For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கலைப் போக்கி குடல்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஜூஸ்கள்!

மலச்சிக்கல் பிரச்சனையை சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், அது பைல்ஸ் போன்ற தீவிர நோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

|

உலகில் ஏராளமான மக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். இந்த மலச்சிக்கலை பெரும்பாலானோர் புறக்கணிக்கிறார்கள். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனையை சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், அது பைல்ஸ் போன்ற தீவிர நோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாமல், எத்தனை நாட்களாக மலம் கழிக்காமல் இருக்கிறீர்களோ, அந்த அளவு வலியை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் மலச்சிக்கல் வயிறு அல்லது குடல் புற்றுநோயையும் உண்டாக்கலாம்.

Juices That Helps To Clean Intestines And Cure Constipation In Tamil

மலச்சிக்கலுக்கு என்ன தான் தீர்வு? மலச்சிக்கலைப் போக்க பல்வேறு மருந்துகள் கடைகளில் விற்கப்பட்டு வந்தாலும், பல இயற்கை வைத்தியங்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்குவதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதுவும் மலச்சிக்கலால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது. மலச்சிக்கல் ஏற்படக்கூடாது என்றால் அதிக நீரைப் பருக வேண்டும். மேலும் பல்வேறு பழச்சாறுகளும் மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவி புரியும். அதுவும் சில பழச்சாறுகள் மலச்சிக்கலில் இருந்து உடனடியாக விடுதலை அளிப்பதோடு, குடல்களை சுத்தமாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்போது அந்த பழச்சாறுகளைப் பற்றி தான் காணப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ்

நற்பதமான ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. ஆப்பிள் ஜூஸை குடிப்பதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதற்காக ஆப்பிள் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடிக்காமல், மிதமான அளவில் குடிக்க வேண்டும்.

பேரிக்காய் ஜூஸ்

பேரிக்காய் ஜூஸ்

பேரிக்காய் ஜூஸில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பேரிக்காய் ஜூஸ் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பேரிக்காய் ஜூஸ் மிகச்சிறந்த தீர்வளிக்கும். வேண்டுமானால் பேரிக்காய் ஜூஸில் சுவைக்காக சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். இது அந்த ஜூஸின் சுவையை மேம்படுத்தும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸில் வைட்டமின் சி உள்ளது. எலுமிச்சை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. முக்கியமாக இந்த ஜூஸ் மலச்சிக்கல் பிரச்சனையைக் குறைக்கும். அதற்கு 1 கப் சுடுநீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

ப்ளம்ஸ் ஜூஸ்

ப்ளம்ஸ் ஜூஸ்

ப்ளம்ஸ் ஜூஸில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த ஜூஸ் செரிமானத்தை ஊக்குவித்து, அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உலர்ந்த கொடிமுந்திரிகளை உட்கொள்வது நல்லது. மேலும் இந்த ஜூஸ் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

வெல்ல நீர்

வெல்ல நீர்

ஜூஸ்களைத் தவிர, ஒருசில இயற்கை பானங்களும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிப்பதோடு, குடல்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அந்த பானங்களுள் ஒன்று தான் வெல்ல நீர். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் வெல்லத்தில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் குடலியக்கத்தை மென்மையாக்கி, காலையில் எழுந்ததும் எளிதில் மலத்தை வெளியேற்றச் செய்கிறது.

பேக்கிங் சோடா நீர்

பேக்கிங் சோடா நீர்

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் பேக்கிங் சோடா நீர் நல்ல தீர்வை வழங்கக்கூடியது. அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும். இது வாய்வு தொல்லை மற்றும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன், மலத்தை மென்மையாக்கி, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ்கள் மற்றும் பானங்கள் மலச்சிக்கலில் இருந்து விடுவிடுப்பதோடு, குடல்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. எனவே அன்றாடம் இவற்றில் ஒன்றை உங்கள் உணவில் சேர்த்து குடல் ஆரோக்கியத்தை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Juices That Helps To Clean Intestines And Cure Constipation In Tamil

Here are some juices to prevent constipation and make intestines clean and strong. Read on to know more...
Story first published: Friday, August 12, 2022, 12:23 [IST]
Desktop Bottom Promotion