For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதை சாப்பிட்டால் உங்களை அறியாமலேயே சிறுநீர் வெளியேறுவதை ஈஸியா தடுக்கலாம் தெரியுமா?

எந்தவொரு எச்சரிக்கை அறிகுறியும் இல்லாமல், உங்கள் சிறுநீர்ப்பையின் தசைகள் திடீரென சுருங்கும்போது அதிகப்படியான சிறுநீர்ப்பை ஏற்படுகிறது.

|

அதிகப்படியான சிறுநீர்ப்பை கையாள்வது மிகவும் சவாலான பணியாகும். சிறுநீர் கழித்தலில் கட்டுப்பாடு கொள்ள முடியாத நிலை ஒருவர் தனக்கு சிறுநீர் வரும்போது அடக்கிக் கொள்ள முடியாமல் கசியவிட்டுவிடுவதை இது குறிக்கும். இந்த பிரச்சனையால் எப்போது வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்க நேரிடும். இது அசெளகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் வெளியில் செல்லும்போது, முக்கியமான சந்திப்பு அல்லது நிகழ்வின் நடுவில் இருக்கும்போது சிறுநீர் கசிவது உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும். எந்தவொரு எச்சரிக்கை அறிகுறியும் இல்லாமல், உங்கள் சிறுநீர்ப்பையின் தசைகள் திடீரென சுருங்கும்போது அதிகப்படியான சிறுநீர்ப்பை ஏற்படுகிறது.

Overactive Bladder Diet: Foods to Eat and Avoid

கழிவறைக்கு அடிக்கடி பயணிப்பதால் இந்த நிலை இரவில் உங்கள் தூக்கத்தை கூட பாதிக்கலாம். ஆச்சரியப்படும் விதமாக, சில உணவுகள் அதிகப்படியான சிறுநீர்ப்பையின் அறிகுறிகளை தீவிரமாக்கும். ஏனெனில், அவை உங்கள் சிறுநீர்ப்பை எரிச்சலூட்டும் உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே இந்த உடல்நிலையை கையாளும் போது, நீங்கள் நாள் முழுவதும் எந்த உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் அதிகப்படியான சிறுநீர்ப்பை கையாளுகிறீர்கள் என்றால், சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்பிட வேண்டிய உணவுகள்

சாப்பிட வேண்டிய உணவுகள்

வாழைப்பழம்

அதிகளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் உங்கள் சிறுநீர் பாதைக்கு சிறந்தது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது எளிதில் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. வாழைப்பழம் பொதுவாக உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. நீங்கள் முழு பழத்தையும் அப்படியே சாப்பிடலாம் அல்லது வாழைப்பழ மிருதுவாக்கி குடிக்கலாம்.

MOST READ: கொரோனா வைரஸ் உங்க உடலுக்குள் நுழைஞ்சதுக்கு அப்புறம் என்ன செய்யும் தெரியுமா?

நட்ஸ்

நட்ஸ்

முந்திரி, பாதாம் மற்றும் வேர்க்கடலை ஆகியவை அதிகப்படியான சிறுநீர்ப்பையுடன் கையாளும் போது உங்கள் உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இவை புரதத்தால் நிரம்பியுள்ளன மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக உங்களுக்கு இருக்கும். மேலும், இவை நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.

வெள்ளரி

வெள்ளரி

தற்போது கோடைகாலம் என்பதால், நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியை அனைவரும் விரும்புவர். வெள்ளரிக்காயின் பருவமும் இதுதான். ஆக்ஸிஜனேற்றிகள், ஃபைபர் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் வெள்ளரியில் நிரம்பியுள்ளன. சிறுநீர்ப்பை பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆரோக்கியமான சிறுநீர்ப்பைக்கு ஒரு பெரிய கிண்ணம் வெள்ளரி சாலட் சாப்பிடுங்கள்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அவை பாலிபினால்கள் போன்ற சேர்மங்களால் நிரம்பியுள்ளன. ஆதலால், பருப்பு வகைகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.

MOST READ: வீட்டிலேயே தயாரிக்கும் இந்த டீ உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம்!

சாப்பிடக்கூடாத உணவுகள்

சாப்பிடக்கூடாத உணவுகள்

காரமான உணவுகள்

காரமான உணவுகள் உங்கள் சிறுநீர்ப்பை பிரச்சினையை மோசமாக்கும். எனவே, அதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. சூடான மிளகு சாஸ் அல்லது காரமான உணவை சாப்பிடுவது உங்கள் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும்போதும் எரிச்சல் ஏற்படும்.

காபி

காபி

அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சிறுநீர்ப் பிரிப்பு (டையூரிடிக்) என்பார்கள். அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். மேலும் சிறுநீர்ப்பை எரிச்சலூட்டும். எனவே சிறுநீர்ப்பை பிரச்சினைகள் இருந்தால், காபி உட்கொள்ளலைக் குறைக்கவும். காஃபின் உட்கொள்வதால் உங்கள் சிறுநீரகம் அதிக சிறுநீரை உண்டாக்குகிறது. இதன் விளைவாக உங்கள் சிறுநீர்ப்பை அதிக உணர்திறன் பெறுகிறது.

MOST READ: கொரோனா காலத்தில் 'குடி'மகன்கள் ஆல்கஹாலுக்கு பதிலாக இத ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும்...!

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, தக்காளி, குருதிநெல்லி போன்ற சிட்ரஸ் பழங்கள் உங்கள் உணவில் ஒரு பகுதியாக சேர்க்கக்கூடாது. சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை மற்றும் சிறுநீர் பாதையை எரிச்சலூட்டும் தன்மையுடையவை. அவுரிநெல்லிகள் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற குறைந்த அமில பழங்களை குறைந்தளவு சாப்பிடலாம்.

செயற்கை சர்க்கரை

செயற்கை சர்க்கரை

செயற்கை சர்க்கரை அதிகப்படியான சிறுநீர்ப்பையின் அறிகுறிகளை மோசமாக்கும். அஸ்பார்டேம், சக்கரின் மற்றும் பிற செயற்கை இனிப்புகளை உட்கொள்ள வேண்டாம். எந்தவொரு தயாரிப்புகளையும் வாங்குவதற்கு முன் லேபிள்களை சரிபாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Overactive Bladder Diet: Foods to Eat and Avoid

Here we are talking about the foods you should eat and avoid for your overactive bladder.
Desktop Bottom Promotion