For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாளைக்கு இத்தனை தடவைக்கு மேல கசாயம் குடிக்காதீங்க... இல்லன்னா அதுவே உங்களுக்கு எமனாயிடும்...

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் ஒரு பெரிய ஆயுதம் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி. ஆயுஷ் அமைச்சகத்தின் படி, ஒரு நாளைக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருவர் 2 கப் மட்டும் கசாயத்தை குடிக்க வேண்டும்.

|

கொடிய கொரோனா வைரஸ் பரவும் காலத்தில், இந்த வைரஸில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புடன் இருக்க பலரும் பலவிதமான கசாயங்களைத் தயாரித்துக் குடித்து வருகின்றனர். சிலர் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து 6 மாதங்களுக்கும் மேலாகியும் இன்னும் இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Overdose Of Immunity Boosting Kashayam Is Harmful For Your Health

நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கொடிய வைரஸை எதிர்த்துப் போராட ஒரே வழியாக ஒருவரரு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே தற்போது மக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் பலமுறை கசாயங்களைத் தயாரித்துக் குடித்து வருகிறார்கள்.

MOST READ: கொரோனாவால தான் இருமல் வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்குறது? அப்ப இத படிங்க...

ஆனால் அளவுக்கு அதிகமாக கசாயம் குடிப்பது நல்லதல்ல என்றும், அது பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் பலமுறை கசாயத்தைக் குடிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் உணவுகள் எதுலாம் தெரியுமா? இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிபுணர்கள் சொல்வது என்ன?

நிபுணர்கள் சொல்வது என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் பட்டை, சீந்தில் கொடி, மிளகு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது அல்சர், வயிற்று வலி அல்லது நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அதோடு இது கல்லீரலையும் சேதப்படுத்தும். குறிப்பாக ஒருவர் அதிகப்படியான மசாலாப் பொருட்களை எடுத்தால், அது கடுமையான வயிற்று வலி, அசிடிட்டி போன்றவற்றை உண்டாக்குவதாகவும், அதிகளவு சீந்தில் கொடியை பயன்படுத்தினால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று குறைத்துவிடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோயெதிர்ப்பு சக்தி Vs கொரோனா வைரஸ்

நோயெதிர்ப்பு சக்தி Vs கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் ஒரு பெரிய ஆயுதம் தான் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி. தற்போது பலரும் பல வகையான நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பானங்களைத் தயாரித்து குடித்து வருகிறார்கள். சிலர் அஸ்வகந்தா, மிளகு, துளசி, கிராம்பு, பூண்டு, பெருங்காயம் போன்றவற்றைக் கொண்டு கசாயத்தையும், இன்னும் சிலர் ஒரு நாளைக்கு பல முறை வைட்டமின் சி மாத்திரைகளையும் எடுக்கிறார்கள். ஆனால் ஒரு நாளைக்கு எவ்வளவு கசாயம் குடிப்பது நல்லது மற்றும் எப்போது வைட்டமின் சி மாத்திரைகளை எடுப்பது என்பது தெரியாத காரணத்தினால், சமீப காலமாக பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகிறார்கள்.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் கசாயம்

சர்க்கரை நோயாளிகள் மற்றும் கசாயம்

தற்போதைய பெருந்தொற்று காலத்தில் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரை அடிக்கடி சந்திக்க முடியாத காரணத்தினால், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பலர் சீந்தில் கொடியைப் பயன்படுத்துகிறார்கள். இதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையில் தள்ளப்படுகின்றனர். அதோடு கர்ப்பிணிகள் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதற்காக கண்ட கசாயத்தைக் குடித்தால், அது கருக்கலைப்பைக் கூட ஏற்படுத்தும். மேலும் வைட்டமின் சி-யை அதிகமாக உட்கொள்வது வாந்தி, வயிற்று பிரச்சனைகள் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாயம் மற்றும் அதன் நன்மைகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாயம் மற்றும் அதன் நன்மைகள்

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும், மாநிலங்களுக்கும் ‘ஆயுஷ் குவாத்' பெரிய அளவில் உற்பத்தியைத் தொடங்குமாறு ஒரு கடிதத்தை வெளியிட்டது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நாளும் இரண்டரை கிராம் மஞ்சள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதிக அளவு மஞ்சள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதிகளவு மஞ்சள் மற்றும் வைட்டமின் சி-யின் விளைவு

அதிகளவு மஞ்சள் மற்றும் வைட்டமின் சி-யின் விளைவு

* ஒரு நாளைக்கு 8 கிராமிற்கும் அதிகமாக மஞ்சளை எடுத்தால், அதனால் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

* ஒரு நாளைக்கு 1 கிராம் வைட்டமின் சி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆனால் அதுவே அதிகமானால், அது சிறுநீரகங்களை சேதப்படுத்துவதோடு, சிறுநீரக கற்களையும் உண்டாக்கும்.

எவ்வளவு கசாயம் குடிக்கலாம்?

எவ்வளவு கசாயம் குடிக்கலாம்?

ஆயுஷ் அமைச்சகத்தின் படி, ஒரு நாளைக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருவர் 2 கப் மட்டும் கசாயத்தை குடிக்க வேண்டும். அதுவும் பால் கலந்த டீயைக் குடிக்கும் நேரத்தில், அதற்கு பதிலாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாயத்தைக் குடிக்க ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு குடிப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் பருமன் குறைந்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Overdose Of Immunity Boosting Kashayam Is Harmful For Your Health in Tamil

Did you know overdose of immunity boosting kashayam is harmful for your health? Read on to know more...
Desktop Bottom Promotion