For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொசு கடித்த இடத்தை சொரிவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

உண்மைதான் நமைச்சல் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட காரணங்களுக்காக நமைச்சல் எடுக்கும்போது அந்த இடத்தில் சொறிவது அதன் பாதிப்பை அதிகரிக்கும்.

|

நமைச்சல் அல்லது எரிப்பு ஏற்படுத்துவது உங்களுக்குள் பல வினோதமான மாற்றங்களை உண்டாக்கும். நமைச்சல் ஏற்படும்போது அந்த இடத்தில் நன்கு சொறிந்தால்தான் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் அது எந்த வகையான நமைச்சல் என்பதை பொறுத்தது. ஏனெனில் சில நமைச்சலுக்கு கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதுதான் நல்லது.

Itches You Should Never Scratch

உண்மைதான் நமைச்சல் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட காரணங்களுக்காக நமைச்சல் எடுக்கும்போது அந்த இடத்தில் சொறிவது அதன் பாதிப்பை அதிகரிக்கும். இந்த பதிவில் எந்தெந்த நமைச்சலுக்கு சொறிவது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலர்ந்த சருமம்

உலர்ந்த சருமம்

உங்கள் சருமத்தின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கில் ஏற்படும் பாதிப்புதான் அரிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் ஆகும். உங்கள் சருமத்தில் இருக்கும் செராமைடு உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து அதனை உலர்வதிலிருந்து தடுக்கிறது. வறண்ட சருமத்தின் மீது அரிப்பு ஏற்படும் போது சொறிவது தற்காலிக மனநிறைவை கொடுக்கலாம் ஆனால் இது உங்கள் சருமத்தின் பாதுகாப்பு படலத்தின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உங்கள் சருமம் அதிக தொற்றுநோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

பூச்சிக் கடிகள்

பூச்சிக் கடிகள்

கொசு உங்களை கடிக்கும் போது உங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் அதனை முன்கூட்டியே உணர்ந்து ஹிஸ்டமைனை சுரந்து அதன்மீது தாக்குதலை நடத்துகிறது. இதனால்தான் அரிப்பு ஏற்படுகிறது. தீ நெருப்பு எறும்புகள் உங்களை கடிக்கும் போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளிப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த இடத்தில் தேய்க்கும்போது அது மற்ற இடங்களுக்கும் பரவும். இதனால் கொப்புளங்கள், வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

MOST READ:சிறுநீரக கற்களில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது அவை எப்படி உருவாகிறது தெரியுமா?

 பாதி குணமடைந்த காயங்கள்

பாதி குணமடைந்த காயங்கள்

வெட்டுக் காயங்கள் மற்றும் அடிபட்ட காயங்கள் குணமடையும் போது அந்த இடத்தைச் சுற்றி அதிகளவு அரிப்பு ஏற்படும். இது அழற்சியின் பிரதிபலிப்பாகும். நீங்கள் சருமத்தை சொறியும் போது நரம்புகளையும் சேதப்படுத்துகிறீர்கள், காயங்கள் குணமடைய முயற்சிக்கும் போது அதனை சுற்றி அரிப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில் குணமடையும் பகுதியை சுற்றி இருக்கும் சருமத்தை நீங்கள் சேதப்படுத்தும்போது அது குணமடைவற்கான காலத்தை நீங்கள் அதிகரிக்கிறீர்கள் அல்லது காயத்தை மேலும் மோசமாக்குகிறீர்கள்.

வேனிற்கட்டி

வேனிற்கட்டி

வெயில் தாங்காமல் சருமத்தின் மேற்பகுதியில் சிதைவு ஏற்படுவது வேனிற்கட்டி என்று அழைக்கப்படும். இது மிகவும் அரிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். மற்ற காயங்களைக் காட்டிலும் இந்த சூரிய ஒளி காயங்கள் உங்கள் உடலின் அழற்சி தன்மையை அதிகரிக்கும். இதனால் நரம்புகள் முழுவதும் துண்டிக்கப்படவில்லை என்றாலும் அவை சிதைக்கப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் அதன் மீது சொறியும் போது அது காயத்தை பெரிதாக்குவதுடன் அரிப்பையும் அதிகரிக்கும்.

எக்சிமா

எக்சிமா

இந்த பாதிப்பு ஏற்பட்டால் சருமம் வறண்டு போவதுடன், கடினமாகவும், வீங்கியும் காணப்படும். நமது சருமத்தின் பாதுகாப்பு வலயம் சரியாக செயல்படாத போது இந்த பிரச்சினை உருவாகிறது. நாம் அணியும் உடை, சுற்றுசூழலில் இருக்கும் மாசு போன்ற எதுவும் இந்த பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம். இதனால் அரிப்பு ஏற்படும் போது அமைதியாக இருப்பது கடினம்தான் ஆனால் அவ்வாறு இருப்பதுதான் இதனை விரைவில் குணப்படுத்துவதற்கான விரைவான வழி ஆகும். இதனை தொடர்ந்து சொரியும் போது அது லிச்சென் சிம்ப்ளக்ஸ் க்ரோனிகஸ் என்ற மோசமான நிலையை அடைய வாய்ப்புள்ளது.

MOST READ:இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டதும் காதலில் விழுந்து விடுவார்களாம் தெரியுமா?

பொடுகு

பொடுகு

பொடுகு உங்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கலாம், நமது உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது நமக்கு பைத்தியம் பிடிக்க வைக்கும். மருத்துவரீதியாக பார்க்கும் போது பொடுகு என்பது மலாசீசியா என்ற பூஞ்சையால் ஏற்படும் நிலையை குறிக்கிறது. இது அனைவரின் உச்சந்தலையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். பொடுகு தொல்லை அதிகமாக இருப்பவர்களுக்கு மலாசீசியா எரிச்சல் மற்றும் அதிகப்படியான தோல்-செல் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனை அதிகமாக சொறிவது இதன் தாக்கத்தை அதிகரிப்பதுடன் இது பரவவும் காரணமாக அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Itches You Should Never Scratch

An itch can drive you absolutely crazy, but there are times when scratching only makes it worse.
Desktop Bottom Promotion