For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுயஇன்பம் பற்றி ஆண்களிடம் காலம்காலமாக கூறிவரும் கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?

|

பாலியல் வாழ்க்கை தொடர்பான கட்டுக்கதைகள் என்பது உலகம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகிறது. மக்கள் எளிதில் நம்பிவிடக்கூடிய கட்டுக்கதைகளில் பாலியல் தொடர்பான கட்டுக்கதைகள்தான் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். இணையத்தில் பார்ப்பதாக இருந்தாலும் சரி, யாரோ ஒருவர் பேசுவதைக் கேட்டாலும் சரி பாலியல் வாழ்க்கை தொடர்பான கட்டுக்கதைகள் அனைவருக்குள்ளும் ஒரு அதிர்வை நிச்சயம் ஏற்படுத்தும்.

Myths and Facts About Mens Reproductive Health

உடலுறவைப் பொறுத்தவரை பல தவறான தகவல்கள் மற்றும் முடிவுகளுக்கு வழிவகுக்கும் பல கட்டுக்கதைகளை ஆண்கள் எதிர்கொள்கின்றனர். எனவே ஆண்களைப் பற்றிய சில பொதுவான பாலியல் கட்டுக்கதைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த கட்டுக்கதைகளை எப்போதும் நம்பாதீங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுயஇன்பம் ஆரோக்கியமற்றது

சுயஇன்பம் ஆரோக்கியமற்றது

இது ஆண்களிடையே அதிகளவில் இருக்கும் கட்டுக்கதையாகும். சுயஇன்பத்தை சுற்றியுள்ள பல நகைச்சுவைகளை ஆண்கள் அன்றாடம் சந்திப்பார்கள். அதில் முக்கியமானது, நீங்கள் எவ்வளவு அதிகமாக சுயஇன்பம் செய்கிறீர்களோ, அவ்வளவு தீங்கு விளைவிக்கும். ஆனால் உண்மையில், இது தீங்கு விளைவிக்காது. இது மன உறுதியை அதிகரிக்கிறது, மனதை புத்துணர்ச்சியாக்குகிறது மற்றும் கவனம் செலுத்த உதவுகிறது.

சுயஇன்பம் உறவுகளைப் பாதிக்கும்

சுயஇன்பம் உறவுகளைப் பாதிக்கும்

உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு சுயஇன்பத்தால் பாதிக்கப்படாது. ஆனால், அது உங்கள் பாலியல் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும். உங்கள் அதிகரித்த பாலுணர்வால் உங்கள் மனைவி அட்ரினலின் வேகத்தை உணருவார்கள். சுயஇன்பம் தம்பதிகள் ஒருவருக்கொருவர் உடலைப் புரிந்துகொள்ள உதவுகிறது, மேலும் சிறந்த பாலியல் வாழ்க்கையை உருவாக்கிறது.

பாலியல் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை

பாலியல் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை

நல்ல பாலியல் ஆரோக்கியம் தடையற்ற கருவுற்ற கர்ப்பத்திற்கு காரணமாகிறது, ஆனால் தம்பதிகள் குழந்தைகளை கருத்தரிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டால், விஞ்ஞானிகள் சில ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளனர். உங்கள் பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இல்லையென்றால் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலை இப்போது இல்லை.

செக்ஸ் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது

செக்ஸ் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது

ஆய்வுகளின்படி, உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு 70 வயதிற்கு முன்பே புற்றுநோய் கண்டறியும் வாய்ப்பு குறைவாக உள்ளது. அடிக்கடி புணர்ச்சியை அனுபவிக்கும் ஆண்களும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடாதவர்களை விட 50% குறைவான இறப்பு அபாயத்தை பதிவு செய்துள்ளனர். புற்றுநோய்க்கும், உடலுறவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

மருந்துகள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கலாம்

மருந்துகள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கலாம்

உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பதன் மூலம், நீங்கள் சமீபத்தில் சில உடல் மாற்றங்களை அனுபவித்திருந்தால், உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்காத தீர்வுகளை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இருப்பினும், நீங்கள் எப்போதும் STD கள் மற்றும் STI களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விந்து வெளியான பிறகு சிறிது காலம் மட்டுமே வாழ முடியும்

விந்து வெளியான பிறகு சிறிது காலம் மட்டுமே வாழ முடியும்

விந்தணு வெளியேற்றத்திற்குப் பின் ஆணின் விந்தணு உண்மையில் பெண்ணின் இனப்பெருக்கப் பாதையில் ஐந்து நாட்கள் வரை வாழ முடியும், உடலுறவுக்குப் பிறகு நீங்கள் முழுமையாக சுத்தம் செய்தாலும் அதே காலம் வரை நீடிக்கும்.

காண்டம் அனைத்து தொற்றுநோய்களையும் தடுக்கும்

காண்டம் அனைத்து தொற்றுநோய்களையும் தடுக்கும்

காண்டம் பாலியல் தொற்றுநோய்கள் உங்களுக்கு வருவதையும், உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்கிறது. ஆனால் ஹெர்பெஸ் மற்றும் சிபிலிஸ் போன்ற சில பாலியல் தொற்றுநோய்கள் தோல்-தோல் தொடர்பு மூலம் மட்டுமே பரவும். எனவே நீங்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தினாலும், வழக்கமான பாலியல் ஆரோக்கிய பரிசோதனை எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths and Facts About Men's Reproductive Health

Checkout the popular myths and facts about men's reproductive health.
Desktop Bottom Promotion