Just In
- 3 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 15 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 18 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 18 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம்.. குடியுரசுத் தலைவர் ஒப்புதல்
- Automobiles
புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
- Movies
ரெண்டு பெக்குக்கு மேல முடியல பாஸ்... நம்ம கெப்பாசிட்டி அவ்ளோதான்... ஷாக் கொடுத்த ஹீரோயின்!
- Technology
செவ்வாய் கிரகத்தில் குடிநீர்! செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா!
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா?
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோவளம் கடற்கரையில் சுற்றும் போது, அங்குள்ள குப்பையைக் கண்டு அதை ஒரு பையில் சேகரித்தார். அந்த போட்டோ இணையதளத்தில் வைரலாக உலகம் முழுவதும் பரவியது. பிரதமர் மோடி 60 வயதை எட்டியப் பிறகும், அவர் ஒரு இளைஞனை விட பிட்டாக காட்சியளிக்கிறார். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சரி, மோடி அவர்கள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது கையில் ஒரு குச்சியை வைத்திருந்ததை பலரும் கவனித்திருப்பீர்கள். அது என்னவாக இருக்கும் என்றும் பலர் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். பலர் அது என்னவென்று மோடி அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த கேள்விக்கு பிரதமர் மோடி அவர்களே, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலையும் அளித்துவிட்டார்.

டிவிட்டர் பக்கத்தில் மோடியின் பதில்,
"கோவளம் கடற்கரையில் வாக்கிங் சென்ற போது, நான் கையில் வைத்திருந்த கருவி என்னவென்று பலர் என்னிடம் கேட்டார்கள். நான் கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர் கருவியாகும். அதை நான் அடிக்கடி பயன்படுத்துவேன். அதைப் பயன்படுத்துவது எனக்கு பிடிக்கும். அந்த கருவியைப் பயன்படுத்தும் போது மனம் அமைதியாக இருக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பிரதமர் மோடி பயன்படுத்தும் அக்குபிரஷர் ரோலர் மிகவும் பிரபலமாகியுள்ளது. மேலும் சமீப காலமாக மக்களுக்கு அக்குபிரஷர் சிகிச்சையின் மீது ஆர்வம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் இந்த சிகிச்சையின் மூலம் பில பிரச்சனைகளை சரிசெய்ய முடிகிறது.
உடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!

அக்குபிரஷர் ரோலர் என்றால் என்ன?
அக்குபிரஷர் என்பது ஒரு பழங்கால மசாஜ் தெரபி ஆகும். இந்த முறையில் உடலின் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அக்குபிரஷர் ரோலர் என்பது உடலில் உள்ள நரம்புகளைத் தூண்டிவிட மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு கருவியாகும். மேலும் இந்த கருவி மனம் மற்றும் உடல் தொடர்பான வியாதிகளை போக்க உதவுகிறது.
முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
அதுவும் நீங்கள் ரிஃப்ளெக்ஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, அவை செயல்படுத்தப்பட்டு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது, ஒரு நிம்மதியான உணர்வைப் பெறுவீர்கள். இப்போது அக்குபிரஷர் ரோலரால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

தசைகள் ரிலாக்ஸாகும்
அக்குபிரஷர் உடலில் உள்ள வலி மற்றும் டென்சனைக் குறைக்கும் அற்புதமான வழியாகும். இது பல்வேறு உறுப்புக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தத்தைக் குறைக்க உதவும். அக்குபிரஷர் ரோலரை ஒருவர் கையில் எப்போதும் வைத்திருந்தால், எப்போதெல்லாம் டென்சனாக உணர்கிறீர்களோ, அப்போது இதைக் கொண்டு கைகளில் அழுத்தம் கொடுங்கள்.

இரத்த சர்க்கரை சீராகும்
அக்குபிரஷர் ரோலர் உடலில் இரத்த க்ளுக்கோஸ் அளவை சமநிலையில் பராமரிக்க உதவும். நமது பாதங்களில் உள்ள சில அழுத்தப் புள்ளிகள், கணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே பாதங்களில் அக்குபிரஷர் ரோலர் கொண்டு அழுத்தம் கொடுக்கும் போது, இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படும்.
விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...

செரிமான ஆரோக்கியம்
அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், அக்குபிரஷர் ரோலர் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளைச் செயல்படச் செய்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஒருவர் தொடர்ந்து அக்குபிரஷர் ரோலரைப் பயன்படுத்தினால், வயிற்றில் உள்ள தொற்றுக்கள் எளிதில் மற்றும் விரைவில் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்
அக்குபிரஷர் மன அழுத்தம் மற்றும் டென்சன் என அனைத்தில் இருந்தும் விடுவித்து, நல்ல ரிலாக்ஸான மனநிலையைத் தரும். ஒருவர் ரிலாக்ஸாக இருந்தால், இரவில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். அக்குபிரஷர் ரோலர் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் சீராக்கும். தினமும் அக்குபிரஷர் ரோலரைப் பயன்படுத்தினால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.