For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓணம் சத்யா விருந்தில் இடம் பெறும் உணவுகளும், அதில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகளும்…

|

ஓணம் என்பது 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் பிரம்மாண்டமான விழாவாகும். கேரளாவில் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையில் மிக முக்கிய தினம் தான் ஓணம் சத்யா ஆகும். இந்த நாள் விருந்து படைக்கும் நாளாகும். இந்த ஓணம் சத்யாவில் 12 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சமைக்கப்படும். மேலும், சிலர் 26 அல்லது அதற்கும் மேற்பட்ட உணவு வகைகளையும் கூட சமைத்து விருந்தளிப்பர். விருந்தின் சிறப்பம்சமே, வாழை இலையில் உணவு பரிமாறப்படுவது தான். அதாவது, இந்த சிறப்பு நாளில், சத்து நிறைந்த ஆகாரத்தின் மூலம் உடலுக்கு ஊட்டமளிப்பது தான் முக்கியத்துவம்.

ஓணம் சத்யா தினத்தன்று, தரையில் அமர்ந்து உணவு உண்டு மகிழ்வர். இது ஒரு பாரம்பரிய வழக்கமாக அங்கு தொடரப்படுகிறது. இது மத ரீதியாக அனைத்து மக்களும் இதனை தவறாமல் பின்பற்றுகிறன்றனர். தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைத்திடும். சீரான செரிமானம் முதல் இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பது வரை ஒட்டு மொத்த உடலின் நெகிழ்வுத்தன்மையையும் மேம்படுத்துகிறது. புதிய இலையில் பரிமாறப்பட்டு, நாவால் சுவைத்து உண்ணும் அதே வேளையில், நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு அளிக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

MOST READ: கொரோனா வைரஸின் சில அசாதாரண அறிகுறிகள்!

இந்த உணவுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்களை கொண்டிருப்பதால் சக்தி நிறைந்த உணவாக கருதப்படுகிறது. இத்தகைய மாபெரும் விருந்து நாளில், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகள் அடங்கிய ஏராளமான உணவுகள் பரிமாறப்படுகின்றன. சிவப்பு அரிசியிலிருந்து எலிசேரி, புல்லிசரி மற்றும் ருசியான பாயாச வகைகளுடன் விருந்தானது நிறைவடையும். இந்த விருந்து ஒரு ஆல்ரவுண்டர் என்றே கூறலாம்.

MOST READ: எலுமிச்சை நீர் Vs வெந்தய நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?

ஓணம் சத்யா விருந்தில் இடம் பெறும் உணவுகளும், அதன் ஆரோக்கிய பலன்களும் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து இந்த கட்டுரையை படியுங்கள்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓணம் சத்யா உணவுகளும், பலன்களும்

ஓணம் சத்யா உணவுகளும், பலன்களும்

ஓணம், ஓணம் சத்யா அல்லது ஓணசாத்யாவின் மிக முக்கியமான பகுதி என்றால் வாழை இலையில் பரிமாறப்படுவது தான். விருந்தில் பரிமாறப்படும் உணவுகள் சுவையாக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழை இலை

வாழை இலை

வாழை இலைகளில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளுடன் முதலில் ஆரம்பிக்கலாம். பாலிபினால்கள் எபிகல்லோகாடெசின் கேலேட் (ஈ.ஜி.சி.ஜி) எனப்படும் தாவர அடிப்படையிலான கலவையுடன் நிரம்பிய வாழை இலைகள், இயற்கை ஆக்ஸிஜனேற்றிகளாகும். அவை நோய்கள் வருவதைத் தடுப்பதிலும், ஃப்ரீ ரேடிக்கல்களின் வளர்ச்சியிலும் மிகவும் பயனளிக்கக்கூடியவை. மேலும், வாழை இலையில் புதிய மற்றும் சூடான உணவுகளை பரிமாறும் போதும், இலையில் உள்ள பாலிஃபீனால்களை உணவு உறிஞ்சிக்கொள்ளும். இது தவிர, வாழை இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன.

சிவப்பு அரிசி (மட்டா அரிசி)

சிவப்பு அரிசி (மட்டா அரிசி)

பாலக்கடன் மட்டா என்றும் அழைக்கப்படும், சிவப்பு அரிசி நிறைய ஊட்டச்சத்து நிறைந்ததாகும். பெரிகார்ப் எனப்படும் அரிசியின் சிவப்பு கோட் அதன் ஊட்டச்சத்து மதிப்பை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளின் திட ஆதாரமாக இருப்பதைத் தவிர, மட்டா அரிசி மெக்னீசியத்தின் சிறந்த மூலமாகவும் திகழ்கிறது. இதன் மூலம் இதய நோய் வருவதைத் தடுக்க உதவுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வு நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும், உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யவும், கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை குறைக்கவும் இந்த அரிசி உதவுகிறது.

