For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வராம தடுக்க உங்க நோயெதிர்ப்பு சக்தியை இந்த ஈஸியான வழிகள் மூலம் எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா?

குழந்தைகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களுக்கு தினசரி 1200 IU வைட்டமின் டி 3 வழங்கப்பட்டது. இவர்கள் வைட்டமின் டி வழங்கப்படாத குழந்தைகளை விட குளிர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவது கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைவாக

|

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி, ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

new and simple ways to boost your immunity

ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். கொரோனா வைரஸ் நாவல் தொற்று ஏற்படுவதிலிருந்து தடுக்க சில வழிகள் வீட்டிலேயே இருப்பது, தடுப்பூசி போடுவது மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை இறுக்கமாக வைத்திருத்தல். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எளிதான வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு வைட்டமின் டி யை எடுத்துக்கொள்ளுங்கள்

ஒரு வைட்டமின் டி யை எடுத்துக்கொள்ளுங்கள்

குழந்தைகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களுக்கு தினசரி 1200 IU வைட்டமின் டி 3 வழங்கப்பட்டது. இவர்கள் வைட்டமின் டி வழங்கப்படாத குழந்தைகளை விட குளிர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவது கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைவாக இருந்தது. வைட்டமின் டி குழந்தைகளை தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதாக கூறப்படுகிறது.

MOST READ: உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'இந்த' இரண்டு பொருட்கள் கலந்த தேநீரை குடிச்சா போதுமாம்...!

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

வைட்டமின் டி நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சூரிய ஒளியில் கிடைப்பதால், வெயிலில் சிறிது நேரம் செலவிட வேண்டும் அல்லது வைட்டமின் டி சப்ளிமெண்ட் உட்கொண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இறுக்கமாகவும் வலுவாகவும் வைத்திருக்க வேண்டும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 46 அதிக எடை கொண்ட ஆண்களும் பெண்களும் ஆறு மாதங்களுக்கு குறைந்த கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டபோது, அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன. கலோரிகளை வெறும் 10 சதவிகிதம் குறைப்பதன் மூலம் அதிக எடை கொண்டவர்களுக்கு இது நன்மையளிக்கும். மற்ற ஆய்வுகளும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்துள்ளன, அங்கு மக்கள் ஒரு மாதத்தில் 5 கிலோ உடல் எடையை குறைத்துள்ளனர்.

அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் வேண்டும்

அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் வேண்டும்

ஒரு ஆய்வில், எலிகளுக்கு கரையக்கூடிய நார்ச்சத்து (ஓட்ஸ் மற்றும் ஆப்பிள்களில் காணப்படும் வகை) வழங்கப்பட்டது. எந்தவொரு பாக்டீரியாவையும் பாதித்திருப்பதைப் போல உடல் செயல்பாடுகள், இவை நோயின் குறைவான அறிகுறிகளைக் காட்டின. கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த மனித ஆய்வுகள் தேவைப்பட்டாலும், நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

new and simple ways to boost your immunity

Here we are talking about the new and simple ways to boost your immunity.
Story first published: Wednesday, May 5, 2021, 16:07 [IST]
Desktop Bottom Promotion