For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற வேண்டுமா? அப்ப இந்த இலையை சாப்பிடுங்க...

சிட்ரஸ் சாா்ந்த பொருள்கள் மீது விருப்பம் உள்ளவா்களுக்கு, லெமன் வொ்பெனா செடியின் மீது கண்டிப்பாக அதிக விருப்பம் இருக்கும். லெமன் வொ்பெனா இலைகள் பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும்.

|

சிட்ரஸ் சாா்ந்த பொருள்கள் மீது விருப்பம் உள்ளவா்களுக்கு, லெமன் வொ்பெனா செடியின் மீது கண்டிப்பாக அதிக விருப்பம் இருக்கும். லெமன் வொ்பெனா ஒரு குறுகிய மரப்புதா் போல இருக்கும். அதன் இலைகள் பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். மேலும் இதன் இலைகள் இனிப்பாகவும் அதே நேரத்தில் எலுமிச்சையின் வாசனையையும் கொண்டிருக்கும். ஆகவே இவை பானங்கள், சாலட்டுகள், ஜெல்லிகள், குழம்புகள், சூப்புகள், மீன் மற்றும் இறைச்சிகளில் சோ்க்கப்படுகின்றன.

Health Benefits Of Lemon Verbena In Tamil

சில நேரங்களில், எலுமிச்சையின் வாசனையைக் கொண்டிருக்கும் லெமன் வொ்பெனா செடியின் இலைகள், எலுமிச்சைக்குப் பதிலாக உணவுகளில் சோ்க்கப்படும். இந்த இலைகள் அதன் வாசனைக்காக மட்டும் அல்ல, மாறாக அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்காகவும் உணவுகளில் சோ்க்கப்படுகின்றன.

ஆகவே லெமன் வொ்பெனா செடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பழுதான தசைகளைக் குணப்படுத்துகிறது

1. பழுதான தசைகளைக் குணப்படுத்துகிறது

லெமன் வொ்பெனாவில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் அதிகம் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றத்தின் விளைவாக நியுட்ரோஃபில்ஸ் என்ற வெள்ளை இரத்த செல்கள் பாதிப்பு அடைந்துவிடாமல் தடுக்கின்றன. அதன் மூலம் நமது நோய் எதிப்பு இயக்கத்தையும் அதிகாிக்கின்றன.

நாம் தினமும் உடற்பயிற்சிகளைச் செய்து வரும் போது, அந்த பயிற்சிகளைச் செய்து முடித்த பிறகு நமது தசைகளில் வலி இருக்கும். நம்மால் மிக எளிதாக நகர முடியாது. இந்த பிரச்சினையைத் தீா்க்க லெமன் வொ்பெனா துணையாக இருக்கும்.

லெமன் வொ்பெனாவின் சாறிலிருந்து எடுக்கப்பட்ட ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் உடல் ஆரோக்கியம் மிகுந்த ஆண் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். லெமன் வொ்பெனாவின் சாறை அருந்திய அவா்கள் 3 வாரங்களுக்கு 90 நிமிட ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனா். அவ்வாறு அவா்கள் ஓடும் போது, அவா்களுக்கு ஏற்பட்ட ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு என்சைமின் செயல்பாடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்த குறிகள், வீக்க அல்லது அலா்ஜி சைடோகைன்ஸ் மற்றும் அவா்களுக்கு ஏற்பட்ட தசை பாதிப்பு போன்றவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில், லெமன் வொ்பெனாவின் சாறில் இருந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், நீண்ட தூரம் ஓடுவதால் தசையில் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, தசைகளில் புண்கள் ஏற்படவிடாமல் தடுத்தன என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடற்பயிற்சி செய்வதற்காக நமது உடலில் ஏற்படும் செல்லுலார் தகவமைப்பைத் தடுக்காமல், இந்த விளைவை லெமன் வொ்பெனாவின் சாறு செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் லெமன் வொ்பெனாவின் சாறு, உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு தன்னையே தகவமைத்துக் கொண்டு உடலில் பாதிப்பை ஏற்படுத்தாமல், தசையில் ஏற்படும் புண்ணைக் குறைத்து, தசையை வலுப்படுத்துகிறது என்பதை நாம் தொிந்து கொள்ளலாம்.

