For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தாக்கும் அதிக ஆபத்துள்ள உடல் பருமானவர்கள்... இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் தெரியுமா?

கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாக்க மக்கள் பல பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முயற்சி செய்துவருகின்றனர்.

|

கொரோனா வைரஸ் நம்முடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் லட்ச கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் நம்முடைய வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாக்க மக்கள் பல பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முயற்சி செய்துவருகின்றனர்.

Obese people at increased risk of Covid-19, here’s how to prevent it

நாம் அனைவரும் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகிறோம் என்றாலும், உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆபத்து அதிகம் என்று சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது. 'ஃபிரான்டியர்ஸ் இன் ஜெனெடிக்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட வல்லுநர்கள் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கோவிட்-19 ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஆச்சரியமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். இதைப் பற்றி இக்கட்டுரையில் முழுமையாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, அவர்கள் 'மெண்டிலியன் ரேண்டமைசேஷன்' என்ற ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தினார். இது கோவிட்-19 நோய்த்தொற்றின் அபாயத்தில் இருதய ஆபத்து காரணிகளின் விளைவுகளை ஆராய தனிப்பட்ட மரபணு தகவல்களைக் கொண்டிருந்தது.

MOST READ: இந்த கொழுப்பு உடல் பருமனை குறைப்பதோடு சர்க்கரை நோயிலிருந்து உங்கள பாதுகாக்குமாம் தெரியுமா?

ஆராய்ச்சியாளர்கள் கூறுவது

ஆராய்ச்சியாளர்கள் கூறுவது

அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), உடல் பருமனைக் குறிக்கும் நபர்கள் மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்.டி.எல்) கொழுப்பு இது என்றும் அழைக்கப்படுகிறது. மோசமான கொழுப்பு கொண்டவர்கள் கோவிட்-19 ஐப் பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். மற்ற இருதய ஆபத்து காரணிகள் (உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு) கோவிட்-19 அபாயத்தை உயர்த்துவதாகத் தெரியவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் பருமன் மற்றும் கொரோனா வைரஸ்

உடல் பருமன் மற்றும் கொரோனா வைரஸ்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் பருமன் எப்போதுமே கவலைக்குரியது, ஏனெனில் இது பல உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும். உடல் பருமனுக்கும் கொரோனா வைரஸின் ஆபத்துக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் புதிய வெளிப்பாடு நிச்சயமாக நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் கவலைகளை எழுப்பியுள்ளது. நீங்களும் உடல் பருமனால் அவதிப்படுகிறீர்கள் என்றால், மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.

குறைந்த கொழுப்பை உட்கொள்ளுங்கள்

குறைந்த கொழுப்பை உட்கொள்ளுங்கள்

நியூட்ரிஷன் ஜர்னலில் வெளியான ஒரு ஆய்வின்படி, பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமான உணவு நார்ச்சத்து உட்கொள்வது, கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது மற்றும் உடல் பருமன் அபாயத்தை குறைக்கிறது.

MOST READ: கொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் வைட்டமின் டியை பெற இத பண்ணுங்க!

பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவைத் தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவைத் தவிர்க்கவும்

அதிகப்படியான கொழுப்பை ஊக்குவிக்கும் கொழுப்பு, உப்பு, சர்க்கரை ஆகியவை அதிகமாக இருப்பதால் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது உங்களுக்கு மோசமானது என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்

காய்கறிகளையும் பழங்களின் உட்கொள்ளலையும் அதிகரிப்பது கலோரிகளை சரியான அளவு வைத்திருக்கும் மற்றும் அதிகப்படியான உணவை குறைக்கும்.

குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு

குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு

குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவை உட்க்கொள்வதை உறுதிசெய்யுங்கள். இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக்க உதவும் மற்றும் இறுதியில் எடை நிர்வகிக்க உதவும். ஆதலால், குறைந்த ஜி.ஐ. உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Obese people at increased risk of Covid-19, here’s how to prevent it

Here we are talking about the obese people at increased risk of Covid-19, here’s how to prevent it.
Desktop Bottom Promotion