For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் கொரோனாவின் புதிய மாறுபாடு - அதன் அறிகுறிகள் என்ன?

இந்த ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய C.1.2 திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் என்பதுடன், ஒரு வருடத்திற்கு 41.8 பிறழ்வுகளை உருவாக்கும் திறன் கொண்டது.

|

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரஸின் பிடியில் சிக்கி இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் தோன்றியது முதல் தற்போது வரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய C.1.2 திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

New COVID Variant C.1.2 Detected in South Africa ; Know Origin, Symptoms And Other Details In Tamil

இது தற்போதுள்ள டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் என்பதுடன், ஒரு வருடத்திற்கு 41.8 பிறழ்வுகளை உருவாக்கும் திறன் கொண்டது. மொத்தத்தில் தற்போதைய உலகளாவிய விகிதத்தை விட தோராயமாக 1.7 மடங்கு வேகமானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த புதிய கொரோனா திரிபு மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஆனால் இந்த உருமாற்றமடைந்த விகாரத்தால் ஏற்பட்ட எந்த ஒரு வழக்கும் இந்தியாவில் இதுவரை இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
C.1.2 மாறுபாடு என்றால் என்ன?

C.1.2 மாறுபாடு என்றால் என்ன?

2021 ஆம் ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட C.1.2 மாறுபாடு, கொரோனாவின் C.1-இலிருந்து உருவானது. C.1 என்பது தென்னாப்பிரிக்காவில் SARS-CoV-2 நோய்த்தொற்றின் முதல் அலையில் ஆதிக்கம் செலுத்திய கொரோனாவின் பரம்பரைகளில் ஒன்றாகும்.

இதுவரை எந்த நாடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

இதுவரை எந்த நாடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய தொற்றுநோய்களுக்கான நிறுவனம் (NICD) மற்றும் குவாசுலு-நேடல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் வரிசைத் தளம் (கேஆர்ஐஎஸ்பி) ஆகியவற்றில் உள்ள விஞ்ஞானிகளால் இந்த ஆண்டு மே மாதத்தில் முதன்முதலில் எமுமாலங்கா மற்றும் கவுடெங் மாகாணங்களில் கவலைக்குரிய மாறுபாடான C.1.2 கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான மாகாணங்களில் பரவியுள்ளது. C.1.2 மாறுபாடு சீனா, காங்கோ ஜனநாயக குடியரசு, மொரிஷியஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்த ஆராய்ச்சி இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

இந்த புதிய மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது?

இந்த புதிய மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது?

முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடும் போது, C.1.2 மாறுபாடு மிகவும் கொடியது. இது அதிகரித்த பரிமாற்றம் மற்றும் குறைவான நடுநிலை உணர்திறனுடன் தொடர்புடையது. ஒரு ஆராய்ச்சியாளர் இந்த புதிய மாறுபாடு 'கணிசமாக மாற்றப்பட்டுள்ளது' என்றும், வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட அசல் வைரஸை விட இது மோசமானது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வேறு உருமாற்றத்தையும் விட முன்னோக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

இது எவ்வளவு வேகமாக உருமாறுகிறது?

இது எவ்வளவு வேகமாக உருமாறுகிறது?

ஆய்வின் படி, C.1.2 ஒவ்வொரு ஆண்டும் 41.8 பிறழ்வுகளைக் கொண்டிருக்கலாம். இது தற்போராய உலகளாவிய விகிதத்தை விட சுமார் 1.7 மடங்கு வேகமானது மற்றும் SARS-CoV-2 பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப மதிப்பீட்டை விட 1.8 மடங்கு வேகமாக உள்ளது. ஆல்பா, பீட்டா மற்றும் காமா போன்ற பிற வைரஸ்கள் இதேப்போன்று குறுகிய கால பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள் என்ன?

இந்த புதிய மாறுபாட்டின் புதிய அறிகுறிகள் என்ன என்பதை வல்லுநர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அனைத்து கோவிட்-19 வகைகளிலும் பொதுவான அறிகுறிகள் என்றால் மூக்கு ஒழுகுதல், தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, காய்ச்சல், தசைப்பிடிப்பு, சிவந்த கண்கள், வயிற்றுப்போக்கு ஆகியவை.

இது இந்தியாவிற்கு பரவியுள்ளதா?

இது இந்தியாவிற்கு பரவியுள்ளதா?

கொரோனாவின் C.1.2 வகையை இந்தியா இன்று வரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் டெல்டா வகையின் புதிய துணை வரிசை AY.12 ஐக் கண்டறிந்துள்ளது. இந்திய SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பின் (INSACOG) சமீபத்திய அறிக்கையின் படி, டெல்டா என வகைப்படுத்தப்பட்ட பல வழக்குகள் இப்போது AY.12 என மறுவகைப்படுத்தப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New COVID Variant C.1.2 Detected in South Africa ; Know Origin, Symptoms And Other Details In Tamil

The C.1.2 strain, which was discovered in South Africa in May this year, could spread faster than the existing virus as it is capable of making 41.8 mutations per year, which is approximately 1.7-fold faster than the current global rate, experts have warned.
Desktop Bottom Promotion