For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவில் நெய் சேர்ப்பது உங்க உடல் எடையை அதிகரிச்சி இதய நோய் அபாயத்தை அதிகரிக்குமா?

நெய் ஆரோக்கியமானது. இது அடிப்படையில் நபருக்கு நபர் வேறுபடுகிறது. நெய் சாப்பிடுபவர்கள் உடல்நிலை மற்றும் அவர்கள் உணவில் சேர்க்கும் நெய்யின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது ஆரோக்கியமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் இருக்கும்.

|

இந்திய பராம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய உணவுப் பொருள் நெய். நெய் என்பது தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் வகையாகும், இது பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரிய உணவுகளை தயாரிக்க பரவலாக இது பயன்படுத்தப்படுகிறது. ஹல்வா, பருப்பு, சப்பாத்தி, தோசை மற்றும் சாதம் என எதுவாக இருந்தாலும், உணவில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சேர்ப்பது முழு உணவின் சுவையையும் அதிகரிக்கிறது. இது பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நெய், ஆயுர்வேத மருத்துவத்தில், குறிப்பாக குணப்படுத்தும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

Is ghee bad for heart health and weight loss? know in tamil

மற்றொரு உண்மை என்னவென்றால், நெய்யில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கும் எடை இழப்புக்கும் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. எனவே, நீங்கள் நெய் சாப்பிட வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா? என்பதை பற்றி இக்கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெய் ஆரோக்கியமானதா?

நெய் ஆரோக்கியமானதா?

பல நூற்றாண்டுகளாக இந்திய சமையல் முறைகளில் நெய் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அனைத்து வகையான உணவுகளையும் தயாரிக்க இதைப் பயன்படுத்தினார்கள். அதனால், நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இந்த உண்மையின் அடிப்படையில், நெய் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதை உணவில் சேர்ப்பது சருமத்தை மேம்படுத்தி, சூடாக இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

ஊட்டச்சத்துகள்

ஊட்டச்சத்துகள்

வைட்டமின் ஈ, ஏ, சி, டி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நெய் ஆரோக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு ஒரு சிலருக்கு தொந்தரவாக இருக்கும்.

நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து இதய பிரச்சனைகள் வருமா?

நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து இதய பிரச்சனைகள் வருமா?

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்வது உங்கள் தமனிகளில் கொலஸ்ட்ராலை உருவாக்குவதன் மூலம் இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும். நிறைவுற்ற கொழுப்புகள் உங்கள் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பை அதிகரிக்கின்றன. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். சில ஆய்வுகளின்படி, குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, அதே சமயம் நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் கொழுப்பின் அளவை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பு

நெய்யில் பெரும்பாலும் நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன. உடல் செயல்பாடுகள் ஏதுமில்லாமல், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உட்கொண்டால், உடலில் இன்சுலின் அளவு அதிகமாகி, உங்கள் உடல் தொடர்ந்து கொழுப்பை சேமிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தாராளமாக நிறைவுற்ற கொழுப்பை சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. சிலருக்கு இது எடை அதிகரிப்பதற்கும் பங்களிக்கும் வழிவகுக்கும்.

நெய் யாருக்கு நல்லது?

நெய் யாருக்கு நல்லது?

செறிவூட்டப்பட்ட கொழுப்பிற்கு மரபியல் சகிப்புத்தன்மை காரணமாக எடை அதிகரிப்பு ஏற்படலாம். நிறைவுற்ற கொழுப்பு அதிக ஆற்றல் கொண்ட கலோரி-அடர்த்தியான கொழுப்பாக இருப்பதால் சுறுசுறுப்பான மனிதனுக்கு சிறந்தது. அதாவது, வளர்சிதை மாற்றத்தில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்பவர்களுக்கு நெய் நல்லது.

 நெய்யை யார் தவிர்க்க வேண்டும்?

நெய்யை யார் தவிர்க்க வேண்டும்?

நெய் ஆரோக்கியமானது. இது அடிப்படையில் நபருக்கு நபர் வேறுபடுகிறது. நெய் சாப்பிடுபவர்கள் உடல்நிலை மற்றும் அவர்கள் உணவில் சேர்க்கும் நெய்யின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது ஆரோக்கியமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் இருக்கும். ஒரு நபர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தால், நல்ல வளர்சிதை மாற்றத்தைக் கொண்டிருந்தால், அதிக கொழுப்பு அளவு இல்லாமல் ஆரோக்கியமான எடையுடன் இருந்தால், உணவில் நெய் சேர்ப்பது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இல்லையெனில் அவர்கள் வேறு மாற்று வழிகளைத் தேட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is ghee bad for heart health and weight loss? know in tamil

Here we are talking about the adding ghee to your diet bad for heart health and weight loss?
Story first published: Monday, November 29, 2021, 12:02 [IST]
Desktop Bottom Promotion