For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு

நம் உடலில் எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு வெப்பமும், குளிர்ச்சியும் இருக்கும். ஆனால் உங்களுக்கு உடல் எப்பொழுதும் ஜில்லென்று இருந்தால் அதற்கு பின்னால் பல பிரச்சினைகள் உள்ளது.

|

நம் உடல் என்பது பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலில் எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு வெப்பமும், குளிர்ச்சியும் இருக்கும். சிலசமயம் இவற்றின் அளவு மாறுபடும். அவ்வாறு மாறுபடும்போது நமது உடலில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு குளிர் காலங்களில் கைகள் ஜில்லென்று இருக்கும். ஆனால் உங்களுக்கு உடல் எப்பொழுதும் ஜில்லென்று இருந்தால் அதற்கு பின்னால் பல பிரச்சினைகள் உள்ளது.

Medical Reasons Why Youre Always Cold

உண்மைதான் உங்கள் உடல் ஜில்லென்று இருக்க பல காரணங்கள் உள்ளது, அவற்றில் பெரும்பாலானவை உங்கள் உடலில் இருக்கும் பிரச்சினையின் அறிகுறியாகவே இருக்கிறது. இந்த பதிவில் உங்கள் உடல் ஜில்லென்று இருப்பதற்கு பின்னால் இருக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு

உங்கள் உடல் எப்பொழுதும் ஜில்லென்று இருக்க முதல் காரணம் உங்கள் உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைபாடுதான். இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல சிவப்பு இரத்த அணுக்களுக்கு இரும்பு தேவைப்படுகிறது, மேலும் குறைந்த அளவு இரும்பு உங்கள் சுழற்சியை பாதிக்கக்கூடும். இதனால் உங்கள் உடல் மூளை மற்றும் இதயம் போன்ற முக்கிய பகுதிகளுக்கு ஆக்சிஜனை கடத்துகிறது. இதனால் உங்கள் கை மற்றும் கால்கள் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கிறது.

தைராய்டு

தைராய்டு

உங்கள் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உங்கள் உடல் போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாதபோது உங்கள் உடல் ஜில்லென்று இருக்க வாய்ப்புள்ளது. இதனுடன் முடி உதிர்தல், மலச்சிக்கல், எடை அதிகரிப்பு அல்லது சோர்வு போன்ற தைராய்டு நோயின் பிற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் ஹைப்போ தைராய்டிசத்திற்கான இரத்த பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

எடை குறைவாக இருப்பது

எடை குறைவாக இருப்பது

எடை குறைவாக இருப்பதால் இரண்டு காரணங்களுக்காக நீங்கள் எப்போதும் குளிராக உணர வாய்ப்புள்ளது. கொழுப்பு ஒரு இன்சுலேட்டராக செயல்படுகிறது, எனவே குறைந்த கொழுப்பு இருப்பதால் நீங்கள் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது. கலோரிகளைக் குறைப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும், மேலும் உங்கள் உடலுக்கு வெப்பத்தைத் தருவதற்கு குறைந்த ஆற்றலைக் கொடுக்கும். உங்கள் உடல் எப்பொழுதும் குளிராக உணர்ந்தால் எடையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

MOST READ: தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பின்னால் இருக்கும் மகத்துவம் என்னவென்று தெரியுமா?

தூக்க பற்றாக்குறை

தூக்க பற்றாக்குறை

நீங்கள் போதுமான அளவு தூக்கத்தை பெறாத போது உங்கள் உடலில் குளிர்ச்சி அதிகமாக காரணமாக அமைகிறது. தூக்கம் மற்றும் உடல் குளிர்ச்சிக்கு தொடர்புள்ளது, மேலும் நாள்பட்ட சோர்வு உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைத்து, பகலில் குளிர்ச்சியாக உணர வைக்கும். உங்கள் உடல் வெப்பநிலை இரவில் ஏற்ற இறக்கமாக இருக்கும், மேலும் உங்கள் உடல் அந்த சுழற்சியில் பழகும். நீங்கள் வழக்கத்தை விட தாமதமாக தூங்கினால் உங்கள் உடல் வெப்பநிலை அதே நேரத்தில் குறையக்கூடும்.

நீர்ச்சத்து குறைவு

நீர்ச்சத்து குறைவு

உங்கள் உடலில் போதுமான தண்ணீர் இல்லாதபோது, உங்கள் உடலுக்குள் இரத்த சுழற்சி குறைவாக இருக்கும். உங்கள் உடலில் இருக்கும் நீர் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ள உதவும். உங்களை நீரேற்றமாக வைத்திருக்க, உங்கள் எடையில் பாதி அவுன்ஸ் தண்ணீரில் குடிக்க வேண்டும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் நரம்பியல் நோயை உருவாக்க முடியும், இது உறுப்புகளில் உள்ள நரம்புகளை சேதப்படுத்தும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் எப்பொழுதும் உடலை குளிராகவோ அல்லது வெப்பமாகவோ உணருவார்கள். இது உடல்ரீதியானதாக இருக்காது ஆனால் குளிர் உணர்வு எப்பொழுதும் இருக்கும். இது கால்களிலிருந்தோ அல்லது கைகளிலிருந்தோ மூளைக்கு அனுப்பப்படும் சிக்னல் ஆகும்.

போதுமான அளவு கொழுப்பு உண்ணாமல் இருப்பது

போதுமான அளவு கொழுப்பு உண்ணாமல் இருப்பது

குளிர்காலத்தில் நீங்கள் சூடான உணவுகளை சாப்பிட விரும்புவதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. கொழுப்பு உணவுகள் உங்களை நிறைவாக உணர வைக்கிறது, மேலும் சூடாகி உணர வைக்கிறது. கொழுப்பு குறைவான உணவுகள் சாப்பிடுவது உங்களின் கைமற்றும் கால்களை எப்பொழுதும் குளிராக உணர வைக்கிறது.

MOST READ: இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா?

தசைவலிமை இன்மை

தசைவலிமை இன்மை

உங்களின் தசைகளின் வலிமை உங்களுக்கு வெப்பத்தை வழங்குகிறது. இது உங்களின் அனைத்து பாகங்களையும் சூடாக உணர வைக்கும். எனவே எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து உங்கள் உடலி வலிமையாக வைத்துக்கொள்வது உங்களை வெப்பமாக உணரவைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Medical Reasons Why You're Always Cold

Here are the medical reasons behind why your are always cold.
Desktop Bottom Promotion