For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க உதவும் சமையலறை ரகசியங்கள அறிவீர்களா?

மந்தநிலையை அகற்ற ஒவ்வொரு நாளும் தினையை எந்த வடிவத்திலும் மக்கள் சாப்பிட வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்யும் மக்கள் நாள் முழுவதும் உற்சாகமாக உணர தினமும் இதை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்.

|

நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை விரும்புகிறோம். தற்போதைய சூழ்நிலையில், கோவிட்-19 இன் இரண்டாவது அலை மிக வேகமாகவும் அதிக வீரியத்துடனும் இந்தியாவில் பரவி வருகிறது. மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நேரத்தில், உங்கள் உடல்நலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

kitchen secrets for good health and immunity

இதைக் கருத்தில் கொண்டு, நல்ல ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் சில எளிய சமையலறை ரகசியங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம். நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சிறிய பழக்கங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள்

இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள்

ஆய்வின்படி, ஒருவர் சமையலறையில் பித்தளை மற்றும் இரும்பு கதாய், தவா மற்றும் கர்ச்சி ஆகியவற்றில் சமைப்பதால், அது நமக்கு நல்ல ஆற்றலை தருகிறது. எச்.பி. இரும்பு பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவு சத்தானதாகவும், நோய்களை திறம்பட எதிர்த்துப் போராடவும் உதவும் என்று கூறப்படுகிறது.

MOST READ: நீங்க எதிர்பார்ப்பதை விட வேகமாக எடையை குறைக்க இதில் ஒன்றை தூங்க செல்வதற்கு முன் சாப்பிடவும்...!

உலர் திராட்சையை கொண்டு தயாரிக்கப்படும் தயிர்

உலர் திராட்சையை கொண்டு தயாரிக்கப்படும் தயிர்

தயிரை உங்கள் உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிருடன், உலர் திராட்சையும் ஒன்றாக இணைத்து உணவாக உட்கொள்ளலாம். ஏனெனில், இவை இரண்டும் ஒன்றாக இணையும்போது புரோபயாடிக்குகளின் சரியான சேர்க்கையை உருவாக்குகின்றன.

கரும்பு சாறு

கரும்பு சாறு

கோடைகாலத்தில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மதியத்திற்கு முன் கரும்பு சாறு குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நெய்யின் பயன்பாடு

நெய்யின் பயன்பாடு

ஒவ்வொரு உணவிலும் நெய் சேர்த்து சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கமாக இருக்கும்போது, படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரவில் காலில் நெய்யைப் பயன்படுத்துவது ஒரு நல்ல பழக்கமாக கூறப்படுகிறது. ஏனெனில், இது நிம்மதியான தூக்கத்திற்கு உதவுகிறது. அடுத்த நாள் காலையில் நீங்கள் புதிதாக எழுந்திருந்து வேலைகளை உற்சாகமாக தொடங்கலாம்.

MOST READ: நீங்க எதிர்பார்ப்பதை விட வேகமாக எடையை குறைக்க இதில் ஒன்றை தூங்க செல்வதற்கு முன் சாப்பிடவும்...!

உப்பு பயன்பாடு

உப்பு பயன்பாடு

நாம் அனைவரும் நம் அன்றாட வாழ்க்கையில் உப்பை பயன்படுத்துகிறோம். ஒரு வகையான உப்பைப் பயன்படுத்தும்போது, வாழ்க்கையில் உப்பு பன்முகத்தன்மையை மீண்டும் கொண்டுவர மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார். ஒருவர் குறைந்தது 4 வகையான உப்புகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும், இதனால் உடல் அதன் ஒரு வடிவத்துடன் பழகாது.

தினைகளின் பயன்பாடு

தினைகளின் பயன்பாடு

மந்தநிலையை அகற்ற ஒவ்வொரு நாளும் தினையை எந்த வடிவத்திலும் மக்கள் சாப்பிட வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்யும் மக்கள் நாள் முழுவதும் உற்சாகமாக உணர தினமும் இதை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்.

பருப்பு வகைகளின் பயன்பாடு

பருப்பு வகைகளின் பயன்பாடு

பருப்பு வகைகளைப் பொருத்தவரை, அவை அன்றாட உணவில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். மேலும் சமையலுக்கு மட்டுமால்லாமல் பருப்பை ஊறவைத்து முளைக்கட்டிய பயிராகவும் சாப்பிடலாம். அவை சரியான விகிதத்தில் தானியங்கள் மற்றும் தினை கலக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 வகையான பருப்பு வகைகளை 5 வெவ்வேறு வழிகளில் உட்கொள்ள வேண்டும்.

MOST READ: சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?

குல்கந்தின் பயன்பாடு

குல்கந்தின் பயன்பாடு

கோடைகாலத்தில், வெப்பத்தை வெல்ல, ஒருவர் வீட்டில் தயாரிக்கும் குல்கண்டை உட்கொண்டு பால், தண்ணீர் அல்லது புதிய பான் இலையுடன் சாப்பிட வேண்டும்.

கதி ரெசிபி சாப்பிடுங்கள்

கதி ரெசிபி சாப்பிடுங்கள்

செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க, வாரத்திற்கு ஒரு முறை கதி ரெசிபி சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இது வயிற்றை சுத்தமாகவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

kitchen secrets for good health and immunity

Here we are talking about the kitchen secrets for good health and immunity.
Story first published: Wednesday, April 28, 2021, 13:02 [IST]
Desktop Bottom Promotion