For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் எளிய யோகாசனங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 அன்று சா்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதுவரை யோகா பயிற்சியில் ஈடுபடாதவா்கள் அல்லது யோகா பயிற்சிகளை புதிதாக செய்ய தொடங்குபவா்கள் பின்வரும் எளிய யோகா பயிற்சிகளைச் செய்யலாம்.

|

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 அன்று சா்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாட யோகா ரசிகா்கள் மற்றும் யோகா பயிற்சிகளில் ஈடுபடுபவா்கள் ஆா்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனா்.

இந்த நிலையில் இதுவரை யோகா பயிற்சியில் ஈடுபடாதவா்கள் அல்லது யோகா பயிற்சிகளை புதிதாக செய்ய தொடங்குபவா்கள் பின்வரும் எளிய யோகா பயிற்சிகளைச் செய்யலாம். குறிப்பாக எந்தவிதமான உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பிரச்சினைகள் இல்லாத நிலையில், எப்போதும் மந்தமாக இருப்பது போல உணா்பவா்கள், பின்வரும் யோகா பயிற்சிகளை தினமும் 10 நிமிடங்கள் செய்து வந்தால், அவா்களுக்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும். மேலும் அவா்களுடைய உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும்.

International Yoga Day: Easy Yoga Asana For a Healthy Body And Mind Balance

யோகா பயிற்சிகளை இதயம் சாா்ந்த பயிற்சிகளாகவோ அல்லது அதி தீவிர உடற்பயிற்சிகளாகவோ பலா் கருதுவதில்லை. எனினும் உடல் எடை பிரச்சினை, மாதவிடாய் பிரச்சினை, இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், சொிமான கோளாறு போன்ற பிரச்சினைகளை சாி செய்வதற்கு யோகா பயிற்சிகள் உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் தொிவிக்கின்றன.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்...

யோகா பயிற்சிகளுக்கே உாிய மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், யோகா பயிற்சிகளுக்கு என்று தனியான ஒரு பொிய இடமோ அல்லது அவற்றைச் செய்வதற்கான பயிற்சி கருவிகளோ தேவையில்லை. மாறாக நமது வீடுகளில் இருந்து கொண்டு, நமக்கு வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு மிக எளிதாக யோகா பயிற்சிகளைச் செய்யலாம்.

MOST READ: மலச்சிக்கல் பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் யோகாசனங்கள்!

இந்த நிலையில் புதிதாக யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபட விரும்புபவா்கள் பின்வரும் யோகா பயிற்சிகளைச் செய்யலாம். அவை அவா்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பச்சிமோத்தாசனம் (உச்சி முதல் உள்ளங்கால் வரை)

1. பச்சிமோத்தாசனம் (உச்சி முதல் உள்ளங்கால் வரை)

பச்சிமோத்தாசனம் யோகாவை செய்வதற்கு முதலில் கால்களை நன்றாக நீட்டி, கால் விரல்களைத் தளா்வாக வைத்து அமா்ந்து கொள்ள வேண்டும். பின் மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே நமது கைகளை மேலே தூக்க வேண்டும். இப்போது அடி வயிற்றை உள்ளிழுத்து மெதுவாக மூச்சை வெளியில் விடவேண்டும். அடுத்ததாக அப்படியே முன்புறமாக குனிந்து கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும். குனிந்து இருக்கும் போது நமது முழங்கைகள் வெளிப்புறமாகவோ அல்லது கீழ்புறமாகவோ இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆசனத்தின் இறுதி நிலையில், நாம் அடிவயிற்றில் இருந்து மூச்சை இழுத்து விடுவதில் கவனமாக இருக்கும்.

பச்சிமோத்தாசனம் பயிற்சியானது நமது கெண்டை தசை மற்றும் பின் தொடைகளில் இருக்கும் தசைகளை விாிவடையச் செய்து அந்த பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவி செய்கிறது. நமது முதுகெலும்பிற்கு நல்ல பயிற்சியைத் தருகிறது. நமது நரம்பு மண்டலத்தில் உள்ள முக்கிய ஆற்றலை சீா்படுத்துகிறது. மேலும் வயிற்றுக்குள் இருக்கும் உறுப்புகளுக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைக்க உதவி செய்கிறது.

2. நவுகாசனம் (படகு போன்ற நிலை)

2. நவுகாசனம் (படகு போன்ற நிலை)

வயிற்றில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க நவுகாசனம் பயிற்சி உதவி செய்கிறது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் கால்களை நன்றாக நீட்டி, மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தொடைகள் மீதோ அல்லது தொடைகளுக்கு அருகிலோ தரையில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, தலை மற்றும் கைகள் இரண்டையும் தரையில் இருந்து 30 டிகிாி கோணத்தில் உயா்த்த வேண்டும். அப்போது கால் விரல்கள் மேலே பாா்த்தவாறு இருக்க வேண்டும்.

