For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெருப்பில் வைத்தது போல கால் எரியுதா? இதோ அதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள்!

பொதுவாக பாத எரிச்சலானது உயர் இரத்த அழுத்தம், வைட்டமின் பி குறைபாடு, உடல் பருமன், குறைவான தைராய்டு அளவு, அதிகப்படியான யூரிக் அமிலம், சர்க்கரை நோய் மற்றும் பலவற்றால் ஏற்படலாம்.

|

இரவு நேரத்தில் பாத எரிச்சலால் பலர் கஷ்டப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். இது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளுள் ஒன்றாகும். பாதங்களில் எரிச்சலை அனுபவிப்பவர்கள், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இப்படிப்பட்ட பாத எரிச்சல் நோயானது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இருப்பினும், 50 வயதிற்கு மேற்பட்டபவர்கள் இந்நோயால் அதிகம் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர்.

Natural Remedies For Burning Feet In Tamil

பொதுவாக பாத எரிச்சலானது உயர் இரத்த அழுத்தம், வைட்டமின் பி குறைபாடு, உடல் பருமன், குறைவான தைராய்டு அளவு, அதிகப்படியான யூரிக் அமிலம், சர்க்கரை நோய் மற்றும் பலவற்றால் ஏற்படலாம். இந்த பாத எரிச்சல் நோயை சரிசெய்வது என்பது சற்று கடினம் தான். இருப்பினும், ஒருசில இயற்கை வழிகளின் மூலம் பாத எரிச்சலைத் தடுக்கலாம். கீழே தூக்கத்தைக் கெடுக்கும் பாத எரிச்சலில் இருந்து விடுவிக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: இதயத்துல அடைப்பு இருக்கா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சீக்கிரம் சரியாகுமாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் பாத எரிச்சலுக்கான ஒரு சிறந்த இயற்கை நிவாரணப் பொருளாக கருதப்படுகிறது மற்றும் இது உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்கும். அதற்கு இதை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்.

* ஒரு டம்ளர் நீரில் 2 டீபூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து தினமும் குடிக்கலாம்.

* சூடான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து, அந்நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீபூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.

* அதோடு, மஞ்சளை நீர் சேர்த்து கலந்து, அதை பாதங்களில் ஒரு நாளைக்கு 2 முறை தடவ வேண்டும். ஆனால் இப்படி செய்வதால் பாதங்களில் மஞ்சள் கறை படியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம், பாதங்களில் ஏற்படும் வலி மற்றும் அழற்சியைக் குறைக்கிறது. அதோடு, இது எரிச்சல் உணர்வில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. அதற்கு ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை பாதியளவு நிரப்பி, அதில் பாதி கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

ஆனால் இந்த முறையைப் பின்பற்றும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது நல்லது. ஏனெனில் இம்முறை இரத்த அழுத்தம், இதய நோய் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொருத்தமானது அல்ல.

பாகற்காய்

பாகற்காய்

நீண்ட நாட்களாக பாத எரிச்சலை சந்திப்பவர்கள் பாகற்காயைப் பயன்படுத்துவது மிகச்சிறந்த பலனை அளிக்கும். அதற்கு பாகற்காய் மற்றும் அதன் இலையை நீர் சேர்த்து அரைத்து, அந்த விழுதை பாதங்களில் தடவ வேண்டும். இப்படி பாதங்களில் எரிச்சலை சந்திக்கும் போது இந்த விழுதை தடவினால், பாத எரிச்சல் தணியும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியும் பாத எரிச்சலுக்கான ஒரு அற்புதமான பொருள். இது பாதங்களில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவுவதோடு, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

* ஒரு டீபூன் இஞ்சி சாறுடன், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கால்களில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை மசாஜ் செய்ய வேண்டும்.

* அதோடு தினமும் இஞ்சி டீ குடிப்பதும், இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர் எரிச்சல்மிக்க பாதங்களுக்கான ஒரு அற்புதமான நிவாரணப் பொருள். அதற்கு ஒரு வாளியில் பாதியளவு குளிர்ந்த நீரை நிரப்பி, அந்நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து, பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்து, மீண்டும் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Remedies For Burning Feet In Tamil

Here are some natural remedies for burning feet. Read on...
Desktop Bottom Promotion