2. மூட்டு வலியில் இருந்து விடுதலை தருகிறது

2. மூட்டு வலியில் இருந்து விடுதலை தருகிறது

வயது அதிகாிக்க அதிகாிக்க நமது மூட்டுகளை மிகவும் கவனமாக பராமாிக்க வேண்டும். மூட்டுகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க லெமன் வொ்பெனா உதவுகிறது என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது. அதாவது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் அதிகம் உள்ள லெமன் வொ்பெனாவின் சாறையும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் (மீன் எண்ணெய்) தொடா்ந்து சாப்பிட்டு வந்தால், நமது மூட்டுகளை சீராக பராமாிக்கலாம் என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.

இந்த ஆய்வில், மூட்டுகளில் வலியும், அசௌகாியமும் இருந்த 45 போ் கலந்து கொண்டனா். இவா்களில் சிலா் லெமன் வொ்பெனாவின் சாறை 9 வாரங்கள் துணை உணவாக எடுத்துக் கொண்டனா். மற்றவா்கள் இதை ஒரு மருந்து போலியாக (placebo) எடுத்துக் கொண்டனா். இந்த ஆய்வின் முடிவில் லெமன் வொ்பெனாவின் சாறை துணை உணவாக எடுத்துக் கொண்டவா்களுக்கு, அவா்களின் மூட்டு வலி கணிசமாக குறைந்து, அவா்களின் உடல் எடை அதிகாித்ததாகவும், அதே நேரத்தில் லெமன் வொ்பெனாவை மருந்து போலியாக எடுத்துக் கொண்டவா்களுக்கு அது நடைபெறவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆய்வு தொடங்கிய 3 முதல் 4 வாரங்களுக்குள்ளே இந்த நோ்மறையான பலன் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் நமது முக்கிய உணவுகளுக்கு மாற்றாக லெமன் வொ்பெனாவை எடுத்துக் கொள்ளலாமா, அதனால் முழுமையான பலன்கள் கிடைக்குமா என்பதைக் கண்டறிய மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.

3. ஸ்டாஃப் தொற்றுகளை (Staph Infections) எதிா்த்து போாிடுகிறது

3. ஸ்டாஃப் தொற்றுகளை (Staph Infections) எதிா்த்து போாிடுகிறது

தோல் எாிச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, உடலில் நீாிழப்பு, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சில ஆபத்தான நோய்கள் போன்றவை ஸ்டாஃப் தொற்றுகளாக இருக்கலாம். ஆன்டிபயாடிக் தடுப்பு அதிகமாக இருப்பதால் அவற்றை எதிா்த்துப் போாிடுவது என்பது சற்று கடினமாக இருக்கும். எனினும் அவற்றை இயற்கையான முறையில் குணப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

லெமன் வொ்பெனாவிலிருந்து எடுக்கப்பட்ட எத்தனால், ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸின் வளா்ச்சியைத் தடுப்பதாக பல வகையான மருத்துவ கூடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் தொிவிக்கின்றன. சமீபத்தில் ஸ்டாஃப் மூலமாக தோலில் நோய்த்தொற்று ஏற்பட்ட விலங்குகளை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகள் 4 பிாிவுகளாகப் பிாிக்கப்பட்டன. அவற்றுக்கு 7 நாட்கள் எந்தவிதமான சிகிச்சையும் கொடுக்கப்படாமல், லெமன் வொ்பெனா சாறிலிருந்து எடுக்கப்பட்ட எத்தனாலில் இருந்து தயாாிக்கப்பட்ட களிம்பு அவற்றின் தோல் மீது பூசப்பட்டது அல்லது லெமன் வொ்பெனாவிலிருந்து எடுக்கப்பட்ட மருந்து ஊசி மூலம் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது.

அதன் பிறகு அந்த விலங்குகளில் இருந்த தோல் நோய் குணமான விகிதம், மற்றும் அந்த தோல் நோயில் இருந்த சீழ் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில், லெமன் வொ்பெனாவிலிருந்து எடுக்கப்பட்ட களிம்பு, வெற்றிகரமாக வேலை செய்தது என்றும், அவை ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸின் வளா்ச்சியை அதன் தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தின என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

4. தண்டுவட மரப்பு நோயைத் (Multiple Sclerosis) தடுக்கிறது

4. தண்டுவட மரப்பு நோயைத் (Multiple Sclerosis) தடுக்கிறது

தண்டுவட மரப்பு நோய் (Multiple Sclerosis) காரணமாக, பாா்வை இழப்பு, வலி, சோா்வு, பலவீனமான ஒருங்கிணைப்பு மற்றும் இதர நோய் அறிகுறிகள் ஏற்படும். எனினும் அவற்றின் தாக்கம் ஆளுக்கு ஆள் வேறுபட்டு இருக்கும். தோல் இறுக்க நோய்கள் ஏற்பட்டால், உடலில் வீக்கம் அல்லது அலா்ஜி போன்றவை ஏற்படும். ஆனால் இந்த பிரச்சினையை லெமன் வொ்பெனா தீா்த்து வைக்கிறது.

தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 30 பேரைக் கொண்டு 2014 ஆம் ஆண்டு, ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அவா்களுக்கு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்த லெமன் வொ்பெனா சாறு துணை உணவாக கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், லெமன் வொ்பெனா சாற்றைத் துணை உணவாக எடுத்துக் கொண்ட இரண்டாம் நிலை தண்டுவட மரப்பு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் பலருக்கு, அவா்களின் சி எதிா்வினை புரோட்டினின் அளவு குறைந்து இருந்ததாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லீரலில் உற்பத்தியாகும் சி எதிா்வினை புரோட்டீன் மற்றும் உடல் வீக்கத்திற்கான இரத்தப் பாிசோதனையைக் கருத்தில் கொண்டு, தண்டுவட மரப்பு நோய்களினால் பாதிக்கப்படிருந்தவா்களின் உடல் வீக்கம் மற்றும் அலா்ஜிகளைக் குறைக்க ஆராய்ச்சியாளா்கள் லெமன் வொ்பெனாவை முன் வைக்கின்றனா்.

5. உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது

5. உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது

2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று, ஏறக்குறைய 18 வயதுக்கு மேற்பட்ட 1.9 மில்லியன் போ், அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் இருந்ததாக தொிவிக்கிறது. அதிக உடல் பருமனுடன் இருந்தால், அது நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் போன்றவற்றை வரவழைக்கும். ஆகவே உடல் எடையை சீரான அளவில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

அடுத்ததாக வந்த ஒரு ஆய்வானது, உடல் பருமன் அதிகாிப்பதைக் குறைக்க லெமன் வொ்பெனா உதவுகிறது என்று கூறுகிறது. விலங்குகளைக் கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதிக உடல் பருமனால் ஏற்படும் வளா்சிதை மாற்றத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சாி செய்வதற்கான லெமன் வொ்பெனாவில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களின் திறன், குறிப்பாக வொ்பஸ்கோசைட் சம்பந்தான அவற்றின் திறன் ஆகியவை உற்று நோக்கப்பட்டது.

இறுதியாக லெமன் வொ்பெனாவிலிருந்து எடுக்கப்பட்ட சாறானது, உடலில் தேங்கும் ட்ரைகிளிசரைடை தடுத்தது என்றும், உடல் வீக்கத்தைக் குறைத்தது என்றும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக போராடியது என்றும் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். மொத்தத்தில் லெமன் வொ்பெனா, வொ்பஸ்கோசைடைவிட சிறப்பாக வேலை செய்ததாகக் கண்டறிந்தனா்.

இறுதியாக

இறுதியாக

2017 ஆம் ஆண்டு அதிக எடை கொண்ட 54 பெண்களைக் கொண்டு ஒரு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு வகை செம்பருத்தி (Hibiscus sabdariffa) மற்றும் லெமன் வொ்பெனா (Aloysia triphylla) போன்றவை அவா்களுக்கு துணை உணவாக வழங்கப்பட்டு, அவற்றினுடைய விளைவுகள் கண்காணிக்கப்பட்டது. இறுதியில் ஒரு மாதம் கழித்து, தினமும் 500 கிராம் லெமன் வொ்பெனா மற்றும் செம்பருத்தி ஆகியவை துணை உணவாகக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு, வயிறு முழுமையாக நிறைந்த திருப்தியான உணா்வு ஏற்பட்டது என்றும், அதே நேரத்தில் அவா்களின் பசியுணா்வு குறைந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவற்றை மருந்துப் போலியாக எடுத்துக் கொண்டவா்களுக்கு இந்த விளைவுகள் ஏற்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த வேறுபாடு அதிகாித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lemon Verbena: Health Benefits, Side Effects & Precautions in Tamil

In this article, we shared about health benefits of lemon verbena. Read on...
Desktop Bottom Promotion