Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கொரோனா வைரஸ் காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா? பாதுகாப்பாக உடலுறவு கொள்வது எப்படி?
கொரோனா எப்படி பரவும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அரசாங்கம் தெளிவாக கூறினாலும் மக்களின் அச்சம் தீர்ந்தபாடில்லை.
இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை என்றால் அது கொரோனா வைரஸ்தான். அனைத்து உலக நாடுகளின் செயல்பாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொரோனா வைரஸ் நேரடியாகவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல, இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கொரோனா எப்படி பரவும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அரசாங்கம் தெளிவாக கூறினாலும் மக்களின் அச்சம் தீர்ந்தபாடில்லை. இது செய்தால் கொரோனா வந்துவிடுமோ? அது செய்தால் கொரோனா வந்து விடுமோ? என்று மக்கள் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பரவும் இந்த காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? உடலுறவு மூலம் கொரோனா பரவுமா? என்று பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளது. அதற்கான பதில்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

காதலியுடன் வெளியே செல்லலாமா?
கொரோனா குறித்த எச்சரிக்கைகள் அனைவரும் அறிந்ததுதான். கிட்டதட்ட ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது போல அனைத்து பொது இடங்களும் காலியாகத்தான் உள்ளது. இந்த சூழ்நிலையில் உங்கள் துணையுடன் வெளியே செல்வது உங்களுக்கு நல்லதல்ல. ஏனெனில் உங்கள் இருவருக்கும் நோய்த்தொற்று இலையென்றாலும் வெளியே செல்லுமிடத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இருவருக்குமே வைரஸ் தொற்று இல்லாத பட்சத்தில் உங்கள் ரொமான்ஸை வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.

முத்தம் கொடுக்கலாமா?
நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின் படி முத்தமிடுவது நிச்சயமாக கொரோனா தொற்றை ஏற்படுத்தும். ஆனால் உங்கள் இருவருக்கும் தொற்று இல்லாதது உறுதியாக இருந்தால் நீங்கள் தாராளமாக முத்தமிடலாம். இருவரில் ஒருவருக்கு கொரோனாவின் அறிகுறி இருந்தாலும் முத்தமிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக புதிதாக சந்திப்பவர்களை முத்தமிடுவதே என்பது அறவே கூடாது.

உடலுறவு கொள்ளலாமா?
கொரோனா வைரஸ் பாலியல் உறவு மூலம் பரவாது. இதனைப் பற்றி உலக சுகாதர நிறுவனம் முழுமையான அறிக்கை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இதுவரை கண்டறிந்தவரை நேருக்கு நேர் பார்த்து பேசுவது மூலமும், தொடுவது மூலமும்தான் கொரோனா பரவுகிறது, உடலுறவு மூலமாக அல்ல. ஆனால் பேசாமலோ அல்லது தொடாமலோ உடலுறவு கொள்வது என்பது சாத்தியமானதல்ல. உங்கள் கணவன் அல்லது மனைவிக்கு நோய்த்தொற்று இல்லையென்றால் தாரளமாக உடலுறவு கொள்ளலாம். நோய் அறிகுறிகள் இருப்பின் தொடுவதை கூட தவிர்க்கவும். புதிதாக அறிமுகமானவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்.

சுயஇன்பம் செய்யலாமா?
பாலியல் செயல்பாடுகள் மூலம் கொரோனா பரவாது என்பதுதான் இதுவரை கண்டறியப்பட்டது. இதனால் உங்கள் சுயஇன்ப வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் தேவையில்லை. ஆனால் உங்கள் கைகளை தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொள்வதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.

பிறப்புறுப்பில் சானிடைசர் பயன்படுத்தலாமா?
இந்த தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி, நீங்கள் சானிடைசர்களை பயன்படுத்தி கைகளை கழுவும்போது அது உங்கள் கைகள் வழக்கத்தை விட உலர்வாக இருப்பதை உணரலாம். இது பிறப்புறுகளுக்கும் பொருந்தும், ஏனெனில் சானிடைசரின் முதல் மூலப்பொருளே ஐசோபிரைல் ஆல்கஹால் ஆகும். இது பிறப்புறுப்பு பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல. இது எரிச்சல் மற்றும் நமைச்சலை ஏற்படுத்தும். பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள மென்மையான வாசனை இல்லாத சோப்புகளை பயன்படுத்தவும்.



Click it and Unblock the Notifications