. எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது.

என்ன சாப்பிடக்கூடாது

என்ன சாப்பிடக்கூடாது

இதெல்லாம் சாப்பிடாதீங்க

உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுப்பொருட்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது முக்கியம். நேரம் தவறாமல் சாப்பிடுங்க சரியான தூங்கி எழுந்தாலே நோய்கள் எட்டிப்பார்க்காது.

வெங்காயம் நல்லது

வெங்காயம் நல்லது

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது

வெங்காயம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதய தமனிகள் தடிமனாவதை தடுக்கிறது. முக்கியமான நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மூளையின் செயல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கோவைக்காய் சூரணத்தை சாப்பிட்டு வர பூரண குணமாகும். பித்தம் மற்றும் கபம் நோய்களுக்கும் இது கண்கண்ட மருந்தாகும். மேலும் தோல் தொடர்புடைய அனைத்து நோய்களையும் இது குணமாக்கும். உப்பு, புளியை தொடவே கூடாது. உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

முடக்கு வாதம் போக்கும் முடக்கத்தான்

முடக்கு வாதம் போக்கும் முடக்கத்தான்

மூட்டுவலி குறைக்கும் இலைகள்

முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்துக் காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற பிரச்சினைகள் குறையும்.

பரிகாரம் என்ன

பரிகாரம் என்ன

சூரிய நமஸ்காரம் நல்லது

சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பது எலும்புக்கு காரகனாம் சூரியனுக்கு உகந்தது. புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவகிரக புதன் சன்னதிகளில் நரம்பை பலப்படுத்தும் புரத சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்து பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடலாம். சனி கிழமை மற்றும் புதன் கிழமைகளில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Paralysis : An Astrological Analysis remedies

Stroke is the death of or damage to brain cells from lack of oxygen, caused by disruption of blood flow to the brain. A stroke can be caused by, among other things, a cerebral hemorrhage, which can be caused by, among other things, an aneurysm.
Story first published: Wednesday, July 24, 2019, 11:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more