For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தமான இரத்தத்தை பெற இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க போதும்...!

சில வகையான உணவுகள், சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தினசரி நச்சுகள் நம் உடலில் சேமிக்கப்படுகின்றன.

|

ஆக்ஸிஜன், ஹார்மோன்கள், சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் செல்களை நோயெதிர்ப்பு அமைப்புக்கு கொண்டு செல்வதில் இருந்து உடல் அமைப்பை சுத்தப்படுத்துவது வரை இரத்தம் மனிதர்களது உடல் செயல்பாட்டில் மிகமுக்கியமான பங்கு வகிக்கிறது. சில வகையான உணவுகள், சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தினசரி நச்சுகள் நம் உடலில் சேமிக்கப்படுகின்றன.

Natural Foods to Purify Your Blood in Tamil

இரத்தத்தை சுத்தப்படுத்துவது உடலில் இருந்து நச்சுக்களை இயற்கையாக வெளியேற்றி, சீரான ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும். நுரையீரல்கள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் உங்கள் இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் ஒரு சிறந்த வேலையைச் செய்யும் அதே வேளையில், இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை எளிதாக்கும் உணவுகள் உள்ளன. இந்த பதிவில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தத்தை சுத்தப்படுத்துவது ஏன் அவசியம்?

இரத்தத்தை சுத்தப்படுத்துவது ஏன் அவசியம்?

முகப்பரு, கறைகள் மற்றும் வறண்ட மற்றும் ஆரோக்கியமற்ற சருமம் போன்ற தோல் பிரச்சனைகள் அசுத்தமான இரத்தத்தால் ஏற்படலாம், இவை அனைத்தும் இரத்தத்தில் உள்ள அசுத்தங்களைக் குறிக்கிறது. ஒவ்வாமை, தலைவலி, குமட்டல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தூய்மையற்ற இரத்தத்தால் ஏற்படும் பல்வேறு உடல்நலம் மற்றும் தோல் நிலைகளின் அபாயத்தையும் இரத்தச் சுத்திகரிப்பு உதவுகிறது. ஆரோக்கியமான இரத்த விநியோகம் முக்கிய உறுப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளுக்கு அவசியமானது. சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் நிணநீர் மண்டலம் அனைத்தும் ஆரோக்கியமான இரத்த எண்ணிக்கையைச் சார்ந்தது. நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. இரத்த சுத்திகரிப்பு செயல்முறை உங்கள் உடலின் pH மதிப்பு, நீர் சமநிலை மற்றும் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.

பூண்டு

பூண்டு

பூண்டு உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்த ஒரு அற்புதமான இயற்கை தீர்வாகும். பூண்டில் காணப்படும் அல்லிசின் என்பது கந்தகத்தைக் கொண்ட கலவையாகும், இது பச்சை பூண்டை நசுக்கி, மென்று அல்லது நறுக்கிய பிறகு செயல்படுத்தப்படுகிறது. நச்சுப் பொருட்களிலிருந்து கல்லீரலைப் பாதுகாப்பதன் மூலம் பூண்டு இரத்தத்தை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுகிறது என்பதை சான்றுகள் நிரூபிக்கின்றன. பூண்டு வலுவான ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை வெளிப்படுத்துகிறது, இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் குடல்களை பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்கள் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. டோஸ்ட் முதல் கறி வரை உங்களின் அனைத்து உணவுகளிலும் பூண்டைச் சேர்க்கத் தொடங்குங்கள்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி இலை பாதரசம் மற்றும் நீங்கள் சுவாசிக்கும் உணவு அல்லது மாசுபட்ட காற்றின் மூலம் உங்கள் இரத்த ஓட்டத்தில் சேரும் மற்ற கன உலோகங்களை அகற்ற உதவுகிறது. இலை காய்கறிகளில் உள்ள குளோரோபில் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. பல ஆய்வுகள் சிலுவை காய்கறிகளில் சல்பர் கலவைகள் உள்ளன, அவை இரத்தத்தை நச்சுத்தன்மையற்றதாக மாற்றி வீக்கத்தைக் குறைக்கின்றன.

MOST READ: தலைசுற்ற வைக்கும் பண்டைய நாகரிகங்களின் பாலியல் செயல்பாடுகள்... எப்படிலாம் இருந்துருக்காங்க பாருங்க!

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள மூலப்பொருள்கள் மற்றும் உள்ள சுத்திகரிப்பு பொருட்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. பீட்ரூட்டில் கல்லீரலைப் பாதுகாக்கும் பண்புகள் இருப்பதாக நியூட்ரிஷன் ஜர்னல் கூறியுள்ளது. உங்கள் உணவில் அதிக பீட்ரூட்டைச் சேர்ப்பது கல்லீரளை சுத்தப்படுத்தும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் நச்சுப்பொருட்களை நீக்கும் அற்புத கலவையான குர்குமின் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் நச்சு நீக்கும் நொதிகளை உருவாக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உங்கள் உணவில் மஞ்சள் உட்கொள்ளலை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. மஞ்சளின் சுத்தப்படுத்தும் தன்மையை அதிகரிக்கும் கருப்பு மிளகுடன் மஞ்சள் தேநீர் தயாரித்து பருகவும்.

மிளகாய்

மிளகாய்

மிளகாயில் உள்ள கேப்சைசின் இரத்த சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது. கேப்சைசின் என்பது மிளகு மற்றும் மிளகாய்க்கு காரமான சுவையைக் கொடுக்கும் கலவை ஆகும். கேப்சைசின் சில புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: இந்த 5 ராசி ஆண்களை காதலிக்கும் பெண்கள் ரொம்ப பாவம்... இவங்க நீங்க நினைக்கிறத விட ரொம்ப ஆபத்தானவங்க!

எலுமிச்சை

எலுமிச்சை

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது இரத்தத்தை சுத்தப்படுத்தவும் கல்லீரலில் இருந்து நச்சு நீக்கவும் ஒரு சிறந்த வழியாகும். கல்லீரல் செயல்பாடுகளை அதிகரிக்கக்கூடிய மற்ற உணவுப் பொருட்களைக் காட்டிலும் எலுமிச்சை சாற்றில் இருந்து கல்லீரல் அதிக நொதிகளை உருவாக்குகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியானது குளுதாதயோன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இது கல்லீரலை சுத்தப்படுத்தும் புரதமாகும்.

தண்ணீர்

தண்ணீர்

நல்ல நீரேற்றம் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் நச்சுத்தன்மையற்றதாகவும் வைத்திருக்க அடிப்படையானதாகும். நீர் இரத்தத்தின் PH அளவை பராமரிக்கவும், இரத்த பாகுத்தன்மையை பராமரிக்கவும் மற்றும் நச்சுகளை சிரமமின்றி வெளியேற்றவும் உதவுகிறது. போதுமான தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்ட உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Foods to Purify Your Blood in Tamil

Here is the list of foods you must add to your daily diet to purify blood.
Desktop Bottom Promotion