For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...!

கொரோனாவின் முடிவுக்காக உலகமே காத்திருக்கும் நிலையில் அதனை தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் பல நாடுகள் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

|

கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் இன்னும் மூன்றாம் கட்டத்தை எட்டாமல் இருக்கிறது.

Nobel Prize Winner Shares a Good News About the Coronavirus

கொரோனாவின் முடிவுக்காக உலகமே காத்திருக்கும் நிலையில் அதனை தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் பல நாடுகள் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான மைக்கேல் லெவிட் கொரோனா வைரஸ் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று உலக மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை கூறியுள்ளார். இந்த பதிவில் அவரின் அறிக்கை மற்றும் கொரோனாவின் முடிவு பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடுப்பூசி

தடுப்பூசி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் சரியான தடுப்பூசி இன்னும் கண்டறியப்படவில்லை. தற்சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரவர் நோயெதிர்ப்பு திறனை பொறுத்து ரெம்டெசிவர், குளோரோகுயின், லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு உலக நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டறிய கிட்டத்தட்ட 800 மில்லியன் டாலர் செலவழித்து வருகின்றனர். இந்த வைரஸ் அழிய வேறுசில வழிகளும் உள்ளது.

வைரஸ் பிறழ்வு

வைரஸ் பிறழ்வு

எந்தவொரு வைரஸும் நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரியான அமைப்பில் இருக்க முடியாது, அவற்றின் மரபணுக்கள் மாற்றங்களுக்கு உள்ளாகும். இதுதான் வைரஸ் பிறழ்வு என்று அழைக்கப்படுகிறது. இதனால் அந்த வைரஸ் பலவீனமடைய வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸும் சில காலங்களுக்கு பிறகு இந்த மாற்றத்திற்குள் உள்ளாகும். ஆனால் எப்பொழுது என்று இன்னும் கணிக்க முடியவில்லை.

 மைக்கேல் லெவிட்

மைக்கேல் லெவிட்

வேதியியல் அமைப்புகளின் சிக்கலான மாதிரிகளை உருவாக்குவதற்கான வேதியியலுக்கான 2013 நோபல் பரிசைப் பெற்ற அமெரிக்க-பிரிட்டிஷ்-இஸ்ரேலிய உயிர் இயற்பியலாளர் மைக்கேல் லெவிட், கொரோனா வைரஸ் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். அவரது கருத்துப்படி வேகமாக பரவும் இந்த நோயின் வேகம் படிப்படியாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. சீனாவில் இவ்வாறுதான் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாக லெவிட் கூறியுள்ளார்.

MOST READ:ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? அவர்களின் தீய குணங்கள் என்ன?

தனிமைப்படுத்துதல்

தனிமைப்படுத்துதல்

டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸைப் பற்றி லெவிட் ஜனவரி மாதம் முதலே தீவிரமாக கவனித்து வருகிறார். அவர் கண்டறிந்த வரை முதலில் உலக மக்களின் COVID-19 குறித்த பீதியை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அடிப்படையாக சமூகத்தில் இருந்து விலகி தனிமைப்படுத்துதலை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

லெவிட்டின் கணிப்பு

லெவிட்டின் கணிப்பு

லெவிட்டின் கணிப்பின் படி பிப்ரவரியில் சீனாவில் சுமார் 3,250 இறப்புகளுடன் 80,000 எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிப்ரவரி நடுப்பகுதியில் மொத்தம் 80,298 வழக்குகள் மற்றும் 3,245 இறப்புகளுடன் அவரது கணிப்பு கிட்டத்தட்ட சரியாகிவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ள போதிலும், மார்ச் 16 முதல் புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளை சீனா கண்டிருக்காது.

 லெவிட்டின் ஆராய்ச்சி

லெவிட்டின் ஆராய்ச்சி

ஒவ்வொரு நாளும் 50 க்கும் மேல் புதிதாக பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட 78 நாடுகளின் தரவை ஆராய்ந்த பின்னர், மைக்கேல் லெவிட் சில "மீட்பு அறிகுறிகளை" கண்டறிந்தார். அவரது முக்கிய கவனம் ஒட்டுமொத்த புள்ளிவிவரத்தில் அல்ல, ஆனால் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்பட்ட புதிய வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அந்த எண்ணிக்கையில் ஒரு நாளிலிருந்து அடுத்த நாளுக்கு ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றை கவனித்து வருகிறார்.

MOST READ:கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...!

லெவிட்டின் பேட்டி

லெவிட்டின் பேட்டி

சமீபத்தில் லெவிட் அளித்த பேட்டி ஒன்றில் விரைவில் உலகம் கொரோனாவில் இருந்து தப்பிக்கப் போகிறது என்று கூறியுள்ளார். மேலும் நோய் பரவும் எண்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது, ஆனால் நோயின் வளர்ச்சி விகிதம் குறைவதன் தெளிவான அறிகுறிகள் உள்ளதாக கூறியுள்ளார். சமூக விலகல் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுவது இரண்டுமே பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானவை என்றும் கூறியுள்ளார். ஊடகங்கள் தேவையற்ற பீதியை பரப்புவதாக லெவிட் வருத்தப்பட்டுள்ளார்.

இத்தாலி செய்த தவறு

இத்தாலி செய்த தவறு

இத்தாலியில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் அவர்கள் சமூக வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதும் அங்கு பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தும் என்று லெவிட் முன்கூட்டியே கணித்திருந்தார். மேலும் இத்தாலியர்களின் கலாச்சாரம் வேடிக்கை நிறைந்ததாகவும், வளமான சமூக வாழ்க்கையை கொண்டுள்ளதாலும் அவர்களை தனிமைப்படுத்துதல் கடினமானது என்று அவர் கூறியுள்ளார். இத்தாலியின் வலுவான தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் அதிக பாதிப்பு ஏற்படுத்துவதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று அவர் விளக்கியுள்ளார்.

MOST READ:இந்திய சரித்திரம் போற்றும் இந்த மாவீரன் சாதாரண காய்ச்சலால் இறந்த சோகக்கதை தெரியுமா?

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

COVID -19 வைரஸை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில் கொரோனா பரவுதலில் இருந்து தப்பிக்கவும், தடுக்கவும் சமூகத்தில் இருந்து விலகி இருப்பதே இப்போதைக்கு ஒரே வழி என்று லெவிட் கூறியுள்ளார். தனிமைப்படுத்தலை தவிர இதிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை, அதேசமயம் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nobel Prize Winner Shares a Good News About the Coronavirus

Nobel Prize winner Michael Levitt shares some good news about the Coronavirus pandemic.
Story first published: Tuesday, March 31, 2020, 18:37 [IST]
Desktop Bottom Promotion