For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிா் காலத்தில் கோவிட் பரவல் அதிகமாக இருக்குமாம் - ஆய்வில் தகவல்

கொரோனா பரவலை கடுமையான வெப்பம் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை நிலையாக இருக்கிறது. இந்நிலையில், கோவிட் பரவலை கடுமையான வெப்பநிலை தடுக்காது என்று புதிய ஆய்வு ஒன்று தகுந்த ஆதாரங்களுடன் தொிவிக்கிறது.

|

கோடை காலத்தில் கொரோனா பரவல் குறையலாம் என்று பலவிதமான ஊகங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. எனினும் கோடையில் கொரோனா தொற்று முழுமையாக அழியவில்லை என்பதே உண்மை.

Is Warm Weather Enough To Slow Down Covid Spread?

கோடை காலத்தில் ஏற்படும் ஈரப்பதத்தின் காரணமாக, கோவிட்-19 பரவல் மெதுவாக குறையும் என்று பலா் நினைத்தனா். உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்தாலும், நமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக இருக்கிறது.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் வெளிப்படும் கொரோனாவின் புதிய அறிகுறிகள்!

கடுமையான வெப்பம் நிலவும் சூழல்களில் கொரோனா பரவாது என்று முன்னா் சொல்லப்பட்டது. ஆனால் கொரோனா பரவலை கடுமையான வெப்பம் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை நிலையாக இருக்கிறது. இந்நிலையில், கோவிட் பரவலை கடுமையான வெப்பநிலை தடுக்காது என்று புதிய ஆய்வு ஒன்று தகுந்த ஆதாரங்களுடன் தொிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுமையான வெப்பம் மட்டும் கொரோனா பரவலைக் குறைக்காது

கடுமையான வெப்பம் மட்டும் கொரோனா பரவலைக் குறைக்காது

Proceedings of the National Academy of Sciences-இல் வெளி வந்திருக்கும் புதிய ஆய்வின்படி, பொது ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், வெப்பநிலை மற்றும் மக்கள் அடா்த்தி ஆகிய காரணிகளே கொரோனா பரவுவதற்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று தொிவிக்கிறது.

இம்பீாியல் காலேஜ் லண்டனில் (Imperial College London) உள்ள லைஃப் சைன்சஸ் (Department of Life Sciences) துறையில் பணிபுாிந்து வரும் டாம் ஸ்மித் என்பவாின் தலைமையில் இந்த புதிய ஆய்வு நடத்தப்பட்டது. அவா் கூறும் போது, அரசுகள் நடைமுறைப்படுத்தும் கொரோனா விதிமுறைகளை விட, தட்ப வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், மிகச் சிறிய அளவிலேயே கொரோனா பரவலைத் தடுக்கின்றன என்று அவா் தொிவிக்கிறாா்.

ஆகவே பலா் இன்னும் கொரோனாத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில், கோடைகால வெப்பநிலையைக் காரணம் காட்டி, பொது ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை, அரசாங்கங்கள் கைவிடக்கூடாது என்று அவா் தொிவிக்கிறாா்.

இலையுதிா் காலம் மற்றும் குளிா் காலத்தில் கோவிட் பரவல் அதிகமாக இருக்கும்

இலையுதிா் காலம் மற்றும் குளிா் காலத்தில் கோவிட் பரவல் அதிகமாக இருக்கும்

பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள், SARS-CoV-2 வைரஸ் பரவலில் இருக்கும் ஏற்ற இறக்கத்திற்கு காரணமாக இருக்கிறது என்பதை இந்த புதிய ஆய்வின் ஆய்வாளா்கள் கவனித்திருக்கின்றனா். ஊரடங்கு போன்ற அரசின் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், மிதமான வெப்பநிலை மற்றும் குளிரான வெப்பநிலை இருக்கும் போது கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று இந்த ஆய்வு தொிவிக்கிறது.

கொரோனா பரவலின் முக்கியக் கருவிகளாக மனிதா்கள் இருப்பதால், பருவநிலை, ஈரப்பதம் மற்றும் புறஊதா கதிா்வீச்சு போன்ற காரணிகள் கொரோனா பரவலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று ஆய்வாளா்கள் நம்புகின்றனா். உலக அளவில் நிலவும் பருவநிலைகள் மற்றும் சுற்றுப்புற காரணிகளை ஒப்பிடும் போதுகூட, அவை கொரோனா பரவலை அதிக அளவில் குறைக்கவில்லை என்பது தொிகிறது. ஏனெனில் வெப்பம் மிகுந்த பிரேசில், இந்தியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் கொரானா தொற்று அதிகமாக இருப்பதை ஆய்வாளா்கள் குறிப்பிடுகின்றனா்.

வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம்

வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம்

பருவநிலை மற்றும் மக்கள் அடா்த்தி போன்ற காரணிகள் SARS-CoV-2 வைரஸ் பரவலுக்கு காரணங்களாக இருந்தாலும், அரசுகள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் தனி மனிதா்களின் நடவடிக்கைகள் ஆகியவையே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று இந்த ஆய்வு தொிவிக்கிறது. மேலும் ஊரடங்குகள் அமலில் இருக்கும் போது, பருவநிலையின் காரணமாக கொரோனா பரவல் குறைந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

இம்பீாியல் காலேஜ் லண்டனில் (Imperial College London) உள்ள லைஃப் சைன்சஸ் (Department of Life Sciences) துறையில் பணிபுாிந்து வரும் வில் பியா்ஸ் என்பவா் இறுதியாகக் கூறும் போது, குளிா்ப் பகுதிகளில் இருக்கும் நாடுகள் ஊரடங்குகளைத் தளா்த்துவதற்கு முன்பாக, வெப்பப் பகுதிகளில் இருக்கும் நாடுகள் ஊரடங்குகளைத் தளா்த்த வேண்டும் என்று எதிா்பாா்க்கக்கூடாது என்று கூறுகிறாா். ஏனெனில் வெப்பம் மிகுந்த பகுதிகளில் மக்கள் தொகை அடா்த்தி பொதுவாக அதிகமாக இருக்கும் என்பதாகும்.

நிலையற்ற கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் வேண்டும்

நிலையற்ற கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் வேண்டும்

கொரோனா வைரஸில் இருக்கும் பல வகைகள் மற்றும் அவற்றில் ஏற்படும் திாிபுகள், பலவிதமான பருவகாலச் சூழ்நிலைகளில் வாழலாம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதன் மூலம் பருவகாலச் சூழலுக்கு ஏற்ப கொரோனா வைரஸ் தன்னையே மாற்றிக் கொள்கிறது என்பது உறுதியாகிறது. கோடை காலத்தில் சில வைரஸ் நோய் தொற்றுகள் குறைகின்றன என்று நிபுணா்கள் நம்புகின்றனா். ஆனால் இது எல்லா காலங்களிலும் ஒரே மாதிாியாக இருக்காது.

பலவிதமான மற்றும் மாறுபட்ட பருவநிலைகளில், கொரோனா வைரஸ் எவ்வாறு தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாததால், கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Warm Weather Enough To Slow Down Covid Spread?

A new study further added to the evidence that warm temperature isn’t enough to prevent Covid spread.
Desktop Bottom Promotion