For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பருப்பு வகைகளில் அசைவ உணவுகளை விட அதிகளவு புரோட்டின் இருக்காம்...வலிமையான உடலுக்கு இதுவே போதும்!

பருப்பு வகைகள் இந்தியாவின் முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்றாகும். இதை சாதம், ரொட்டி அல்லது சாம்பார் ஆகியவற்றுடன் இணைத்து சாப்பிடலாம்.

|

பருப்பு வகைகள் இந்தியாவின் முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்றாகும். இதை சாதம், ரொட்டி அல்லது சாம்பார் ஆகியவற்றுடன் இணைத்து சாப்பிடலாம். இதுமட்டுமின்றி, பல வகையான பருப்பு வகைகள் உள்ளன, எனவே நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிய ஒன்றை முயற்சி செய்யலாம். பருப்பில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் அன்றாட உணவில் சேர்க்க ஆரோக்கியமான உணவாக அமைகிறது.

Lentils That Contains the Highest Amount of Protein in Tamil

எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பருப்பு சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உணவில் பருப்பு உட்பட புரோட்டீன் நிறைந்திருப்பதால், நீண்ட நேரம் உங்களை முழுமையாக வைத்திருக்க முடியும். புரோட்டீன் நிறைந்த உணவுகள் தசைகளை வலுப்படுத்தவும், தசைகளை சரிசெய்யவும் உதவும். இங்கு 6 வகையான பருப்பில் நீங்கள் நினைப்பதை விட அதிக அளவு புரதம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு உளுந்து

கருப்பு உளுந்து

உளுத்தம்பருப்பு புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்த ஆதாரங்களில் ஒன்றாகும். குறைந்த கொழுப்பு மற்றும் கலோரி, இரும்பு, ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உளுந்தில் நிறைந்துள்ளது. உளுத்தம் பருப்பை தொடர்ந்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும். அரை கப் உளுந்தில் 12 கிராம் புரதம் உள்ளது.

சுண்டல்

சுண்டல்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சுண்டல் பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஒரு கப் சுண்டல் உங்களுக்கு போதுமான அளவு புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகிறது. சுண்டல் இதயத்திற்கும் நீரிழிவு நோய்க்கும் உகந்த பருப்பு. இது உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்குவதில் நன்மை பயக்கும் மற்றும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.

மசூர் பருப்பு(சிவப்பு பருப்பு)

மசூர் பருப்பு(சிவப்பு பருப்பு)

சிவப்பு பருப்பு அல்லது மசூர் பருப்பு பல வட இந்திய மாநிலங்களில் பிரதான உணவாகும். இது பொதுவாக அரிசியுடன் உட்கொள்ளப்படுகிறது அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டி பொருட்களாகவும் மாற்றப்படுகிறது. நீங்கள் மசூர் பருப்பை தோலுடன் அல்லது தோலில்லாமல் சாப்பிடலாம், இரண்டு வகையான பருப்புகளும் சுவையாக இருக்கும். மசூர் பருப்பில் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6, பி2, ஃபோலிக் அமிலம், கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை மிக அதிகமாக உள்ளது. அரை கப் மசூர் பருப்பு உங்களுக்கு சுமார் 9 கிராம் புரதத்தை கொடுக்கும்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பு

துவரம் பருப்பு என்பது இந்திய சமையலறையின் மற்றொரு பிரதான பருப்பு அல்லது பொதுவாக அரிசியுடன் இணைக்கப்படுகிறது. இந்த வகை பருப்பு புரதம் மற்றும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும். நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால், புரதச்சத்து அதிகரிக்கும். துவரம் பருப்பு நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு நல்லது. அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்ப காலத்தில் இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் பருப்பில் 22 கிராம் புரதம் உள்ளது.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு புரதம் மட்டுமல்ல, நார்ச்சத்தும் கொண்ட மற்றொரு சிறந்த புரோட்டின் மூலமாகும். புரோட்டின் மற்றும் நார்ச்சத்து இரண்டும் உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க முக்கியம். ஒரு கப் பருப்பில் 14 கிராம் புரதம் மற்றும் 15 கிராம் நார்ச்சத்து உள்ளது.

பச்சைப்பயிறு

பச்சைப்பயிறு

பச்சை பயறு, அடிப்படையில் மூங் டால் ஆகும், இது ஒரு பச்சை நிற தோலால் மூடப்பட்டுள்ளது. இந்த பருப்பு ஒவ்வொரு அரை கோப்பைக்கும் 9 கிராம் புரதத்தை வழங்குகிறது. பச்சை பயறு இரும்பின் சக்திவாய்ந்த ஆதாரமாகவும் உள்ளது, பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது இழக்கப்படும் அனைத்து இரும்புச்சத்துகளையும் ஈடுசெய்ய பச்சைப்பயிறை சாப்பிடலாம். இதில் வாழைப்பழத்தில் இருப்பதை விட அதிக பொட்டாசியம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lentils That Contains the Highest Amount of Protein in Tamil

Read to know which lentils contains the highest amount of protein.
Desktop Bottom Promotion