For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40 வயதிற்கு மேலானவர்களை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்.. ஏன்? அதைத் தடுப்பது எப்படி?

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்றுக்கு வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதோடு, மரணத்தை சந்திக்கிறார்கள். கொரோனா வைரஸால் மரணித்தவர்களைப் பார்த்தால், அது வயதானவர்கள் தான்.

|

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்றுக்கு வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதோடு, மரணத்தை சந்திக்கிறார்கள். இதுவரை கொரோனா வைரஸால் மரணித்தவர்களைப் பார்த்தால், அது வயதானவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.

Older Adults Are More Vulnerable To Coronavirus: Ways Seniors Can Boost Their Immunity

60 வயதிற்கு மேற்பட்டோரைத் தாக்கும் கொரோனா வைரஸ், நிலைமையை இருமடங்கு மோசமாக்குவதாக சில ஆய்வுகளில் தெரிகிறது. மேலும் இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளோருக்கு இந்த வைரஸ் தாக்குதலின் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காம இருக்கணுமா? அப்ப நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதெல்லாம் சாப்பிடுங்க...

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அடிப்படை ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி போன்ற பல காரணிகள் தான் வயதானவர்களை கொரோனா வைரஸ் போன்ற ஒரு பெருந்தொற்றுநோய் மரணம் வரை கொண்டு செல்கிறது. இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டு அமெரிக்க நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வலியுறுத்தியுள்ளது.

MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

ஆகவே உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துவதோடு, கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு 40 வயதிற்கு மேலானவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்ச்சல் தடுப்பூசி

காய்ச்சல் தடுப்பூசி

வயதாகிவிட்டால் நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால் வருடந்தோறும் தவறாமல் காய்ச்சல் தடுப்பூசியைப் போட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இப்படி போடுவதால் 40 முதல் 60 சதவீத நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கலாம் எனவும் கூறுகின்றனர். குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் Fluzone மற்றும் Fluad போன்ற இரண்டு காய்ச்சல் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

ஆரோக்கியமான டயட்

ஆரோக்கியமான டயட்

வயதானவர்கள் மட்டுமின்றி, இளம் வயதினரும் வைட்டமின் சி மற்றும் ஈ, பீட்டா-கரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கலாம். வயதான காலத்தில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக முழு தானியங்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்!

சுறுசுறுப்புடன் இருக்கவும்

சுறுசுறுப்புடன் இருக்கவும்

நோய்த்தொற்றுக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கு உடல் வலிமையாக இருக்க வேண்டியது முக்கியம். உடல் வலிமையாக இருக்க சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். உடற்பயிற்சியினால் உடலில் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் வலுவடையும். வயதானவர்களுக்கான சிறப்பான உடற்பயிற்சி என்றால், நடைப்பயிற்சி, பைக் ரைடிங், யோகா போன்றவை.

MOST READ: இந்த பழக்கம் இருப்பவர்களை கொரோனா வைரஸ் வேகமா தாக்க வாய்ப்பிருக்காம்.. எச்சரிக்கையா இருங்க...

மன அழுத்தத்தைப் போக்கவும்

மன அழுத்தத்தைப் போக்கவும்

நாள்பட்ட மன அழுத்தம் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கி, அடிக்கடி நோய்த்தொற்றுக்களுக்கு உள்ளாக்கி நோய்வாய்ப்படச் செய்யும். ஆகவே வயதாகிவிட்டால், மன அழுத்தத்தைக் குறைக்க புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது தோட்டம் அமைக்கலாம். இதனால் மனம் அமைதியடைவதோடு, ரிலாக்ஸாகவும் இருக்கும்.

MOST READ: கொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா?

போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்

நாள் முழுவதும் அயராது உழைக்கும் உடலுக்கு போதுமான ஓய்வானது தூக்கத்தின் மூலம் கிடைக்கிறது. மன அழுத்தம் மற்றும் உடலினுள் உள்ள அழற்சிக்கு சிறப்பாக பதிலளிப்பதற்கும், காய்ச்சல் தடுப்பூசியின் திறனை மேம்படுத்துவதற்கும் தூக்கம் உதவுகிறது. மூளையின் செயல்பாடு, செறிவு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த போதுமான தூக்கம் கிடைப்பது அவசியம். வயதான காலத்தில் ஒருவருக்கு குறைந்தது 7 1/2 முதல் 9 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Older Adults Are More Vulnerable To Coronavirus: Ways Seniors Can Boost Their Immunity

The US Centers for Disease Control and Prevention (CDC) have urged older adults to stay at home as much as possible to avoid getting COVID-19.
Desktop Bottom Promotion