For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! திடீர்னு உங்க வாய்ல இந்த மாதிரி பிரச்சனைலாம் வருதா? அப்ப அது கொரோனாவா இருக்கலாம்...

|

ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் பிடியில் இருந்து தப்பிக்க நாமும் பலவாறு முயற்சித்து வருகிறோம். கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய காலத்தில், இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத் திணறல் போன்றவை கூறப்பட்டு வந்தன. நாளடைவில் இந்த நோய்த்தொற்றின் அறிகுறி பட்டியல் நீண்டு கொண்டே போனது. அதில் வாசனை மற்றும் சுவை உணர்வை இழப்பது கொரோனா வைரஸின் மிகவும் உறுதியான அறிகுறிகளாக இருந்தன. மேலும் முழுமையாக குணமடைய வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்பட்டன.

ஆய்வுகளின் படி, சுமார் 60%-க்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகளில் இந்த அறிகுறிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், SARS-COV-2 வைரஸ் இப்படி மட்டும் உங்கள் சுவைமொட்டுகளை பாதிப்பதில்லை. இது பல வழிகளில் வாய் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இப்போது இதுக்குறித்து தான் விரிவாக பார்க்கப் போகிறோம்.

MOST READ: மக்களே! இந்தியாவில் கொரோனா அதிகரிக்க இது தான் முக்கிய காரணமாம்.... உஷாரா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை

ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை

நேச்சர் மெடிசின் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்) நடத்திய புதிய ஆய்வின்படி, கோவிட் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் நோய்த்தொற்றின் போது வாய்வழி அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனாவின் குறிப்பிட்ட சில அறிகுறிகள் மட்டுமே காணக்கூடியதாக இருப்பதால், வல்லுநர்கள் தற்போது ஏராளமான வாய்வழி அறிகுறிகளானது தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்கு முன்பே வரக்கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

வாய்வழி கோவிட் அறிகுறிகளின் பரவலுக்கு முக்கிய காரணம் என்ன?

வாய்வழி கோவிட் அறிகுறிகளின் பரவலுக்கு முக்கிய காரணம் என்ன?

உடலைத் தாக்கிய வைரஸ் உடலினுள் பெருக்கமடைந்து தாக்க ஆரம்பிக்கும் போது தான் பெரும்பாலான அறிகுறிகள் ஏற்படுகின்றன. SARS-COV-2 வைரஸை ஏற்படுத்தும் கோவிட்-19 நேரடியாக பற்குழியை உண்டாக்குகிறது மற்றும் திசுக்களை தன்னைத் தானே தாக்க வைக்கிறது என்பதற்கு தற்போதைய ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இந்த வைரஸ் பரவலுக்குப் பின்னிருக்கும் முக்கியமான காரணமாக நம்பப்படுவது, இருமுவது , பேசுவது அல்லது வெறுமனே சுவாசிப்பது ஆகும்.

வாய்வழி அறிகுறிகள்

வாய்வழி அறிகுறிகள்

கொரோனா நோற்த்தொற்றுடன் தொடர்புடைய வாய்வழி அறிகுறிகள் அறிகுறியற்ற வழக்குகளிலும் அல்லது மிதமான நிகழ்வுகளிலும் காணப்படலாம் என்று NIH ஆய்வு கண்டறிந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்குழிகள் மற்றும் வாய் திசுக்களில் தங்கி இருப்பதால், தற்போது கோவிட்-19-ன் வேகமான பரவலுக்கு முக்கிய பங்காற்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதுவும் அறிகுறியற்றவர்கள் மற்றவர்களுடன் பேசும் போது, பற்குழிகள் மற்றும் வாய் திசுக்களில் தங்கியுள்ள அந்த வைரஸ் பேசுவது அல்லது சுவாசிப்பதன் மூலம் நோய்ப் பெருக்கத்தைத் தூண்டக்கூடும்.

இருப்பினும் கோவிட்-19 இன் வாய்வழி வெளிப்பாடுகள் குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், சுவை இழப்பதை தவிர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பின்வரும் அறிகுறிகளை ஆரம்ப நாட்களில் அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். கீழே அந்த வாய்வழி அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாய் வறட்சி

வாய் வறட்சி

பொதுவாக வாய் வறட்சி நிறைய வைரஸ் தொற்றுகள், ஆட்டோ இம்யூன் கோளாறுகளுடன் இணைப்பட்டுள்ளன. தற்போது கோவிட்-19 உடன் இணைக்கப்பட்டுள்ளது. வாய் வறட்சி என்பது வாயில் போதுமான எச்சில் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஆகும். வாயில் போதுமான எச்சில் உற்பத்தி செய்யப்பட்டால், அது வாயை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மிக முக்கியமாக மோசமான பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகளுக்கு எதிராக வாயைப் பாதுகாக்கிறது. வாய் வறண்டு இருந்தால், அது வாயில் உள்ள எச்சிலை சிறிது தடிமனாக்குகிறது.

