For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Marburg Virus : எபோலாவை விட கொடிய கொரோனாவை விட வேகமாக பரவக்கூடிய மரணத்தை உண்டாக்கும் மார்பர்க் வைரஸ்!

மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவை விட கொடிய மற்றும் கொரோனாவை விட அதிவேகமாக பரவக்கூடிய திறன் கொண்ட மார்பர்க் வைரஸ் தாக்கத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

|

ஏற்கனவே கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்கத்தால் உலகமே திணறிக் கொண்டிருக்கிறது. இதுவரை ஏராளமான உயிர்களை இழந்துள்ளோம். கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போட்டு வந்தாலும், இன்னும் அந்த வைரஸ் மக்களிடையே பரவிக் கொண்டு இருக்கிறது.

Marburg Virus 1st Case Detected in W Africa : Know History, Symptoms,Treatment and How does it Spread

இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவை விட கொடிய மற்றும் கொரோனாவை விட அதிவேகமாக பரவக்கூடிய திறன் கொண்ட மார்பர்க் வைரஸ் தாக்கத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொரோனாவை முற்றிலும் ஒழித்துக்கட்ட முடியாத நிலையில், இப்படியொரு புதிய கொடிய வைரஸ் மூலம் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பர்க் வைரஸ்

மார்பர்க் வைரஸ்

மார்பர்க் வைரஸ் நோய் முதன்முதலில் 1967 இல் கண்டறியப்பட்டது. அப்போது இத்தொற்றால் 7 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு அங்கோலாவில் திடீரென்று வெடித்து சுமார் 227 பேரின் உயிரைப் பறித்தது. தற்போது மீண்டும் கினியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுவும் மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவில் 2021 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி நோயாளி ஒருவர் அதிதீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சில நாட்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்த அந்த நோயாளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில், 88 சதவீதம் இறப்பு விகிதத்தைக் கொண்ட மார்பர்க் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொடிய நோய்த்தொற்று

கொடிய நோய்த்தொற்று

மார்பர்க் வைரஸ் நோய் ரூசெட்டஸ் வெளவால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது மற்றும் 88 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த கொடிய வைரஸ் எபோலா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் எபோலாவைப் போல் மிகவும் கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது. சொல்லப்போனால், இந்த வைரஸ் எபோலா மற்றும் கொரோனாவை விட இருமடங்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மார்பர்க் நோய் எவ்வாறு பரவுகிறது?

மார்பர்க் நோய் எவ்வாறு பரவுகிறது?

மார்பர்க் வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதருக்கு பரவிய பின்னர், மனிதரிடம் இருந்து மனிதருக்கு தொடர்பு மூலம் பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. அதுவும் தொற்று ஏற்பட்டுள்ள நபரின் உடல் திரவங்களான, நீர்த்துளிகள் அல்லது இரத்தம் படிந்த பொருட்களுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் பரவும். அதோடு குகை அல்லது சுரங்க பகுதிகளில் நீண்ட காலம் இருப்பவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மார்பர்க் நோயின் அறிகுறிகள் என்ன?

மார்பர்க் நோயின் அறிகுறிகள் என்ன?

மார்பர்க் நோய்த்தொற்று ஏற்பட்ட 5-10 நாட்களுக்குப் பிறகு, காய்ச்சல், குளிர், தலைவலி மற்றும் தசை வலி போன்றவை ஆரம்பமாகும். தொற்று ஏற்பட்ட மூன்றாம் நாளில் குமட்டல், வாந்தி, நெஞ்சு வலி, தொண்டை புண், அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை சந்திக்க நேரிடும். மேலும் மார்பு, முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தடிப்புகள் உருவாகும். தொற்றின் தீவிர நிலையில், மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, தீவிரமான எடை இழப்பு, அதிர்ப்பு, கல்லீரல் செயலிழப்பு, அதிகப்படியான இரத்தக்கசிவு மற்றும் பல உறுப்புக்களின் செயலிழப்பு போன்றவை ஏற்படுவதாகவும் சிடிசி தெரிவித்துள்ளது. இந்நோய்த்தொற்று அதிதீவிரமாக இருந்தால், தொற்று ஏற்பட்ட 8-9 நாட்களில் மரணத்தை உண்டாக்கும்.

மார்பர்க் வைரஸ் தொற்றை கண்டறிவது எப்படி?

மார்பர்க் வைரஸ் தொற்றை கண்டறிவது எப்படி?

பெரும்பாலான நோயின் அறிகுறிகள் மலேரிய மற்றும் டைபாய்டு காய்ச்சலை ஒத்ததாக இருப்பதால், இந்நோய்த்தொற்றை கண்டறிவது கடினமாக இருக்கும். இருப்பினும், மார்பர்க் வைரஸைக் கண்டறிவதற்கான பொதுவான முறைகள் பின்வருமாறு:

* அறிகுறிகளின் பகுப்பாய்வு

* வைரஸ் தனிமைப்படுத்தல்

* ஆன்டிபாடி-கேப்சர் என்சைம்-இணைக்கப்பட்ட இம்யூனோசார்பன்ட் மதிப்பீடு (ELISA)

* சீரம் நடுநிலைப்படுத்தல் சோதனை

* ஆன்டிஜென்-கேப்சர் கண்டறிதல் சோதனைகள்

* எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி

* RT-PCR மதிப்பீடு

மார்பர்க் நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியுமா?

மார்பர்க் நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியுமா?

இதுவரை, மார்பர்க் நோய்க்கு சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதிக நீரைக் குடிப்பது, குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகள் உயிர்வாழும் வாய்ப்பை மேம்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதோடு, ஆதரவான மருத்துவமனை சிகிச்சை, ஆக்சிஜன் நிலை மற்றும் இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பது, இழந்த இரத்தம் மற்றும் இரத்த உறைதல் காரணிகளை மாற்றுவது மற்றும் சிக்கலான அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்றவையும் நோயாளிகளின் மரணத்தைத் தடுக்கும்.

மார்பர்க் வைரஸ் - தடுப்பு முறைகள்

மார்பர்க் வைரஸ் - தடுப்பு முறைகள்

* நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தொற்று காலத்தில் வௌவால்கள் இருக்கும் பகுதிக்கு செல்வதைத் தவிர்க்கவும்.

* நோய்த்தொற்றுள்ளவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

* நோயுற்றவர்களைச் சுற்றியுள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தி, இந்த நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

* முறையான கண்காணிப்பு மற்றும் வழக்குகளை பதிவு செய்ய அரசு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Marburg Virus 1st Case Detected in W Africa : Know History, Symptoms,Treatment and How does it Spread

Marburg Virus 1st Case Detected in W Africa : Know What is Marburg Virus, Symptoms, Treatment and How does it Spread; explained in tamil.
Desktop Bottom Promotion