For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா?... இதெல்லாம்தான்...

உடலுறவைத் தவிர இன்னும் வாழ்க்கையில் சுவாரஸ்யமான நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதுபற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்

|

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் உங்கள் முகமும் மகிழ்ச்சி அடையும். இந்த புன்னகை என்பது எல்லோருக்கும் பிடித்த விஷயமும் கூட. எதையும் மகிழ்ச்சியுடன் அணுகும் போது எப்போதும் வெற்றி தான். ஒரு சிறு புன்னகையுடன் நண்பரை பார்த்து சிரியுங்கள், குழந்தையை அன்புடன் தூக்குங்கள், மலர்ந்த முகத்துடன் வீட்டிற்கு வருவோரை வரவேறுங்கள் எல்லாரும் உங்களை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.

காரணம் புன்னகை செய்கிற மாயாஜாலம் அப்படித்தான். சரி இந்த மகிழ்ச்சியை எப்படி பெறலாம். நம்மைச் சுற்றி இருக்கும் சின்ன சின்ன விஷயங்களில் கூட மகிழ்ச்சி நிரம்பி ததும்புகிறது. நாம் தான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எப்போதும் சோகம் எப்போதும் புலம்பல் பாட்டு பாடிக் கொண்டு இருக்கிறோம். சில பேருக்கு இரவில் சென்று ஐஸ் க்ரீம் சாப்பிடுவது பிடிக்கும்.

Little Things That Will Make You Happy, And No, It’s Not Sex

சில பேருக்கு குழந்தைகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியாக நினைப்பார்கள். இப்படி சின்னச் சின்ன விஷயங்களை செய்து கூட நீங்கள் மகிழ்வாக வாழலாம். அந்த வகையில் உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய சின்ன சின்ன ஐடியாக்கள் பற்றித் தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை காற்றை சுவாசியுங்கள்

காலை காற்றை சுவாசியுங்கள்

காலையில் அப்படியே எழுந்து சூரியனின் லேசான கதிர்களும் பனிச் சொட்டும் காலை வேளையை என்றாவது நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா. தினமும் காலையில் பால்கனியில் நின்று இயற்கையின் அழகை ரசிப்பதே தனி சுகம் தான். இப்படி எனர்ஜட்டிக்காக உங்கள் நாளை துவங்குகள். மனதுக்குள் சந்தோஷமும் ஒட்டிக் கொள்ளும். உங்கள் உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

MOST READ: நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்னு ஒரு நோயா?... இது யாருக்கெல்லாம் வரும்னு தெரியுமா?

100 ரூபாயை கண்டுபிடியுங்கள்

100 ரூபாயை கண்டுபிடியுங்கள்

ஒரு நாள் உங்க ஜீன்ஸ் பேண்ட்டில் வைத்த 100 ரூபாயை மறந்து விடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ரெம்ப நாள் கழித்து அந்த பழைய ஜீன்ஸ் பேண்ட்டில் வைத்த ரூபாய் கிடைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு சந்தோஷமான பீலிங்கை கொடுக்கும்

ரேடியோவில் உங்களுக்கு பிடித்த பாடல் கேளுங்கள்

ரேடியோவில் உங்களுக்கு பிடித்த பாடல் கேளுங்கள்

இசை ஒரு அற்புதமான மருந்து. மனதை சந்தோஷப்படுத்துவதில் இசை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ரேடியோவில் உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மகிழலாம். இது உங்களுக்கு மறக்க முடியாத சில ஞாபகங்களையும், அதே நேரத்தில் சந்தோஷத்தையும் அள்ளிக் கொடுக்கும்.

எதிர்பாராத க்ரீன் சிக்னல்

எதிர்பாராத க்ரீன் சிக்னல்

உங்களுக்கு ஒரு இன்டர்வியூ இருக்கிறது. வேக வேகமாக சாலையை கடக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் ரெட் சிக்னல். கொஞ்சம் யோசித்து பாருங்கள் காத்திருக்கும் போது எவ்வளவு டென்ஷனாக இருக்கும். இதுவே உடனே க்ரீன் சிக்கல் போட்டு விட்டால் அவ்வளவு தான் சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். நாம் எதிர்ப்பார்த்த ஒன்னு உடனே கிடைக்கும் போது வரும் சந்தோஷமே அலாதி தான்.

முதலில் எழுந்திருங்கள் இன்னும் தூங்க நேரம் இருக்கிறது

நிறைய பேருக்கு நேரத்திற்கு எழுந்திருக்க முடியாது. கஷ்டப் பட்டு அலாரம் எல்லாம் வைத்து அடித்த பிறகு மறுபடியும் தூங்குவார்கள். இதுவே சீக்கிரம் நீங்கள் எழுந்திடுங்கள். அலாரம் அடிக்க இன்னும் நேரம் இருக்கிறது என்று தெரிந்தால் எப்படி இருக்கும். ஆகா இன்னும் தூங்கலாம் என்று மறுபடியும் படுக்கையில் விழுங்கள். இந்த சுகம் ஒரு தனி தான்.

மண் வாசம் மழைத்துளி வாசம்

மண் வாசம் மழைத்துளி வாசம்

என்றைக்காவது மழை பெய்யும் போது அதன் முதல் துளி மண்ணில் படும் வாசத்தை நுகர்ந்து இருக்கிறீர்களா. கண்டிப்பாக இல்லை என்றால் இந்த சந்தோஷ த்தை அனுபவித்து பாருங்கள். அந்த மண் வாசனை உங்கள் மூக்கை மட்டும் அல்ல மனதையும் துளைத்து செல்லும். அப்படியே முகர்ந்து கொண்டே சொட்டும் மழையை ரசியுங்கள். இந்த சந்தோஷம் போதுமே.