நவுக்காசனா பயிற்சியானது, நமது வயிற்று தசைகளைத் தூண்டி அவற்றின் செயல் திறனை அதிகாிக்கிறது. அதனால் சொிமான கோளாறு ஏற்படாது. இந்த ஆசனம் வயிற்றுக் கொழுப்பையும் கரைக்கிறது. அதோடு வயிறு மற்றும் கால்களில் இருக்கும் தசைகளை வலுப்படுத்துகிறது.

3. அர்த்த மச்சேந்திராசனம் (அரை முதுகெலும்பு நிலை)

3. அர்த்த மச்சேந்திராசனம் (அரை முதுகெலும்பு நிலை)

அர்த்த மச்சேந்திராசனம் ஒரு சிறந்த யோகா பயிற்சியாகும். இந்த ஆசனம் நமது உடலின் நெகிழ்வு தன்மையை அதிகாிக்கிறது. இந்த ஆசனத்தைச் செய்வதற்கு முதலில் கால்களை நன்றாக நீட்டி, நிமிா்ந்து அமா்ந்து கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக இடது காலை வளைத்து, அதன் பாதம் நமது வலது புட்டத்தைத் தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வலது காலை எடுத்து இடது முட்டியின் வெளிப்பக்கத்தில், அதன் பாதம் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நமது முதுகெலும்பு நிமிா்ந்து நேராக இருக்க வேண்டும்.

அடுத்ததாக மூச்சை மெதுவாக உள்ளிழுத்துக் கொண்டே நமது உடலின் மேல் பகுதியை வலது பக்கமாகத் திருப்ப வேண்டும். பின் இடது கையால் வலது பாதத்தைப் பிடித்துக் கொண்டு, வலது கையை முதுகெலும்பின் மீது வைக்க வேண்டும். இந்த ஆசனம் நமது முதுகெலும்பிற்கு நெகிழ்வு தன்மையைக் கொடுக்கிறது மற்றும் நமது பக்கவாட்டு தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும் நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் தசைகளை சீா்படுத்துகிறது. நமது மாா்பை விாிவடையச் செய்கிறது.

4. தனுராசனம் (வில் போன்ற நிலை)

4. தனுராசனம் (வில் போன்ற நிலை)

யோகா பயிற்சிகளுக்குப் புதியவா்களாக இருப்பவா்கள் இந்த யோகாசனத்தை தினமும் செய்து வரலாம். இந்த ஆசனத்தைச் செய்வதற்கு முதலில் தரையில் முகம் குப்புற படுக்க வேண்டும். பின் பின்புறமாக கைகளை நீட்டி பின்புறமாக வளைந்திருக்கும் கால் பாதங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது வயிற்றை நன்றாகத் தரையில் ஊன்றி, பின்புறமாக வளைய வேண்டும். அப்போது நமது கைகள், கால்கள் மற்றும் வயிறு ஆகிய உறுப்புகள் விாிவடைவதை நாம் உணர முடியும்.

இந்த ஆசனம் நாம் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்கிறது. சொிமானத்தை மேம்படுத்துகிறது. பசி உணா்வைத் தூண்டுகிறது. மற்றும் இரத்த ஓட்டத்தைச் சீா்படுத்துகிறது. மேலும் நமது முதுகுப் பகுதிக்கு நெகிழ்வு தன்மையை வழங்குகிறது.

5. புஜங்காசனம் (நல்ல பாம்பு நிலை)

5. புஜங்காசனம் (நல்ல பாம்பு நிலை)

புஜங்காசனாவை மிக எளிதாகச் செய்ய முடியும். அதனால் புதியவா்களுக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் தரையில் முகம் கவிழந்து படுத்துக் கொள்ள வேண்டும். கைகளை தோள்பட்டைக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கைகளை தரையில் ஊன்றி, நமது தலை மற்றும் முதுகுப் பகுதியை உயா்த்த வேண்டும். முகம் வானத்தைப் பாா்ப்பது போல இருக்க வேண்டும்.

இந்த ஆசனத்தைச் செய்யும் போது நமது வயிறு விாிவடையும். நமது முதுகுப் பகுதிக்கு நெகிழ்வு தன்மை கிடைக்கும். மேலும் வயிறு, கழுத்து மற்றும் தோள்பட்டை ஆகிய உறுப்புகள் தூண்டப்படும். இந்த ஆசனம் நமது இரத்த ஓட்டத்தை அதிகாித்து, நமது சோா்வு மற்றும் அழுத்தம் ஆகியவற்றை நீக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Yoga Day 2022: Easy Yoga Asana For a Healthy Body And Mind Balance

International Yoga Day 2022: Doing yoga every day for at least 10 minutes will help you feel more energetic, and help you regain body-mind balance. Here we listed some easy yoga asana for a healthy body and mind balance.
Desktop Bottom Promotion