For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவில் அதிவேகமாக பரவும் 'நோரோ வைரஸ்' - எப்படி பரவுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன?

கேரளாவின் வயநாடு மாவட்டம் வைத்திரி அருகே உள்ள பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நோரோ வைரஸ் தொற்று இருப்பது பதிவாகியுள்ளது.

|

கொரோனா என்னும் கொடிய வைரஸூடன் ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி, அத்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், தற்போது கேரளாவில் நோரோ வைரஸ் பரவி வருவதாக கேரளா சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெள்ளிக்கிழமை அறிவித்ததோடு, மக்களை விழிப்போடு இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அதுவும் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் வேகமாக பரவக்கூடிய நோரோ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Norovirus Confirmed In Kerala: Symptoms, Causes And Treatment In Tamil

கேரளாவின் வயநாடு மாவட்டம் வைத்திரி அருகே உள்ள பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நோரோ வைரஸ் தொற்று இருப்பது பதிவாகியுள்ளது. தற்போது இத்தொற்று குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். குடிநீர் ஆதாரங்கள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

இப்போது கேரளாவில் பரவும் நோரோ வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோரோ வைரஸ் என்றால் என்ன?

நோரோ வைரஸ் என்றால் என்ன?

நோரோ வைரஸ் என்பது வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும் வைரஸ்களின் குழுவாகும். இது குடலின் உட்புறத்தில் வீக்கம், கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமானவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதிக்காது. ஆனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களை இது தீவிரமாக பாதிக்கும்.

நோரோ வைரஸ் எப்படி பரவுகிறது?

நோரோ வைரஸ் எப்படி பரவுகிறது?

நோரோ வைரஸ் என்பது நீர் மூலம் பரவும் ஒரு நோயாகும். இது அழுக்கு நீர் மற்றும் உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மேலும் இது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலமாகவும் இந்நோய் பரவுகிறது. இது தவிர இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் வாந்தி மற்றும் மலம் மூலமாகவும் பரவுகிறது. முக்கியமாக இது அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட நோய்த்தொற்றாகும்.

நோரோ வைரஸின் அறிகுறிகள்

நோரோ வைரஸின் அறிகுறிகள்

நோரோ வைரஸ் ஒருவரை தாக்கியிருந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படும். அவையாவன:

* வயிற்றுப்போக்கு

* வயிற்று வலி

* வாந்தி

* குமட்டல்

* காய்ச்சல்

* தலைவலி

* உடல் வலி

* வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு தீவிரமானால், உடல் வறட்சி/நீரிழப்பு ஏற்படலாம்.

நோய்த்தொற்றுக்கு பிறகான சிகிச்சைகள்:

நோய்த்தொற்றுக்கு பிறகான சிகிச்சைகள்:

* வீட்டில் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

* ஓஆர்எஸ் குடிக்க வேண்டும். அத்துடன் கொதிக்க வைத்த நீரையும் குடிக்க வேண்டும்.

* வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகள் நீங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகும் வைரஸ் பரவக்கூடும். எனவே குணமடைந்த பிறகு மேலும் இரண்டு நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

* தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைக்கு சென்ற பின்பும் கைகளுக்கு சோப்பைப் பயன்படுத்தி கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

* விலங்குகளுடன் பழகுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

* கிணறுகள், டேங்குகள் போன்றவற்றில் உள்ள நீர் ஆதாரங்களை ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தி குளோரினேட் செய்யுங்கள்.

* கொதிக்க வைத்த நீரை மட்டும் குடியுங்கள்.

* பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்துங்கள்.

* மீன்கள், நண்டு, மட்டி மீன்கள் போன்றவற்றை நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Norovirus Confirmed In Kerala: Symptoms, Causes And Treatment In Tamil

Norovirus infection confirmed in kerala. Here we are sharing the symptoms, causes and treatment in tamil. Take a look.
Story first published: Saturday, November 13, 2021, 13:47 [IST]
Desktop Bottom Promotion