For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீ குடிக்க உங்களுக்கு பிடிக்குமா? இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க ரொம்ப புடிக்க ஆரம்பிச்சுரும்...!

நம்மில் பலருக்கு சூடான தேநீர் கோப்பையின்றி ஒரு நல்ல நாள் ஆரம்பம் முழுமையடையாது. இது எல்லையைத் தாண்டி விரும்பப்படும் ஒரு பானம் மற்றும் மக்களை இணைக்கும் ஒரு பானமாக இருக்கிறது.

|

நம்மில் பலருக்கு சூடான தேநீர் கோப்பையின்றி ஒரு நல்ல நாள் ஆரம்பம் முழுமையடையாது. இது எல்லையைத் தாண்டி விரும்பப்படும் ஒரு பானம் மற்றும் மக்களை இணைக்கும் ஒரு பானமாக இருக்கிறது. உற்சாகம் மட்டுமின்றி தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

Lesser Known Facts About Tea

தேநீர் பற்றி நமக்குத் தெரியாத பல உண்மைகள் உள்ளது, இது நிச்சயமாக சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த பானத்துடன் உங்கள் பிணைப்பை வலுப்படுத்தும். தேநீர் பற்றிய அந்த சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரவலாக உட்கொள்ளும் பானம்

பரவலாக உட்கொள்ளும் பானம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தேயிலை சங்கத்தின் கூற்றுப்படி, தண்ணீருக்குப் பிறகு, தேயிலை அதிக அளவில் உட்கொள்ளப்படும் பானமாகும். ஆய்வுகளின் படி, தேநீர் ஒரு ஆரோக்கியமான பானம், ஏனெனில் இது இருதய நோய்கள் (சிவிடி), சில வகையான புற்றுநோய், வகை 2 நீரிழிவு மற்றும் நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

எவ்வளவு டீ குடிப்பது நல்லது?

எவ்வளவு டீ குடிப்பது நல்லது?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு 2-3 கப் தேநீர் உட்கொள்ள வேண்டும், அது நல்ல ஆரோக்கியத்திற்கும் வயதான செயல்முறைக்கும் ஏற்றது. மேலும், ஒருவர் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதயத்திற்கு ஆரோக்கியமான பானம்

இதயத்திற்கு ஆரோக்கியமான பானம்

FDA படி, கருப்பு மற்றும் பச்சை தேநீர் இதயத்திற்கு ஆரோக்கியமானது. அவை இயற்கையான தாவர கலவைகள் நிறைந்தவை, அவை இதயத்திற்கு ஆரோக்கியமானவை என்று அறியப்படுகின்றன, மேலும் வழக்கமான தேநீர் குடிப்பவர்களுக்கு இதய நோய்களின் விகிதம் குறைவாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

MOST READ: இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய அந்த ஐந்து போர்கள் என்னென்ன தெரியுமா?

குறைந்த கலோரி பானம்

குறைந்த கலோரி பானம்

தேநீரின் காஃபின் உள்ளடக்கத்தைப் பற்றி கவனிக்கும்போது, அதில் மிகக் குறைந்த கலோரிகள் மற்றும் பூஜ்ஜிய சர்க்கரை உள்ளதை கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஆய்வுகளை பொறுத்தவரை, சர்க்கரை மற்றும் பால் இல்லாத 1 கப் கருப்பு தேநீரில் 3 கலோரிகள் மட்டுமே உள்ளன, அதே நேரத்தில் பால் மற்றும் சர்க்கரை இருக்கும் வழக்கமான கப் தேநீரில் 37 கலோரிகள் மட்டுமே உள்ளன.

டீ குடிக்க சிறந்த நேரம்

டீ குடிக்க சிறந்த நேரம்

காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதை பலரும் பின்பற்றுகையில், வல்லுநர்கள் டீ குடிக்க சரியான நேரம் காலை உணவுக்கு பின் என்று கூறுகிறார்கள், ஏனெனில் இது உங்களுக்கு அந்த நாளுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. காலை வேளையிலும், உணவுக்குப் பிறகும் ஆற்றல் அளவுகள் பெரும்பாலும் குறைவாக இருப்பதைக் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே காலை உணவுக்குப் பிறகு 20 நிமிடங்களுக்குப் பிறகு தேநீர் அருந்த சிறந்த நேரம் என்று கருதப்படுகிறது.

தண்ணீரைப் போல நீரேற்றம்

தண்ணீரைப் போல நீரேற்றம்

தேயிலை பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இது 99 சதவிகிதத்திற்கும் அதிகமான நீராகும், எனவே தேநீர் ஒரு நீரிழப்பு பானம் என்பது உண்மை என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்களோட பொறாமைக்கு அளவே இல்லையாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...!

ப்ரோக்கோலி மற்றும் திராட்சை போல ஆரோக்கியமானது

ப்ரோக்கோலி மற்றும் திராட்சை போல ஆரோக்கியமானது

இது பலருக்கு வினோதமாகத் தோன்றலாம், ஆனால் தேநீரில் ப்ரோக்கோலி போன்றவற்றில் இருப்பது போன்ற ஆரோக்கியமான கலவைகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்டிஏ நடத்திய ஒப்பீட்டு ஆய்வில் நாம் சென்றால், 1 கப் கருப்பு தேநீரில் 170 மில்லிகிராம் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அதே நேரத்தில் 1 கப் ப்ரோக்கோலியில் 3 மில்லிகிராம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Tea

Here is the list of lesser known facts about tea that may surprise you.
Desktop Bottom Promotion