For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா அது கல்லீரல் நோயாம்.. இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்.. !

சிரோசிஸுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், உடல்நலப் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து வடுவை தாமதப்படுத்தலாம் அல்லது நிறுத்தலாம் மற்றும் சிக்கல்களைக் குறைக்கலாம். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானத

|

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதன் செயல்பாடுகளும் மிகவும் இன்றியமையாதது. உறுப்புகளின் செயல்பாடுகளால் தான் நாம் உயிர் வாழ்கிறோம். இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் சரியாக செயல்படும் வரை நமக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், இவற்றின் செயல்பாடுகள் குறையத்தொடங்குவது நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கல்லீரல் செயல்பாடு குறித்து நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். கல்லீரல் சிறிய அளவுள்ள ஒர் உறுப்பு. இது உங்கள் அடிவயிற்றின் வலது பக்கத்தில் உங்கள் விலா எலும்பின் கீழ் அமைந்திருக்கும். கல்லீரலானது உணவை ஜீரணிக்கவும், உங்கள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் அவசியம். பொதுவாக உங்கள் கல்லீரல் பாதிப்படைய மற்றும் நோய்கள் உருவாக பல காரணங்கள் உள்ளன.

Liver Cirrhosis Early Signs And Symptoms in Tamil

கல்லீரல் நோய் என்பது கல்லீரலின் இயல்பான, ஆரோக்கியமான செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கும் எந்த நோயும் ஆகும். கல்லீரல் சிரோசிஸ் கல்லீரல் தொடர்பான பல்வேறு வகையான பிரச்சனைகளால் ஏற்படும் கல்லீரல் வடு அல்லது ஃபைப்ரோஸிஸ் என குறிப்பிடப்படுகிறது. வடு திசு படிப்படியாக கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை மாற்றுகிறது, இது இறுதியில் குறைந்த செயல்திறனை கொண்டது. இக்கட்டுரையில் கல்லீரல் பற்றியும் கல்லீரல் சிரோசிஸின் ஆரம்ப அறிகுறிகளை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரலின் பங்கு

கல்லீரலின் பங்கு

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு நாளில் பல செயல்பாடுகளைச் செய்கிறது கல்லீரல். இது உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, உணவை ஜீரணிக்க உதவும் நொதிகளை உருவாக்குகிறது, சர்க்கரை மற்றும் ஊட்டச்சத்துக்களை சேமிக்கிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏதேனும் காரணங்களால் உங்கள் கல்லீரல் காயமடையும் போது, ஆரோக்கியமான கல்லீரல் செல்கள் அழற்சி அல்லது இறக்கும். அதைத் தொடர்ந்து செல் பழுதுபார்க்கும் செயல்முறை ஏற்படுகிறது, இது பெரும்பாலும் திசு வடுவை ஏற்படுத்துகிறது. உறுப்பில் வடு திசுக்கள் குவிவது அதன் செயல்பாட்டை சீர்குலைத்து கல்லீரல் சிரோசிஸுக்கு வழிவகுக்கிறது.

MOST READ: பானை மாதிரி இருக்க உங்க வயித்து தொப்பையை ஆயுர்வேத முறைப்படி எப்படி ஈஸியா குறைக்கலாம் தெரியுமா?

உயிருக்கே ஆபத்தானது

உயிருக்கே ஆபத்தானது

சிரோசிஸுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், உடல்நலப் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து வடுவை தாமதப்படுத்தலாம் அல்லது நிறுத்தலாம் மற்றும் சிக்கல்களைக் குறைக்கலாம். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக முடியலாம்.

யார் ஆபத்தில் உள்ளனர்?

யார் ஆபத்தில் உள்ளனர்?

கல்லீரல் சிரோசிஸ் என்பது இரண்டாம் நிலை சுகாதார நிலை. இது மற்றொரு கல்லீரல் பிரச்சனை அல்லது நோயின் காரணமாக அடிக்கடி உருவாகிறது. நீங்கள் கல்லீரல் நிலைக்கு சிகிச்சையளிக்காவிட்டால், அது மோசமாகி, காலப்போக்கில் சிரோசிஸாக மாறும். கல்லீரல் சிரோசிஸை உருவாக்கும் அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்தும் சில பழக்கவழக்கங்கள் இங்கே.

