Just In
- 2 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 5 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 5 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 9 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Finance
சரிவில் தொழில் துறை உற்பத்தி..! தேங்கிக் கிடக்கும் பொருளாதாரம்..!
- News
உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Movies
"பேப்பர் பாய்" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கணுமா? அப்ப இத அதிகமா சாப்பிடுங்க...
ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். வலிமையான நோயெதிர்ப்பு சக்தி உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். ஆனால் பல்வேறு காரணிகள் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி பலவீனமாக்குகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் விஷயங்கள் எவையென்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இப்படி தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம், அந்த விஷயங்களில் கவனமாக இருந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம். அதே சமயம் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க முடியும். அதுவும் இயற்கையாக ஒருசில உணவுகள் மற்றும் பானங்களின் உதவியுடன் எளிதில் வலிமையாக்கலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் விஷயங்கள்
* மன அழுத்தம்
* மோசமான வாழ்க்கை முறை
* ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள்
* அதிகளவு மது அருந்துவது
* தூக்கமின்மை
* உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை
MOST READ: முன்கூட்டியே விந்து வெளியேறுகிறதா? அப்படின்னா தினமும் இதுல ஒன்ன செய்யுங்க...

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும். இதில் உள்ள வைட்டமின் சி, இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு உதவும். இரத்த வெள்ளையணுக்கள் உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். எனவே ஒருவரது உடலில் வைட்டமின் சி போதுமான அளவில் இருந்தால், சளி மற்றும் இதர தொற்றுக்களின் அபாயத்தைத் தடுக்கலாம். எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளான அரஞ்சு, கிவி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுங்கள்.

மஞ்சள்
மசாலாப் பொருட்களுள் ஒன்றான மஞ்சளில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே அன்றாட உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அவ்வப்போது மஞ்சள் கொண்டு டீ தயாரித்தும் குடியுங்கள்.
MOST READ: இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதம் கூறும் உணவுகள்!

யோகர்ட்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று யோகர்ட். இதில் உள்ள புரோபயோடிக்குகள், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும். எனவே அன்றாடம் யோகர்ட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் அத்துடன் சிறிது நற்பதமான பழங்களையும் சேர்த்து உட்கொள்ளுங்கள். ஆனால் ப்ளேவர் அல்லது கொழுப்பு அதிகம் நிறைந்த யோகர்ட்டை தேர்ந்தெடுத்து உண்ணாதீர்கள்.

டீ
டீ பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி கிருமிகளை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும். ஒருவர் காலையில் எழுந்ததும் டீயைக் குடித்தால், அந்நாள் நன்கு புத்துணர்ச்சியுடன் சிறப்பாக இருக்கும். டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் டீ வகைகளாவன, க்ரீன் டீ, ப்ளாக் டீ, இஞ்சி டீ, பட்டை டீ, மஞ்சள் டீ அல்லது சீமைச்சாமந்தி டீ போன்றவை.

பட்டை
மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டை, உணவுகளுக்கு நல்ல மணத்தைக் கொடுக்கக்கூடியது. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. பட்டை சர்க்கரை நோய், PCOD, தொற்றுகள் மற்றும் இதய ஆரோக்கியம் போன்றவற்றைப் பராமரிக்க உதவும். அதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். எனவே அன்றாட டயட்டில் பட்டையை சேர்த்துக் கொண்டு, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கிக் கொள்ளுங்கள்.
MOST READ: உங்கள் இதய தசையில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

பூண்டு
பூண்டு, உணவிற்கு நல்ல சுவையைக் கொடுக்கும் உணவுப் பொருள். மேலும் இது அனைத்து சமையலறையிலும் இருக்கும் பொருளும் கூட. பூண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. இதில் உள்ள சல்பர் தான் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.

பசலைக்கீரை
கீரைகளுள் பசலைக்கீரை மிகவும் ஆரோக்கியமானது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த கீரையில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்கள் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதோடு இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.