வாய் வறட்சியின் பொதுவான அறிகுறி வாய் துர்நாற்றம் வீசுவது ஆகும். மேலும் இது உணவு மெல்லுதல், பேசுவதில் சிரமத்தை தூண்டலாம் மற்றும் வாயின் மேல் பகுதியில் கடுமையான எரிச்சலை உண்டாக்கலாம். இதுப்போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உடனே கொரோனா சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

வாய் புண்கள்

வாய் புண்கள்

கோவிட்-19 போன்ற வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் போது, பெரும்பாலானோர் பொதுவாக அனுபவிக்கும் உணர்வுகளில் ஒன்று வைரஸ் தசை நார்கள் மற்றும் உறுப்பின் சுவர் பகுதியை தாக்கும் போது புண்/அழற்சியை உண்டாக்கும். இம்மாதிரியான அழற்சி நாக்கு மற்றும் ஈறு பகுதிகளில் புண்கள், வலிமிக்க புடைப்புகள் போன்ற வடிவங்களில் தோன்றும். சிலருக்கு வாயில் வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது வாய் புண்கள், எரிச்சல் மற்றும் அழற்சி வடிவத்தில் வாயின் ஆரோக்கியத்தைத் தாக்கும்.

கோவிட் நாக்கு

கோவிட் நாக்கு

கோவிட் நாக்கு என்பது தற்போது அதிகம் விவாதிக்கப்பட்ட கொரோனா தொற்றின் அறிகுறியாகும். அதற்கான காரணங்கள் குறித்து சரியாக தெரியவில்லை என்றாலும், SARS-COV-2 போன்ற வைரஸ் நிச்சயமாக நாக்கை பாதிக்கும். பல கொரோனா வழக்குகளின் ஆய்வுகளின் படி, கோவிட் நாக்கை அனுபவிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் இதைக் கொண்ட நோயாளிகளின் நாக்கின் மேற்பரப்பில் கடுமையான எரிச்சல் உணர்வுடன், வீக்கத்தையும் அனுபவிப்பார்கள். சில மருத்துவர்கள் கோவிட் நாக்கு, கோவிட் உடன் தொடர்புபடுத்தியிருக்கும் தோல் வெடிப்புகளுடன் இணைக்கப்படலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

நாவின் நிறம் அல்லது உணர்வு மாற்றங்கள்

நாவின் நிறம் அல்லது உணர்வு மாற்றங்கள்

கொரோனா நோய்த்தொற்றால் சந்திக்கும் மற்றொரு வாய்வழி பிரச்சனை தான், நாக்கின் நிறம் மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது. பல் துவாரங்களுக்கு அருகில் உள்ள நாக்கில் எரிச்சல், வீக்கம் மற்றும் நோய்க்கிருமியின் பெருக்கம் ஆகியவை நாக்கை வித்தியாசமாக உணர வைக்கக்கூடும். இப்பிரச்சனையால் வாயில் கடுமையான எரிச்சல் ஏற்படக்கூடும். முக்கியமாக உங்கள் நாக்கின் நிறம் அசாதாரண சிவப்பு நிறத்தில் மாறி, வெள்ளைத் திட்டுக்கள் அல்லது அடர் நிறத்தில் மாறி காணப்படும்.

புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள்

புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள்

வாய் மற்றும் நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் தற்போது கோவிட்-19 இன் முக்கியமான அறிகுறிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், கொரோனா வைரஸின் மாறிவரும் நடத்தை மற்றும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், தற்போது எந்த ஒரு திடீர் மற்றும் அசாதாரண அறிகுறிகளும் சரிபார்க்கப்பட வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே கொரோனாவைக் கண்டறிந்தால், எளிதில் சிகிச்சை பெற்று குணமாவதோடு, மற்றவர்களுக்கும் கொரோனா பரவுவதைத் தடுக்கலாம் அல்லவா? எனவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Oral Symptoms Of Covid

According to a new study conducted by the National Institute of Health (NIH), nearly half of COVID victims suffer from oral symptoms during the course of the infection.
Story first published: Monday, April 12, 2021, 12:46 [IST]