ஆடைகளுக்கு தள்ளுபடி

ஆடைகளுக்கு தள்ளுபடி

ஒரு கடைக்கு செல்கிறீர்கள் உங்களுக்கு பிடித்த ஆடைகளை எல்லாம் வாங்குகிறீர்கள். வெளியே பில் போடும் போது உங்கள் ஆடைகளுக்கு நிறைய தள்ளுபடி சலுகைகளை கொடுத்தால் எப்படி இருக்கும். அப்படியே பூரித்து போய்விடுவீர்கள். இந்த சின்ன விஷயம் உங்களுக்கு பெரிய சந்தோஷத்தை தரும்.

MOST READ: மகாலட்சுமி அருள் எந்த ராசிக்கு இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?... இத படிங்களேன்...

பழைய ஞாபகம் கையில் கிடைத்தால்

பழைய ஞாபகம் கையில் கிடைத்தால்

வீட்டையையோ அல்லது அறையையோ சுத்தம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்றோ தொலைந்த உங்கள் சின்ன வயசு போட்டால் உங்கள் கையில் கிடைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக சந்தோஷப்படுவீர்கள். மலரும் நினைவுகளை பலரிடமும் சொல்லி ஆனந்தம் அடைவீர்கள் அல்லவா.

குழந்தைகளை சிரிக்க வைத்து பார்த்திருக்கிறீர்களா

குழந்தைகளை சிரிக்க வைத்து பார்த்திருக்கிறீர்களா

என்னைக்காவது குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத சிரிப்பை ரசித்திருக்கிறீர்களா. பாருங்கள் அந்த சந்தோஷம் உங்களையும் தொற்றிக் கொள்ளும். குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் மழலைச் சொல், சிரிப்பு இதையெல்லாம் ரசித்து பாருங்கள். வேறு எங்கும் இல்லாத சந்தோஷம் கிட்டும்.

குளிர்கால வெதுவெதுப்பு

குளிர்கால வெதுவெதுப்பு

நடுங்கும் குளிரில் போர்வைக்குள் சுருண்டு கிடந்தது உண்டு. போர்வைக்குள் கிடைக்கும் அந்த கதகதப்பு அவ்வளவு சுகமாக இருக்கும். கை, கால்களை எல்லாம் மடக்கி போர்வைக்குள் இருக்கும் கதகதப்பை பீல் பண்ணுங்க.

ஜன்னல் சீட்

ஜன்னல் சீட்

பேரூந்தில் அல்லது ரயிலில் பயணம் செய்யும் போது ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு போனது உண்டு. வித்தியாசமான மனிதர்கள், வரிசையான கட்டிடங்கள், நகரும் மரங்கள், வானம், உதிக்கும் சூரியன், பல வடிவங்களில் மேகங்கள் இப்படி இயற்கையை ரசித்து கொண்டே போய் பாருங்கள். உங்களை அறியாமலேயே உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் உருவாகும். அப்புறம் என்ன யாரும் ஜன்னல் சீட்டை விடுவோமா என்ன?

கேள்வி விடை

கேள்வி விடை

நாளைக்கு பரீட்சை இருக்கிறது. விழுந்து விழுந்து படிக்கிறீர்கள். அடுத்த நாள் பரிட்சை அறைக்கு செல்கிறீர்கள். கேள்வித் தாள் கொடுத்ததும் விறு விறுவென படிக்க ஆரம்பிப்பீர்கள் அல்லவா. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை நினைவு கூர்ந்து பார்க்கும் போது பதில்கள் தெரிந்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக மனதிற்குள் ஒரு சந்தோஷம் வந்து விடும். அப்பாடா படிச்ச கேள்வியா வந்து இருக்கு என்று நிம்மதி பெருமூச்சும் புன்னகையும் உதிர்க்க தவற மாட்டோம்.

MOST READ: சித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது?...

புத்தக வாசனை

புத்தக வாசனை

ஒரு புத்தக கடைக்கு செல்கிறீர்கள். பிடித்த புத்தகத்தை வாங்குகிறீர்கள். வந்ததும் எல்லாரும் படிக்கத் தான் ஆரம்பிப்போம். ஆனால் என்றைக்காவது அந்த புதிய புத்தகத்தை முகர்ந்து பார்த்தது உண்டா. புதிய புத்தக வாசனையை முகர்ந்து பாருங்கள். அந்த காகித ஈரப்பதத்தில் இருந்து வரும் வாசனை ஒரு புது சந்தோஷத்தை கொடுக்கும்.

இப்படி நம்மைச் சுற்றி தினமும் எவ்வளவோ சின்ன சின்ன சந்தோஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் நாம் தான் அதையெல்லாம் ரசிக்க கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறோம். சந்தோஷம் என்பது எதுவும் வெளியில் இல்லை. நீங்கள் நினைத்தால் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சந்தோஷம் அடையலாம் துக்கமும் அடையலாம். எனவே இனியாவது சந்தோஷமாக இருக்க முயற்சி பண்ணலாமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Little Things That Will Make You Happy, And No, It’s Not Sex

There are various things that can bring a smile on our face. It could be getting a tight hug from our bae (best friend ever) or having a warm cuddle. People say a key to a happy life is working with a reputed company that gives you a hefty pay, buying a house, a car, while for others, it can be their pet that makes them happy or simply a scoop of ice-cream.
Desktop Bottom Promotion