Just In
- 8 hrs ago
ஹை பிபி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 9 hrs ago
உங்க கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பிபியை குறைக்க இந்த 3 பொருட்கள் கலந்த பானத்தை குடிச்சா போதுமாம்!
- 9 hrs ago
இந்த பொருட்களை எவ்வளவு வருஷம் வேணாலும் வைத்து சாப்பிடலாமாம் கெட்டேப்போகாதாம் தெரியுமா?
- 10 hrs ago
Karandi omelette : கரண்டி ஆம்லெட்
Don't Miss
- News
வெளியே போயிடுங்க.! இல்லைனா சாக ரெடியா இருங்க..! காஷ்மீர் பண்டிட்களுக்கு லஷ்கர் இ இஸ்லாம் மிரட்டல்..!
- Finance
இளம் வயதில் வீடு வாங்குவது ஸ்மார்ட்டான முடிவு.. ஏன் தெரியுமா?
- Movies
அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் !
- Sports
ரன் ஓடும் போது நிகழ்ந்த காமெடி.. ஒரே இடத்தில் 2 பேட்ஸ்மேன்.. டெல்லி வைத்த டிவிஸ்ட்.. ரசிகர்கள் கலகல
- Technology
சரியான வாய்ப்பு., ரூ.2000 தள்ளுபடி- ரூ.4,499-க்கு ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கலாம்: இதோ வழிமுறைகள்!
- Automobiles
இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'இந்த' நாளில் நீங்க முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?
மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவு முட்டை. வேகவைத்த முட்டை, முட்டை பொரியல், ஆம்லெட், முட்டை குழம்பு போன்ற வெவ்வேறு வகைகளில் முட்டைகளை எடுத்துக்கொள்ளலாம். முட்டை உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவற்றை தயாரிப்பது மிகவும் எளிதானது. இது காலை உணவு அல்லது விரைவான உணவுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. முட்டைகள் அவற்றின் புரத உள்ளடக்கம் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றவை. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் உணவில் முட்டைகளைச் சேர்ப்பது அவசியம். முட்டை உங்களை நிறைவாக உணர வைக்கும்.
உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் முட்டையை மாதவிடாய் காலத்தில் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் ஒரு முட்டை பிரியராக இருந்து, மாதவிடாய் காலத்தில் முட்டைகளை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கவலை இருந்தால், அவற்றை பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.

உணவில் கவனம் வேண்டும்
மாதவிடாய் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் ஒரு முக்கியமான கால கட்டமாகும். ஏனெனில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பிடிப்புகள், முதுகுவலி, மனநிலை மாற்றங்கள், முகப்பரு, குமட்டல் மற்றும் பிற ஒத்த நிலைமைகளை அனுபவிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், சில உணவுகள் பிடிப்புகளை மோசமாக்கும். நீங்கள் சமாளிக்க கடினமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் முட்டை
அதிர்ஷ்டவசமாக முட்டைகள் அந்த வகையில் வராது. மாதவிடாய் காலத்தில் முட்டைகளை உட்கொள்ள முடியாது என்பது கட்டுக்கதை. பி6, டி மற்றும் ஈ போன்ற வைட்டமின்களின் களஞ்சியமாக முட்டைகள் உள்ளன. இவை அனைத்தும் பிஎம்எஸ் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? முட்டைகள் புரதத்தின் வளமான மூலமாகும். மேலும் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.

முட்டையின் நன்மைகள்
முட்டைகள் பாஸ்பரஸ் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். இது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. முட்டையில் துத்தநாகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஒரு முட்டையில் 125.5 மில்லிகிராம் கோலின் உள்ளது. இது உங்கள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

இதய நோய் அபாயத்தை குறைக்கும்
முட்டை உங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அல்லது HDL அளவையும் மேம்படுத்தும். முட்டை கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்பது கட்டுக்கதை. மிதமான அளவில் முட்டைகளை தவறாமல் உட்கொள்வது, உண்மையில் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

புற்றுநோய் அபாயம் குறைகிறது
மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் முட்டைகள் உதவும். ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆறு முட்டைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு, குறைவான முட்டைகளை உண்ணும் பெண்களை விட, மார்பக புற்றுநோயின் அபாயம் 44% குறைகிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

முட்டை அடிப்படையிலான உணவுகள்
வேகவைத்த முட்டை, சன்னி-சைட் அப் மற்றும் ஆம்லெட்டுகள் ஆகியவை முட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பொதுவான உணவுகளில் சில. நீங்கள் ரொட்டி மற்றும் முட்டைகளைப் பயன்படுத்தி ஒரு முட்டை சாண்ட்விச் அல்லது பிரஞ்சு டோஸ்ட்டையும் செய்யலாம். முட்டைக் கறி, முட்டை புர்ஜி, முட்டை பிரியாணி, முட்டை தட்கா, மிளகாய் முட்டை போன்ற முக்கிய உணவுகளும் முட்டையைக் கொண்டு செய்யப்படும் ரெசிபிகளாகும். பலர் முட்டை பராத்தா, தங்கள் சூப்கள், நூடுல்ஸ் மற்றும் ஃபிரைடு ரைஸில் கூட முட்டைகளை சேர்க்கிறார்கள்.

முட்டை அல்வா
குறிப்பாக முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் அல்வா உள்ளது தெரியுமா? ஆம், அண்டா கா அல்வாவாகத் தோன்றலாம். ஆனால் இது ஒரு சூப்பர் ருசியான இனிப்பாகும். இது கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முட்டை பிரியர் என்றால், இந்த குளிர்கால சிறப்பு முட்டை ஹல்வா ரெசிபியை உடனே முயற்சி செய்ய வேண்டும்.