  • பல ஆண்டுகளாக ஆல்கஹால் அருந்துவது
  • வைரஸ் ஹெபடைடிஸ்
  • கட்டுப்பாடற்ற நீரிழிவு
  • உடல் பருமன்
  • பகிரப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்தி மருந்துகளை செலுத்துதல்
  • கல்லீரல் நோயின் வரலாறு
  • பாதுகாப்பற்ற உடலுறவு
  • அறிகுறிகள்

    அறிகுறிகள்

    ஆரோக்கியமற்ற உயிரணுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, நீங்கள் அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டும். இது சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை எடுக்க உதவும். கல்லீரல் பாதிப்பு விரிவடையும் வரை சிரோசிஸ் எந்த அறிகுறியையும் காட்டாது. நீங்கள் அனுபவிக்கக்கூடிய அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.

    MOST READ: மருந்துகளே இல்லாமல் உங்க இரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

    எளிதில் இரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு

    எளிதில் இரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு

    நமது கல்லீரல் இரத்த உறைதலுக்குத் தேவையான வைட்டமின் கே உதவியுடன் ஒரு புரதத்தை உற்பத்தி செய்கிறது. இதுதவிர, உறுப்பு பழைய அல்லது சேதமடைந்த இரத்த அணுக்களை உடைக்க உதவுகிறது. கல்லீரலில் காயம் ஏற்பட்டால், அது எளிதில் காயமடைவதால் போதுமான புரதத்தை உருவாக்காது.

    தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறமாற்றம்

    தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறமாற்றம்

    மஞ்சள் காமாலை என்பது தோல் மற்றும் ஸ்க்லெரா மஞ்சள் நிறமாக மாறும் ஒரு நிலை. கல்லீரலால் சுரக்கும் மஞ்சள்-ஆரஞ்சு பித்த நிறமி அதிக அளவு சுரப்பதால் பிலிரூபின் காரணமாக தோல் இந்த நிறத்தை எடுக்கிறது. கல்லீரல் காயப்படும்போது, உடலில் உள்ள பித்தத்தின் அளவைக் கட்டுப்படுத்தத் தவறி, இந்த உடல்நிலைக்கு வழிவகுக்கிறது.

    உங்கள் கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம்

    உங்கள் கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம்

    ஆல்புமின் என்ற புரதத்தின் உற்பத்தி குறைவதால் கால்கள் மற்றும் கைகளின் வீக்கம் ஏற்படுகிறது. இந்த புரதம் இரத்த நாளங்களில் இருந்து சுற்றியுள்ள திசுக்களில் இரத்தம் வெளியேறாமல் பாதுகாக்கிறது. குறைவான புரத திரவங்கள் இருக்கும்போது இரத்தக் குழாய்களில் இது குவியத் தொடங்குவைத்தால் வீக்கம் ஏற்படுகிறது.

    MOST READ: நம் முன்னோர்கள் போல நீங்களும் கட்டுமஸ்தான உடலை பெற என்னென்ன உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?

    அடிவயிற்றில் திரவக் குவிப்பு

    அடிவயிற்றில் திரவக் குவிப்பு

    நாள்பட்ட கல்லீரல் நோயில், அடிவயிற்றில் திரவம் குவிந்து வயிற்றுப் பரவலை ஏற்படுத்தும். இது உங்கள் தொப்பை இறுக்கமாகவும் வீக்கமாகவும் இருக்கும். கல்லீரல் செயலிழப்பு காரணமாக, திரவம் வயிற்றுப் புறணி மற்றும் உறுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தை நிரப்பத் தொடங்குகிறது.

    எடை இழப்பு

    எடை இழப்பு

    உணவு மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் எதிர்பாராத விதமாக உடல் எடையை குறைப்பது கவலையின் ஒரு காரணமாக இருக்கலாம். இது பெரும்பாலும் கல்லீரல் சிரோசிஸின் ஆரம்ப அறிகுறியாகும் மற்றும் அதை கவனிக்கக்கூடாது. உங்கள் உடல் எடை குறைவதை நீங்கள் கண்டால் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Liver Cirrhosis Early Signs And Symptoms in Tamil

Here we are talking about early signs and symptoms of liver cirrhosis in tamil.
Story first published: Wednesday, August 11, 2021, 15:43 [IST]
Desktop Bottom Promotion