For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழக்கங்கள் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் தெரியுமா?

ஒருவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு பழக்கவழக்கங்கள் முக்கிய காரணம் ஆகும். அந்த பழக்கவழக்கங்களை ஒருவர் அறிந்து கொண்டால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்த்து, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

|

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக சிறுநீரகங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பெரிய பங்கு உள்ளது. ஏனெனில் சிறுநீரகங்கள் தான் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான நச்சு திரவங்களை வெளியேற்ற உதவுகின்றன. ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் உள்ள உப்புகள், நீர் மற்றும் தாதுக்கள் சமநிலையில் இருக்க வேண்டும். இவற்றை சமநிலையில் பராமரிக்கும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.

Lifestyle Habits That Are Hurting Your Kidneys Without Your Knowledge In Tamil

உடலில் இவை சமநிலையில் இல்லையென்றால், நியூரான்கள், தசைகள் மற்றும் பிற உடல் திசுக்கள் செயலிழக்க ஆரம்பித்து, இதன் விளைவாக சிறுநீரகங்கள் நல்ல வடிவத்தை இழக்க ஆரம்பித்துவிடும். ஒருவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு பழக்கவழக்கங்கள் முக்கிய காரணம் ஆகும். அந்த பழக்கவழக்கங்களை ஒருவர் அறிந்து கொண்டால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்த்து, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இப்போது ஒருவரது சிறுநீரகங்களை பாதிக்கும் பழக்கவழக்கங்கள் என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் குறைவான உணவுகளை உண்பது

வைட்டமின் குறைவான உணவுகளை உண்பது

குறிப்பிட்ட வைட்டமின்கள் சிறுநீரகங்களுக்கு நன்மை அளிக்கக்கூடியவை மற்றும் இவற்றில் குறைபாடு ஏற்படும் போது சிறுநீரகங்கள் சேதமடைகின்றன. இவற்றில் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு தான் சிறுநீரக நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பிற மருந்துகளுடன் வைட்டமின் பி6-ஐ எடுக்கும் போது, அவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன. உடலுக்கு வேண்டிய வைட்டமின் டி சத்தை தினமும் அதிகாலை சூரிய ஒளியில் 10-15 நிமிடம் இருப்பதன் மூலம் பெறலாம். வைட்டமின் பி6 சத்தானது சால்மன், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் பிற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் அல்லாத பழங்களில் அதிகம் உள்ளது.

வலி நிவாரணிகளை அதிகம் எடுப்பது

வலி நிவாரணிகளை அதிகம் எடுப்பது

தொடர்ச்சியாக தலைவலிக்கும் போது, அதில் இருந்து விடுபட வலி நிவாரண மாத்திரைகள் உதவி புரியும். ஆனால் இந்த மாத்திரைகளை தினமும் எடுத்தால், அது சிறுநீரகங்களை மோசமாக பாதிக்கும். வலி நிவாரண மாத்திரைகள் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கலாம். ஆனால் அவை சிறுநீரக புற்றுநோயைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

போதுமான நீர் அருந்தாமை

போதுமான நீர் அருந்தாமை

உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியம். நமது சிறுநீரகங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எப்போது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லையோ, அப்போது சிறுநீரக கற்கள் மற்றும் பிற சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. எனவே உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் 12 டம்ளர் நீரைக் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகள் நாவின் சுவை மொட்டுகளுக்கு நல்ல விருந்தளிக்கும் வகையில் இருக்கலாம். ஆனால் இந்த உணவுகள் சிறுநீரகங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது. இவை சிறுநீரக சேதத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.

போதுமான உடற்பயிற்சி செய்யாமை

போதுமான உடற்பயிற்சி செய்யாமை

வாரத்திற்கு குறைந்தது 3 முறை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனை உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்க உதவுகிறது. எனவே நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் 30 நிமிடம் என வாரத்திற்கு 5 நாட்கள் தவறாமல் உடற்பயிற்சியை செய்யுங்கள். இது உடலை, குறிப்பாக சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

அதிகப்படியான மது அருந்துவது

அதிகப்படியான மது அருந்துவது

உங்கள் மது அருந்தாமல் இருக்க முடியாது என்றால், உங்கள் சிறுநீரகங்களை மறந்துவிடுங்கள். ஒரு நாளைக்கு 4 பெக்கிற்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் வருவதற்கான அபாயம் இருமடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிகளவு உப்பு உண்பது

அதிகளவு உப்பு உண்பது

உப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, சிறுநீரகங்களில் சேதத்தை ஏற்படுத்தலாம். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைத்தால், உணவில் உப்பை அதிகம் சேர்க்காமல், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகம் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lifestyle Habits That Are Hurting Your Kidneys Without Your Knowledge In Tamil

Here are some lifestyle habits that are hurting your kidneys without your knowledge. Read on to know more...
Story first published: Saturday, June 25, 2022, 14:19 [IST]
Desktop Bottom Promotion