For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பற்றி அதிவேகமாக பரவி வரும் சில தவறான தகவல்கள்!

சீனாவில் கொரோனா வைரஸில் தாக்கத்தால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய். தற்போது கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் பல தவறான கருத்துக்களும் பரவி வருகிறது.

|

தற்போது உலகிலேயே மிகவும் கொடூரமான ஆரோக்கிய பிரச்சனையாக கருதப்படுவது கொரோனா வைரஸ் தாக்குதல் தான். சீனாவில் கொரோனா வைரஸில் தாக்கத்தால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய். இது தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதனுடன் கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் பல தவறான கருத்துக்களும் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.

Misconceptions About Coronavirus That You Need Not Believe

உதாரணமாக, சீன மக்கள் மட்டும் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சீன உணவை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்கக்கூடும். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு தடுப்பூசி உள்ளது போன்ற பல. எனவே இப்போது நாம் கொரோனா வைரஸ் பற்றிய நம்பக்கூடாத சில தவறான தகவல்களையும், சில உண்மைகளையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறான தகவல் #1

தவறான தகவல் #1

2019-nCoV மிகவும் ஆபத்தானது மற்றும் மற்ற எந்த வைரஸுடன் ஒப்பிடும் போது மிகவும் வேகமாக பரவக்கூடியது.

உண்மை

உண்மை

எந்த ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும், சமூக வலைத்தளம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்று தான் செயல்படுகிறது. இதனால் சாதாரண மற்றும் எளிதில் தீர்வு காணக்கூடிய பிரச்சனையும், மக்களை அச்சுறுத்தும் வகையில் மாறிவிடுகிறது. அப்படி தான் கொரோனா வைரஸ் பிரச்சனையும். கொரோனா வைரஸ் மற்ற வைரஸ்களைப் போன்றது தான். இந்த வைரஸ் தாக்கம் உள்ளவருடன் நெருக்கமாக பழகும் போது, மற்றவருக்கு பரவுகிறது தவிர வேறு எதுவும் இல்லை.

தவறான தகவல் #2

தவறான தகவல் #2

கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கிவிட்டால், உயிர் பிழைக்கவே முடியாது. மரணத்தை சந்திப்பது தான் ஒரே வழி.

உண்மை

உண்மை

கொரோனா வைரஸ் மரணத்தை உண்டாக்கும் என்று யாரேனும் கூறினால் நம்பாதீர்கள். அது வெறும் புரளி. ஆனால் அதில் சிறு உண்மை உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் இறுதியில் இறந்துவிடுவார். ஆனால் இந்த வைரஸ் தொற்றிலிருந்து அல்ல. மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் மரணத்தை சந்திப்பார்கள். ஆனால் தொற்று ஏற்பட்ட பல வருடங்கள் கழித்து.

தவறான தகவல் #3

தவறான தகவல் #3

கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி உள்ளது என்ற தகவல் தற்போது மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது வெறும் ஒரு புரளி தான்.

உண்மை

உண்மை

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பல கூற்றுகள் உள்ளன. ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல. பொதுவாக ஒரு வைரஸ் மக்களிடையே பரவினால், அதைக் கண்டுப்பிடிக்க சில காலம் எடுக்கும். மேலும் மருந்து கண்டுப்பிடித்து சோதனை செய்த பின்னரே, அது மக்களிடையே பரவலாக பயன்பாட்டிற்கு வரும். தாய்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் இன்னும் அது நிரூபிக்கப்படவில்லை.

தவறான தகவல் #4

தவறான தகவல் #4

கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலை இயற்கை சிகிச்சைகளின் மூலம் சரிசெய்ய முடியும் என்ற கருத்து சில நாட்களாக பரவி வருகிறது.

உண்மை

உண்மை

உலக சுகாதார அமைப்பின் படி, இயற்கை சிகிச்சைகள் மற்றும் மற்ற சிகிச்சை முறைகளால் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை சரிசெய்ய முடியாது. ஆன்டி-பயாடிக் மற்றும் எச்.ஐ.வி மருந்துகளால் கொரோனா வைரஸ் தொற்றை சரிசெய்யலாம் என்பது ஒரு புரளி. உலக சுகாதார அமைப்பு, ஆன்டி-பயாடிக் சிகிச்சை குறித்து டிவிட்டரில் வெளியிட்டது. அதில் கூறியதாவது: "ஆன்டி-பயாடிக் என்பது பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டுமே வேலை செய்யும், வைரஸிற்கு எதிராக அல்ல. எனவே கொரோனா வைரஸிற்கு ஆன்டி-பயாடிக் சிகிச்சை பலனளிக்காது."

தவறான தகவல் #5

தவறான தகவல் #5

சீன உணவுகள் அல்லது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதால் கொரோனா வைரஸ் தாக்கக்கூடும்.

உண்மை

உண்மை

கொரோனா வைரஸ் சீனாவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும், இது சீன உணவுகளின் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதில்லை. இப்படியொரு புரளி பரவுவதற்கு காரணம், சீனாவில் வுஹானில் உள்ள இறைச்சி மார்கெட்டில் இருந்து பரவியதால் தான் இருக்கும். எனவே வெறும் கூற்றை கொண்டு, எதையும் நம்பாதீர்கள்.

தவறான தகவல் #6

தவறான தகவல் #6

சீன மக்களுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும்.

உண்மை

உண்மை

இது ஒரு முட்டாள்தனமான ஒரு கருத்து. கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதால், சீன மக்களை மட்டும் தான் தாக்கும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும், இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும். அதுவும் இந்த வைரஸ் தொற்று உள்ளவருடன் நேரடியாகவோ, நெருக்கமாகவோ தொடர்பு கொண்டிருந்தால், உடனே மற்றவருக்கு அது தொற்றிக் கொள்ளும். எனவே ஒருவருடன் பேசும் போது, குறிப்பிட்ட இடைவெளியைப் பின்பற்றுங்கள். குறிப்பாக சீனாவில் இருந்து சமீபத்தில் வந்தவர்களிடம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியைப் பராமரித்து பேசுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Misconceptions About Coronavirus That You Need Not Believe

Here are some misconceptions about coronavirus that you must know for proper prevention from this global health disaster. Read on...
Story first published: Monday, February 17, 2020, 14:37 [IST]
Desktop Bottom Promotion