For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உப்பை இப்படி சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்குமாம்..இனிமே இப்படி சாப்பிடாதீங்க!

எந்த பொருளாக இருந்தாலும் அதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது ஆபத்தானதாக மாறும். இந்த விதி உப்பிற்கு மிகவும் பொருந்தும்.

|

எந்த பொருளாக இருந்தாலும் அதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது ஆபத்தானதாக மாறும். இந்த விதி உப்பிற்கு மிகவும் பொருந்தும். உப்பு அல்லது பொதுவான சமையல் உப்பு என்பது முதன்மையாக சோடியம் குளோரைடு கொண்ட ஒரு கனிமமாகும். உணவு மற்றும் ஆரோக்கிய உலகில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

Is Uncooked Salt Harmful for the Human Body in Tamil

உப்பு சரியான அளவில் உட்கொள்ள வேண்டிய ஒரு மூலப்பொருளாகும். அதில் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது கொஞ்சம் குறைவாகவோ இருந்தால், அது கற்பனைக்கு அப்பாற்பட்ட விதத்தில் மனித உடலை உண்மையில் பாதிக்கும். உப்பைப் பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமைக்கப்படாத உப்பின் பக்க விளைவுகள்

சமைக்கப்படாத உப்பின் பக்க விளைவுகள்

உப்பை அதிகமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், வயிற்று புற்றுநோய், உடல் பருமன் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சமைக்காத உப்பை அதிகமாக உட்கொள்வது இதயப் பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இது இரத்த ஓட்ட அமைப்பு மற்றும் நரம்பு மண்டலம் ஆகிய இரண்டிற்கும் மோசமானது.

சமைத்த உணவில் உப்பு தூவுவது ஏன் மோசமானது?

சமைத்த உணவில் உப்பு தூவுவது ஏன் மோசமானது?

சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்சினைகளை மட்டுமே வரவழைக்கிறது என்று நம்பப்படுகிறது. உப்பு சமைக்கப்படும் போது, இரும்பு அமைப்பு எளிமைப்படுத்தப்பட்டு, குடல் அதனை உறிஞ்சுவதற்கு எளிதாகிறது. சமைக்கப்படாத உப்பைப் பொறுத்தவரை, இரும்பு அமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும் மற்றும் உடலில் அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

MOST READ: இதில் ஒரு விஷயம் உங்களிடம் இருந்தாலும் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ரொம்ப அதிகமாம்... உஷார்!

உப்புக் குறைவாக சாப்பிடுவதும் ஆபத்தானதா?

உப்புக் குறைவாக சாப்பிடுவதும் ஆபத்தானதா?

ஆம், அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர் டென்ஷனை ஏற்படுத்தும் விதம், அதே போல், உடலில் உப்பு பற்றாக்குறை மரண அபாயத்திற்கு வழிவகுக்கும். ஒரு ஆய்வின்படி, தேவையானதை விட குறைந்த அளவு உப்பை உண்பவர்களில் இருதய செயலிழப்பு மற்றும் மற்ற காரணங்களால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

ஒருவர் எவ்வளவு உப்பு உட்கொள்ள வேண்டும்?

ஒருவர் எவ்வளவு உப்பு உட்கொள்ள வேண்டும்?

சுகாதார நிபுணர்கள் மற்றும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி உப்பை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, 10 கிராம் உப்பு, அதாவது 4000 மில்லிகிராம் சோடியம் ஒரு பெரியவர் ஒரு நாளைக்கு உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ½ டீஸ்பூன் உப்புக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

தாகத்தைக் குறைத்து பசியை அதிகரிக்கும்

தாகத்தைக் குறைத்து பசியை அதிகரிக்கும்

ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, அதிகப்படியான உப்பு கொண்ட உணவு தாகத்தை குறைக்கிறது மற்றும் பசியை அதிகரிக்கிறது. சொல்லப்போனால் அதிகப்படியான உப்பு சாத்தியமான எல்லா வழிகளிலும் தீங்கு விளைவிக்கும்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க மாதிரி நேர்மையா காதலிக்க யாராலும் முடியாதாம்... உங்க காதலரோட ராசி என்ன?

மாற்றுவழி உண்டா?

மாற்றுவழி உண்டா?

உங்கள் உணவில் கூடுதல் உப்பு இருந்தால், செந்தா நமக் அல்லது கல் உப்புக்கு மாறவும், அது பதப்படுத்தப்படாமல் இருப்பதால், சாதாரண வெள்ளை உப்பை விட இது ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Uncooked Salt Harmful for the Human Body in Tamil

Read to know whether uncooked salt is harmful to the human body.
Story first published: Tuesday, March 22, 2022, 17:37 [IST]
Desktop Bottom Promotion