Just In
- 31 min ago
அமேசானில் 70% தள்ளுபடியில் சமையலறை பொருட்கள்.. மிஸ் பண்ணாம சீக்கிரம் வாங்குங்க...
- 1 hr ago
அதிரடி தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போதே அமேசானில் ஆடர் செய்யுங்கள்!
- 2 hrs ago
அமேசானில் 60% தள்ளுபடி விற்பனையில் உடற்பயிற்சி மற்றும் வீட்டை நவீனமாக்கும் பொருட்களை வாங்குங்கள்...!
- 2 hrs ago
வெஜ் சால்னா
Don't Miss
- News
முத்தலாக் செல்லாது தீர்ப்பு, விஜய் மல்லையாவுக்கு ஜெயில்..யார் இந்த புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்?
- Movies
சமந்தாவுக்காக போட்ட டாட்டூ..அழிக்க மனம் வரவில்லை..நெகிழவைத்த நாகசைத்தன்யா!
- Sports
"ஃப்ளவர்னு நினைச்சியா.. ஃபையரு".. ஆசியக்கோப்பை குறித்து இஷானின் ஆதங்க பதிவு..ஏன் சேர்க்கப்படவில்லை?
- Automobiles
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
- Technology
எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!
- Finance
பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
மா இலைகளை இப்படி சாப்பிட்டீங்கனா... உங்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் வராதாம் தெரியுமா?
'பழங்களின் அரசன்' என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைக்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் ஒரு சுவையான பழமாகும். இந்த வெப்பமண்டல பழம் மிகவும் சுவையானது மற்றும் அனைத்து ஊட்டச்சத்து நன்மைகளையும் கொண்டுள்ளது. பழுத்த மாம்பழம் அல்லது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழுத்த மாம்பழமாக இருந்தாலும், இந்த பழம் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. ஆனால், இந்த பழத்தின் இலைகள் கூட உண்ணக்கூடியவை மற்றும் மிகவும் ஆரோக்கியமானவை என்று உங்களுக்குத் தெரியுமா?
சரி, மா இலைகளின் பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அவற்றை நீங்கள் எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.

மா இலைகளின் ஊட்டச்சத்து மதிப்பு
மா இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி ஆகியவற்றின் நன்மைகள் நிரம்பியுள்ளன. ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனால்கள் மா இலைகளில் அதிகம் உள்ளதால் அவை சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. உண்மையில், மா இலைகளில் மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இளம் பச்சை மாம்பழ இலைகள் மென்மையாகவும், சில இடங்களில் இவை சமைக்கப்படுவதையும் அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மேலும் ஆயுர்வேதத்திலும் மா இலைகள் பல நோய்களை குணப்படுத்தும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
மா இலைகள் ஹைபோடென்சிவ் என்று கூறப்படுகிறது. அதாவது அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும், இரத்த நாளங்களை வலுப்படுத்தும் பண்புகள் மா இலைகளுக்கு உள்ளது. இது இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் அதை சாதாரணமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது
பாலிபினால்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களின் தடயங்களைக் கொண்டு, மா இலைகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மூல காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க இந்த இலைகள் உதவுகின்றன.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது
மாம்பழத்தில் சர்க்கரை நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட முடியாத ஒரு பழமாக மாம்பழம் உள்ளது. இருப்பினும், இந்த பழத்தின் இலைகள் சர்க்கரை நோய்க்கு எதிரான இயற்கை சிகிச்சை என்று கூறப்படுகிறது. ஆந்தோசயனின்கள் எனப்படும் டானின்கள் நீரிழிவு நோயின் ஆரம்ப நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. மேலும், இது சர்க்கரை நோயை தடுக்க உதவுகிறது.

முடி பிரச்சனைகளை தீர்க்கிறது
தலைமுடிக்கு சிறந்த சிகிச்சை அளிக்க இயற்கை வைத்தியம் விரும்புவோருக்கு, மா இலைகள் சிறந்தவை. இந்த இலைகளில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது ஆரம்பகால நரை முடியை தாமதப்படுத்துகிறது. மேலும், மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் ஏ & சி கொலாஜன் உற்பத்திக்கு வழி வகுக்கும். இது ஆரோக்கியமான முடி வளர மேலும் உதவுகிறது.

வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவுகிறது
மாங்காய் இலைகள் வயிற்றுப் பிரச்சனை பானத்திற்குக் குறைவில்லை என்று சொன்னால் தவறில்லை. அவை வயிற்றுப் புண்களை கணிசமாகக் குணப்படுத்த உதவும். சிறந்த முடிவுகளுக்கு, மாம்பழ டீயை வெறும் வயிற்றில் தவறாமல் உட்கொண்டு வித்தியாசத்தைப் பார்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அமைதியின்மை மற்றும் கவலையை குணப்படுத்துகிறது
மா இலைகளின் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று, அவை பதட்டத்திற்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தது. கவலையினால் ஏற்படும் அமைதியின்மையிலிருந்து விடுபட மாம்பழ இலை தேநீரை அருந்தலாம். இந்த தேநீர் உங்கள் கவலையை குறைத்து, மன நிம்மதியை ஏற்படுத்தும்.

மா இலைகளை எப்படி சாப்பிடுவது
?மா இலைகளைப் பற்றிய இதுபோன்ற தகவல்களை அறிந்த பிறகு, அவற்றை எவ்வாறு சாப்பிடுவது என்பது பற்றி நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். தொடக்கத்தில், நீங்கள் 10-12 மாங்காய் இலைகளை 150 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து மாம்பழ தேநீர் தயாரித்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அல்லது மாலையில் இந்த மா இலை தேநீரை சாப்பிடுங்கள் அல்லது நீங்கள் மா இலை தேநீர் பைகளைப் பயன்படுத்தியும் தேநீர் தயாரிக்கலாம்.