சாம்பர்

சாம்பர்

ஓணம் சத்யாவின் முக்கிய உணவுகளில் ஒன்றான சாம்பார் பருப்பு மற்றும் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு காய்கறிகள் கொண்டும் (கேரட் முதல் பீட்ரூட் வரை) தயாரிக்கப்படுகிறது. பெருங்காயத்தூள் சேர்த்து மெதுவாக சமைக்கப்படுவதால் நச்சுத்தன்மை நீக்கியாக செயல்படுகிறது. இது அதிக புரதச்சத்தை கொண்டுள்ளது. நார்ச்சத்து மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்ற அளவையும் கொண்டுள்ளது. ஆரோக்கியம் நிறைந்த இந்த உணவு எளிதில் செரிக்கக்கூடியது.

அவியல்

அவியல்

பல்வேறு காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் மற்றொரு உணவு வகையாகும். இந்த உணவு, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. முருங்கைக்காய், கத்திரிக்காய், தேங்காய், கேரட், தயிர், பூசணி மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றால் தயாரிக்கப்படுவது. மேலும், கலோரிகளில் குறைவாகவும், ஊட்டச்சத்துக்களால் நிரம்பியும் இருப்பது இந்த அவியல். இதில் வைட்டமின் ஏ (பூசணி), நார்ச்சத்து (முருங்கைக்காய்), பீட்டா கரோட்டின் (கேரட்), ஃபோலிக் அமிலம் (பீன்ஸ்) மற்றும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

ஓலன்

ஓலன்

வெள்ளை சுண்டைக்காய், சிவப்பு பீன்ஸ் மற்றும் தேங்காய் பால் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு நார்ச்சத்து நிறைந்தது. வெள்ளை சுண்டைக்காய் குளிர்ச்சியான, டையூரிடிக் விளைவைக் கொண்டிருக்கிறது. இதனை தேங்காய் பாலில் சமைக்கும்போது (நிறைவுற்ற கொழுப்புகள், கலோரிகள் அதிகம்) ஆரோக்கியமான மற்றும் ஒரு முழுமையான உணவாக மாறும்.

காலன்

காலன்

இது சேனை கிழங்கு அல்லது வாழைக்காய், தேங்காய், மோர், மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றால் தயாரிக்கப்படுவது. காலன், புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாகும். உங்கள் செரிமான அமைப்பில் உள்ள நட்பு பாக்டீரியாவை சமப்படுத்த புரோபயாடிக்குகள் உதவுவதால், காலன் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த உணவில் இருந்து வரும் மோர், கால்சியத்தின் ஒரு நல்ல மூலமாக இருப்பதால் எலும்கை வலிமையாக்கவும் மற்றும் இதிலுள்ள புரோபயோடிக், செரிமான ஆரோக்கியத்தை வலுப்படுத்திடவும், சீராக பராமரிக்கவும் உதவும்.

புலி இஞ்சி

புலி இஞ்சி

ஓணம் சத்யாவில் ஒரு முக்கிய உணவு என்றால் புளி இஞ்சிஆகும. இஞ்சி, புளி, வெல்லம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதிலிருக்கும் இஞ்சி குமட்டலை போக்க உதவும் மற்றும் புளி மற்றும் இஞ்சியின் கலவையானது செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள வெல்லம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றவும், கல்லீரலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

பருப்பு கறி

பருப்பு கறி

பருப்பு, மஞ்சள் மற்றும் தேங்காயால் தயாரிக்கப்படும் இந்த உணவு மிகவும் எளிமையானது, அதே சமயம் அதிக சத்து நிறைந்ததாகும். பொதுவாக பாசி பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு குடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது தவிர, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ரசம்

ரசம்

தென்னிந்தியா முழுவதும் அனைவராலும், மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றான ரசம், ஓணம் சத்யாவின் மையமாகும். பருப்பு, தக்காளி மற்றும் வெந்தயம், மிளகுத்தூள், மஞ்சள் மற்றும் கொத்தமல்லி போன்ற மூலிகைகள் கலந்த இந்த உணவு, நுண்ணூட்டச்சத்துக்கள் முதல் அனைத்து ஊட்டச்சத்துக்களின் கலவையாகும். இதனால், சீரான உடல்நிலை, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வழங்கிடுகிறது. இது பழங்காலங்களில் இருந்து, குமட்டல் மற்றும் வயிற்று வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சர்காரா வரட்டி

சர்காரா வரட்டி

வெல்லம், இஞ்சி, ஏலக்காய் மற்றும் ல்வாழைக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. இதில் வெல்லம் இருப்பதால் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்திட சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

உங்களுக்கு பிடித்த உணவுகள் நிறைந்த இந்த விருந்து, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கி இருப்பது குறித்து தற்போது நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். எனவே, அதை சாப்பிடலாமா, இதை சாப்பிடலாமா என்ற தேவையற்ற ஐயங்களை விடுத்து, விருந்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, உற்றால் உறவினரோடு மகிழ்ச்சியாக இந்த ஓணத்தை கொண்டாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Onam Sadhya Items And Its Health Benefits in Tamil

Onam Sadhya Items & Their Benefits. The cardinal part of Onam, Onam sadhya or onasadhya is served on a plantain banana leaf.