Just In
Don't Miss
- News
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழை மறந்த மாணவர்கள்! ஃபெயில்கள் அதிகரிப்பு- டிஜிபி சைலேந்திர பாபு
- Movies
டயலாக்கை உளறி தள்ளும் ஆண்ட்ரியா.. என்ன செஞ்சாலும் ரொம்ப கியூட் நீங்க கொஞ்சும் ரசிகர்கள்!
- Sports
என்னுடைய பணிக்காலம் பிசிசிஐயின் பொற்காலம்.. எந்த சர்ச்சைகளுக்கும் இடமில்லை.. கங்குலி கருத்து
- Automobiles
இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும்... வருகிறது புது ரூல்ஸ்...
- Technology
இன்று பூமியை நெருங்கும் ஆபத்தான சிறுகோள்: இறுதி நொடியில் கண்டுபிடித்த NASA- பூமிக்கு ஆபத்தா?
- Finance
தங்கம் தான் விமோசனம்.. 192% பணவீக்கத்தை குறைக்க இதுதான் ஓரே வழி..!
- Travel
ஆசியாவிலேயே மிக உயரமான பாராகிளைடிங் ஸ்பாட் – பிர் பில்லிங்கில் ஒரு சகாசச் சுற்றுலா!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
12 நாடுகளில் தீவிரமாக பரவும் குரங்கு அம்மை.. இதன் அறிகுறிகள் என்ன? இதற்கு தடுப்பூசி உள்ளதா?
கொரோனாவை அடுத்து கடந்த சில வாரங்களாக உலகெங்கிலும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் குறைந்தது 12 நாடுகளில் சுமார் 80-க்கும் அதிகமான குரங்கு அம்மை வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதுவும் ஒன்பது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த நோயானது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தொலைதூர பகுதிகளில் பொதுவானது.
இந்த அரிய வைரஸ் தொற்று வழக்கமாக மிதமானதாக இருக்கும் மற்றும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாவதற்கு சில வாரங்கள் ஆகும் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. குரங்கு அம்மையை குரங்கு காய்ச்சல் என்றும் அழைப்பதுண்டு. சரி, குரங்கு அம்மை என்ற பெயர் எப்படி வந்தது, இதன் அறிகுறிகள் என்ன, இதற்கு தடுப்பூசி ஏதேனும் உள்ளதா, இது எப்படி பரவுகிறது என்பன போன்ற பிற தகவல்கள் குறித்து இப்போது விரிவாக காண்போம்.

குரங்கு அம்மை என்ற பெயர் எப்படி வந்தது?
1958 ஆம் ஆண்டு ஆய்வகத்தில் உள்ள குரங்குகளில் இருந்து குரங்கு அம்மை என்ற பெயரை ஆய்வாளர்கள் வைத்தனர். மனிதர்களிடம் இந்த குரங்கு அம்மையின் முதல் வழக்கானது 1970 ஆம் ஆண்டு காங்கோவில் பெரியம்மை நோயை அகற்றுவதற்கான தீவிர முயற்சியின் போது கண்டறியப்பட்டது. அன்று முதல் பிற மத்திய மற்றம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வழக்கு அவ்வப்போது பதிவாகி வருகிறது.

குரங்கு அம்மை என்றால் என்ன?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குரங்கு அம்மை ஒரு வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். இது முதன்முதலாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழும் மனிதர்களுக்கு பரவியது. தற்போது இந்த குரங்கு அம்மை வழக்கு இங்கிலாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, ஸ்வீடன், ஆஸ்ரேலியா, கனடா மற்றும் ஒருசில நாடுகளில் இருப்பதாக சந்தேகிப்படுகின்றன. ஆனால் குரங்கு அம்மை வழக்கு இந்தியாவில் இதுவரை இல்லை.

குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன?
குரங்கு அம்மை பொதுவாக தொற்று ஏற்பட்ட 5 முதல் 21 நாட்களுக்குப் பிறகு தெரிய வரும். இது பெரியம்மை போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். அதாவது காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி மற்றும் ஆற்றலின்மை போன்றவைற்றை சந்திக்கக்கூடும். குரங்கு அம்மையின் உடலின் வெளியே தெரியக்கூடிய ஓர் அறிகுறி என்றால் அது நிணநீர் கணுக்களில் வீக்கம். குறிப்பாக கழுத்துப் பகுதியில் ஏற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காய்ச்சலுக்கு 1 முதல் 3 நாட்களுக்குப் பிறகு கழுத்தைச் சுற்றி, உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் தடிப்புகள் தோன்றும். இந்த நோய் பொதுவாக 2-4 வாரங்கள் வரை நீடித்திருக்கும்.

குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது?
* குரங்கு அம்மையை உண்டாக்கும் வைரஸினால் பாதிக்கப்பட்ட விலங்கின் மீதமுள்ள உணவை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.
* பாதிக்கப்பட்ட நபரின் சளி, புண்கள் முலம் இது பரவலாம். தொற்று ஏற்பட்டவருடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளும் போது, அவரின் நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது.
* தாயிடம் இருந்து குழந்தைக்கு நஞ்சுக்கொடி வழியாகவும் பரவ வாய்ப்புள்ளது.
* பாதிக்கப்பட்டவருடன் பாலியல் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக என்று ஆராயப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி ஏதேனும் உள்ளதா?
குரங்கு அம்மை மற்றும் பெரியம்மைக்கு இடையே நிறைய ஒற்றுமை இருப்பதால், பெரியம்மைக்கான தடுப்பூசி குரங்கு அம்மைக்கு எதிராக சில நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. ஆய்வுகளின் படி, குரங்கு காய்ச்சலைத் தடுப்பதில் இம்வானெக்ஸ் பெரியம்மை தடுப்பூசி சுமார் 85 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். மேலும் குரங்கு அம்மையானது பெரியம்மையை விட குறைவாக தொற்றக்கூடியது மற்றும் குறைவான அளவிலேயே தீவிரமாக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெரியம்மை சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஆன்டிவைரல் ஏஜென்ட் குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க உரிமம் பெற்றுள்ளது.

குரங்கு அம்மை நோயை எவ்வாறு கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது?
* குரங்கு அம்மை நோயை கண்டறிய பாதிக்கப்பட்ட நபரின் காயங்கள் அல்லது உலர்ந்த மேலோடுகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. மேலும் நோயை உறுதிப்படுத்த PCR சோதனை செய்யப்படுகின்றன.
* குரங்கு காய்ச்சலுக்கு என்று குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. சிக்கல்களைத் தவிர்க்க அறிகுறிகள் தனித்தனியாக கவனிக்கப்பட வேண்டும். இருப்பினும், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பராமரிக்கும் போது, PPE உபகரணங்களைப் பயன்படுத்துவது மற்றும் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்வது அல்லது சானிடைசரை பயன்படுத்துவது போன்றவை மிகவும் முக்கியம்.